சுழலும் உலகால் ஆனோம் நாமே
பருவம் கலியொடு சுழலும் எல்லாமே
அன்னை தயவு பிறக்க வளர
மற்றோர் தயவு இறக்க தளர
உடல்நலம் வேலை வரிகள் செல்வம்
சுழன்று சுழன்று வாழ்க்கை செல்லும்
பழையன திரும்பி புதிதாய் ஆகும்
நேரம் மட்டுமே புதிதாய் போகும்
பாதையில் செல்லும் சக்கரம் ஓட
மேல்கீழ் சுற்றினும் புது தடம் நாட
பாதை நமக்கு புதிராய் சறுக்கும்
சக்கர விட்டம் நமதாய் இருக்கும்
தூரமாய் ஓடிட பெரிதாய் விட்டம்
வேகமாய் ஓடிட விட்டம் திட்டம்
சக்கர விட்டம் நம்முடை இட்டம்
மாற்றிட முடியும் நமது வட்டம்
மாற்றிட எல்லாம் புதிது ஆகும்
பல புத்தாண்டு நித்தம் ஏகும்
மாறாதிருக்க வருடம் போகும்
எண்கள் மாறும்; வாழ்க்கை தேங்கும்
பாதைக்கேற்ப விட்டம் சுருக்கி விரிக்க
புதிய பாதைகள் செல்வோம் தெறிக்க
நம்முடை முயற்சியில் பயணம் இருக்க
மாறிலி (பை) செய்யும் சிறுக்க பெருக்க
2023 ஆங்கில வருட வாழ்த்துக்கள்
பருவம் கலியொடு சுழலும் எல்லாமே
அன்னை தயவு பிறக்க வளர
மற்றோர் தயவு இறக்க தளர
உடல்நலம் வேலை வரிகள் செல்வம்
சுழன்று சுழன்று வாழ்க்கை செல்லும்
பழையன திரும்பி புதிதாய் ஆகும்
நேரம் மட்டுமே புதிதாய் போகும்
பாதையில் செல்லும் சக்கரம் ஓட
மேல்கீழ் சுற்றினும் புது தடம் நாட
பாதை நமக்கு புதிராய் சறுக்கும்
சக்கர விட்டம் நமதாய் இருக்கும்
தூரமாய் ஓடிட பெரிதாய் விட்டம்
வேகமாய் ஓடிட விட்டம் திட்டம்
சக்கர விட்டம் நம்முடை இட்டம்
மாற்றிட முடியும் நமது வட்டம்
மாற்றிட எல்லாம் புதிது ஆகும்
பல புத்தாண்டு நித்தம் ஏகும்
மாறாதிருக்க வருடம் போகும்
எண்கள் மாறும்; வாழ்க்கை தேங்கும்
பாதைக்கேற்ப விட்டம் சுருக்கி விரிக்க
புதிய பாதைகள் செல்வோம் தெறிக்க
நம்முடை முயற்சியில் பயணம் இருக்க
மாறிலி (பை) செய்யும் சிறுக்க பெருக்க
2023 ஆங்கில வருட வாழ்த்துக்கள்