• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

விநாயகரை அதிகாலையில் வழிபடுவது நல்லது

Status
Not open for further replies.
விநாயகரை அதிகாலையில் வழிபடுவது நல்லது

விநாயகரை அதிகாலையில் வழிபடுவது நல்லது

d10da9c8-f755-4e06-96c6-a1501083ebbb_S_secvpf.gif



உலகத்திற்கே மூலமுதற்கடவுள் பிள்ளையார் தான். எந்தச் செயலையும் தொடங்கும் பொழுதும் முதன் முதலில் கணபதியைத் தான் வழிபடுகின்றோம். மஞ்சளிலும் பிடித்து வைக்கலாம், மாவிலும் பிடித்து வைக்கலாம், பஞ்சலோகத்திலும் வடிவமைக்கலாம், பூவாலும், தானியங்களாலும் கூட நவீன காலத்தில் விநாயகர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

நினைத்தால் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் இருந்தே இந்த தெய்வத்தைத்தான் எல்லோரும் எளிதாக வழிபட இயலும். உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும். இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமானால் எந்த தெய்வத்தை எப்படி வழிபடுவது என்று கண்டறிந்து கைகூப்பித் தொழுதால் நல்ல பலன்களை நாம் பெற இயலும்.

எல்லோரும் எளிதில் பயன்பெற ஏற்ற வழிபாடு விநாயகர் வழிபாடு. அவரை ஆலயங்களுக்குச் சென்றும் வழிபடலாம், ஆற்றங்கரையிலும், அரச மரத்தடியிலும், வேப்ப மரத்தடியிலும், வன்னி மரத்தடியிலும், வில்வ மரத்தடியிலும் கண்டு கைகூப்பி வழிபடலாம். இவையெல்லாம் விருத்தியம்சங்களை நமக்கு வழங்கும் விருட்ச விநாயகர் வழிபாடாகும்.

துளசி மாடத்திலும் கூட ஒரு விநாயகரை வைத்து வழிபடுவது நம் பண்பாடு. அதனால் தான், 'பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார், அரச மரத்து நிழலிலே அமர்ந்திருக்கும் பிள்ளையார், ஆறுமுக வேலவனின் அண்ணணான பிள்ளையார்', என்று கவிஞர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.

செல்வ விநாயகர், சித்தி விநாயகர், வரம்தரும் விநாயகர், வரசித்தி விநாயகர், வல்லப கணபதி, கள்ளவாரணப் பிள்ளையார், கன்னிமூல கணபதி, லட்சுமி கணபதி, சொர்ண கணபதி, கலங்காத கண்ட விநாயகர் என்று ஊருக்கு ஊர் உன்னதமாக ஏராளமான பெயர்களில் காட்சியளிக்கின்றார்.

சாணத்தில் செய்தாலும், சந்தனத்தில் செய்தாலும், மண்ணில் செய்தாலும் மனமிரங்கி வழிபட்டால் செய்யும் செயல்களிலே சிறப்பான வெற்றியை வரவழைத்து தருபவர் பிள்ளையார். மரங்களில் கீழ் உள்ள விநாயகர் எல்லாம் மகத்தான வெற்றியை வழங்குபவர்கள். இவர்களை வழிபட்டால் விருத்தியம்சம் கூடும்.

உடல் ஆரோக்கியம் சீராகும். எந்த மரத்தடியில் விநாயகர் இருக்கின்றாரோ அதற்கு உகந்த நாளில் நமக்குப் பொருத்தமான நட்சத்திரத்தில் சென்று அபிஷேகம், வஸ்திர தானமும் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். நம்மால் முடிந்த நைவேத்தியம் படைத்து வழிபடலாம்.

பிறகு முதலில் குழந்தைகளுக்கு அதை விநியோகம் செய்ய வேண்டும். அரசமரத்தடி பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர்களுக்கு உடனடியாக நற்பலன் கிடைக்கும். கேதுவிற்குரிய நட்சத்திரங்களான அசுவதி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் மோதகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் தோஷங்கள் குறைந்து, சந்தோஷங்கள் வந்து சேரும்.

வேப்ப மரத்துப் பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடக்க வழிபிறக்கும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் மிஞ்சும் விதத்தில் செல்வம் வந்து சேரும். வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும்.

ஞாலம் போற்றும் வாழ்வமையும். நீங்கள் செய்யும் செயல்கள் செவ்வனே முடியும். நாவல் மரத்தடி விநாயகரை வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். மகிழ மரத்தடி விநாயகர் மன அமைதியைக் கொடுக்கும். அருகம்புல் மாலையை ஆனைமுகனுக்கு சாற்றி வழிபட்டால் பேரும், புகழும் உங்களைத் தேடிவரும்.

விநாயகர் வழிபாட்டிற்கு நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை. எந்த நேரமும், எங்கு வேண்டுமானாலும் நினைத்து வழிபடலாம். வெற்றிகள் வந்து சேரும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். கவலைகள் மாறும். மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை அதிகாலையில் வழிபடுவது தான் நல்லது.

குறிப்பாக மார்கழி மாதம் அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி முடித்து அரசமரத்தடி விநாயகரை வழிபட்டால் ஆரோக்கியம் சீராகும், அழகிய புத்திரப் பேறும் கிட்டும் என்பது ஐதீகம்.


???????? ??????????? ????????? ??????
 
Status
Not open for further replies.
Back
Top