ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம்

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.

செல்வம் வேண்டி பூஜை செய்யும் போது மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.

இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும்.

இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.

ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!

அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.


இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று, ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்:

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:

ஓம், ஏம், ஐம், க்லாம்; க்லீம், க்லூம்; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,
ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ
 
Back
Top