ஶ்ரீ திருமங்கையாழ்வார் மாசதிருநக்ஷத்ர&#2

praveen

Life is a dream
Staff member
ஶ்ரீ திருமங்கையாழ்வார் மாசதிருநக்ஷத்ர&#2

ஶ்ரீ திருமங்கையாழ்வார் மாசதிருநக்ஷத்ரம். ஆவணி - திருக்கார்த்திகை. ஶ்ரீ குமுதவல்லிநாச்சியாரோடும், தனது நித்ய ஆராதனப் பெருமாளான ஶ்ரீ சிந்தனைக்கினியானோடும், அடியார்களைக் கடாக்ஷிக்கும் ஶ்ரீ திருமங்கையாழ்வாரின் இன்றைய திவ்யதரிசனம். திருநகரி.


நன்னெஞ்சே ! நம்பெருமான் நாளும்
இனிது அமரும்
அன்னம் சேர் கானல் அணி ஆலி
கை தொழுது,
முன்னம் சேர் வல்வினைகள் போக
முகில்வண்ணன்
பொன்னம் சேர் சேவடி மேல், போது
அணியப் பெற்றோமே.


ஶ்ரீ திருமங்கையாழ்வார். பெரிய திருமொழி. 11.3.9.


ஶ்ரீ திருமங்கையாழ்வார் வாழித்திருநாமம்.


கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை
வந்தோன் வாழியே.
காசினியிற் குறையலூர்க் காவலோன்
வாழியே.
நலந்திகழ் ஆயிரத்து எண்பத்து நாலு
உரைத்தான் வாழியே.
நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான்
வாழியே.
இலங்கெழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான்
வாழியே.
இம்மூன்றில் இருநூற்று இருபத்தேழு ஈந்தான்
வாழியே.
வலந்திகழும் குமுதவல்லி மணவாளன்
வாழியே.
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன்
வாழியே.


ஶ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
 
Back
Top