விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: கோர்ட்டு

vembuv

Active member
விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: கோர்ட்டு

சென்னை: 'விரும்பிய இடத்தை தேர்வு செய்து, போராட்டத்தில் ஈடுபட, யாருக்கும் உரிமையில்லை; அனுமதியின்றி போராட்டம் நடக்காதபடி, போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, திருப்பூரில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் தொடர் போராட்டத்தை தடுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கோபிநாத் என்பவர், மனு தாக்கல் செய்தார். கேள்விபோராட்டத்தால், பள்ளி குழந்தைகள், பொது மக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது.மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் வாதாடியதாவது:குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக, எதிர்ப்பாக என, சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது, ௨௦ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசை பொறுத்தவரை, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் வாதாடினார்.அப்போது, வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதால் மட்டும், பிரச்னை தீர்ந்து விடுமா; அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை, அந்த பகுதியில் இருந்து ஏன் அகற்றக் கூடாது என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

…………………………………

…………………………………

பெரிய வித்தியாசம்போராட்டம் நடத்துவதற்கான உரிமைக்கும், பொது மக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமிப்பதற்கும், பெரிய வித்தியாசம் உள்ளது. அவர்களாகவே ஒரு இடத்தை தேர்வு செய்து, போராட்டங்களில் ஈடுபட யாருக்கும் உரிமை இல்லை.

மேலும் படிக்க
 
Back
Top