• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

விரஜ ஹோமம் - Viraja Homam

Status
Not open for further replies.
விரஜ ஹோமம்
(This excerpts taken from the Tamil book titled "VEDAMUM PANPAADUM" authored by Sarma Sastrigal and released by Pujya Sri Jayendra Saraswati Swamigal at Chennai recently.) This book has such FAQs in hundreds.

கேள்வி :

விபூதி எவ்வாறு தயாரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி தயவுகூர்ந்து விளக்க முடியுமா?

பதில் :
நிச்சயமாக. சுத்தமான பசுஞ்சாணத்தைக் கொண்டு விபூதி தயாரிப்பதற்காக விரஜ ஹோமம் செய்யப்படுகிறது. பொதுவாக இது ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி தினத்தன்று செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தின் போது மஹா நாராயணோபஷித்திலிருந்து சில பகுதிகள் ஜபிக்கப்பட்டு அது தொடர்பாக கூறப்பட்டுள்ள பிரயோகங்கள் செய்யப்படுகிறது. இந்த மந்த்ரங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாகும். நமது ஆத்ம விசாரம், ஆத்ம வித்யா மற்றம் பிரம்ம ஞானத்திற்கான பிரார்த்தனைகள் இதில் உள்ளன. இந்த ஹோமம் சன்யாச தீ¬க்ஷ ஸ்வீகரணத்திற்கான கர்மாக்களிலும் உபயோகப்படுத்தப்படுகின்றது, இந்த மந்த்ரங்களின் சில பகுதிகள் ஸ்ரீவித்யா உபாஸகர்களால் அவர்களது ஆத்ம-பூஜையின் போது ஜபிக்கப்படுகிறது.

பசுஞ்சாணத்திலிருந்து விபூதி:
தற்காலத்தில் விரஜ ஹோமம் செய்வது மிகவும் அரிதாகிவிட்டது. எனினும் ஹோமம் செய்யாத போதிலும், நாம் சுத்தமான பசுஞ்சாணத்திலிருந்து தான் விபூதி தயாரிக்க முயற்சிக்க வேண்டும்.

பெரும்பாலும் கடைகளில் கிடைக்கும் போலி விபூதி பாக்கெட்களை வாங்குவதற்கு பதிலாக, நாம் விபூதியை சுத்தமான பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட வரட்டிகளை முழுவதுமாக எரித்து அந்த சாம்பலை விபூதியாக பயன்படுத்த வேண்டும்.தற்போது சில வாசனை திரவியங்கள் மற்றும் ரசாயனங்களைக் கலந்து தயாரிக்கப்படும் விபூதியை பயன்படுத்தக்கூடாது. இவை பசுஞ்சாணத்தை எரித்துத் தயாரிக்கப் படுவதில்லை. சில மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை விபூதியாக ஏற்றுக் கொள்ள முடியாது. இதை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

அக்னிஹோத்ர பஸ்மம் :

அக்னிஹோத்ர ஹோமம் செய்யும் போது அதிலிருந்து கிடைக்கும் பஸ்மம் உயர்ந்ததாக கருதப்படுகிறது என்பதால் இதை நாம் அன்றாடம் விபூதியாகப் பயன்படுத்தலாம்.

விபூதியானது ஐஸ்வர்யமாகக் கருதப்படுகிறது. இது நமது வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 'மந்திரமாவது திருநீறு' என்று திருமூலர் கூறியுள்ளார்.

விபூதி பூசிக்கொள்ளும் முறை:
பொதுவாக விபூதியை சிறிது தண்ணீர் விட்டு குழைத்து பூசிக் கொள்ள வேண்டும். ஆலயங்களில் சுவாமி பிரசாதமாக தரப்படும் விபூதியை அப்படியே பூசிக் கொள்ள வேண்டும். குழைக்கக்கூடாது. கோயிலில் இருந்து கொண்டு வரும் விபூதியை வீடுகளில் நாம் அன்றாட பயன்பாட்டிற்காக வைத்துக் கொண்டிருக்கும் விபூதியுடன் கலக்கக்கூடாது.

முக்கியமானது -

விபூதியை குழைத்துப் பூசிக் கொண்ட பின்னர் கைகளை அலம்பக்கூடாது. கைகளில் எஞ்சியிருக்கும் விபூதியை நம் உடலில் மற்ற பகுதிகளில் பூசிக் கொண்டு விட வேண்டும்.

விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் விபூதி இட்டுக் கொண்ட பின்னர் நெற்றியில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் பலரிடம் காணப்படுகிறது. இதற்குப் வைத்துக் கொள்ளலாம் என்பதே பதிலாகும். ஆனால் விபூதியின் மேல் வைக்கக்கூடாது. மூன்று கோடுகளாக இட்டுக் கொள்ளப்பட்டுள்ள விபூதிக்கு கீழே சந்தனம் - குங்குமம் இட்டுக் கொள்ளலாம்.
 
Status
Not open for further replies.
Back
Top