விவசாயியின் சூப்பர் சாதனை!

Status
Not open for further replies.
விவசாயியின் சூப்பர் சாதனை!

விவசாயியின் சூப்பர் சாதனை!

28-6-2015

திருப்பதி: தெலுங்கானா மாநிலத்தில், ஒரு விவசாயி, சைக்கிள் கலப்பையை கண்டுபிடித்துள்ளார்.



Tamil_News_large_1284613.jpg



தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர், புக்கியாசந்து, 30. அவர், அங்கு விவசாயம் செய்து வருகிறார். சமீபத்தில், தன் நிலத்தில் பருத்தியை விதைத்தார். அப்போது, அவருக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது.

தன்னிடமிருந்த பழைய சைக்கிளின் பின்புறம் உள்ள சக்கரம், பெடெல் மற்றும் சீட்டை அகற்றினார்.பின், சைக்கிள் செயினில், கலப்பையை பொருத்தி, அதை ஓட்டிப் பார்த்தார். சைக்கிள் கலப்பை நன்றாக வேலை செய்தது. புக்கியா, அதில் மேலும் சில மாறுதல்களை செய்தார். மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை, அதில் பொருத்தி, மறுபடியும் சோதனை செய்தார். அதுவும் நன்றாக வேலை செய்தது.

உடனே, அதே மாடலில், இன்னொரு பழைய சைக்கிளையும் தயார் செய்து, மனைவிக்கு அளித்தார். தற்போது, கணவன், மனைவி இருவரும் சைக்கிள் கலப்பையை பயன்படுத்தி, சிரமப்
படாமல் நிலத்தில், வேலை செய்கின்றனர். இதைப் பார்த்த, கிராம மக்கள், அவரை பாராட்டினர். ஒரு சைக்கிளை, இது போல் மாற்றி வடிவமைக்க, புக்கியாவிற்கு 300 ரூபாய் மட்டுமே செலவானது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1284613
 
Status
Not open for further replies.
Back
Top