ஸ்ரீபாஷ்யத்தின் சில துளிகள்
உபநிஷத்துக்கள் நல்ல ஞானத்தைப் போதிக்கும். நல்ல ஞானத்தால் மட்டும் 'மோட்சம்' என்று சொன்னவர் அல்ல இராமானுஜர்.
ஞானம் கனிந்த நலம். ஞானமே முதிர்ந்து பக்தியாகிறது அல்ல. காயைப் போல ஞானம். பழத்தினைப் போல பக்தி. அந்த பக்தியினால் தான் மோட்சம் என்கிறார் இராமானுஜர்.
வெறும் ஞானத்தினால் மட்டும் மோட்சத்திற்கு செல்லமுடியுமா? பெருமாளுடைய திருவடிகளில் நினைந்த அன்பு நமக்கு வேண்டுமல்லவா! அந்த பகீரத ஞானத்தினால் தான் மோட்சம் என்று சாதிக்கிறார் இராமானுஜர். இதனைத் தான் ஸ்ரீபாஷ்யம் முதலான கிரந்தங்களில் தெரிவிக்கிறார் சுவாமி.
நிறைந்த சாத்திரம் கொண்டது "ஸ்ரீபாஷ்யம்" என்ற கிரந்தம். அதிலே நான்கு அத்தியாயங்கள். 16 பாபங்கள். 156 அதிகாரங்கள். 545 சூத்திரங்கள். இது பிரம்மசூத்திரத்திற்கு பாஷ்யமாக இருந்தது.
இந்த ஸ்ரீபாஷ்யத்தில் தன்னுடைய கருத்துக்கள் அத்தனையையும் வெளியிட்டார் சுவாமி இராமானுஜர்.
ஸ்ரீபாஸ்யத்தில், இது தான் சாஸ்திரம் சொல்கிறது. சகட்டுமேனிக்கு எதனையும் சொல்லக் கூடாது. வேதத்தினை ஒப்புக்கொண்டு தவறான அர்த்தம் சொல்லக்கூடாது என்கிறார் சுவாமி.
இராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்திற்கு முதலில் உரை எழுதும் பொழுது, நான் ஒன்றும் வேதத்திற்குப் புறம்பாக எழுதவில்லை. பூர்வாச்சாரியார்கள் எல்லோரும் நன்றாக பிரம்ம சூத்திரத்திற்கு அர்த்தம் சொல்லி வைத்து விட்டார்கள். நான் என்ன செய்ய போகிறேன் தெரியுமா? அந்த பூர்வாச்சாரியார்கள் வகுத்துக் கொடுத்த பாதையிலே அவர்கள் சொன்ன செய்தி மாறாமல் அர்த்தத்தினை விளக்கமாகச் சொல்லப் போகிறேன். அதுதான் நான் செய்யப்போகிறேனே தவிர, இதற்கு புது விளக்கமே தேவைப்படாது.
என் அடியார்கள் ஆயிரம் - இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகும் பொழுது, புத்தி குறைந்து விட்டது. பழைய அர்த்தம் புரியுமா, புரியாதா? என்பது தெரியாது. ஆகையாலே, ஒரு குழந்தைக்கு எந்த இடத்தில் இருந்து, எப்படி உணவூட்ட வேண்டும் என்பது தாய்க்குத்தானே தெரியும். அந்த தாய் ஸ்தானத்தில் இருந்து தான் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கவுரை சாதித்தார். இப்படித் ஸ்ரீபாஷ்யம் சாதித்தார் சுவாமி இராமானுஜர்.
இந்த ஸ்ரீபாஷ்யத்திலே "ஞானம் கனிந்த நலம் - உயர்வற உயர் நலம் உடையவன், மயர்வர மதிநலம் அருளினன்". நம்மாழ்வார் மதிநலம் என்று சாதித்தார். மதி என்றால் ஞானம். நலம் என்றால் பக்தி. ஞானமே முதிர்ந்து முதிர்ந்துதான் பக்தியாகும். அந்த பக்திரூபத்தினால் தான் மோட்சம். அதையே தான் வேதாந்த சாஸ்திரமும் சொல்லியது.