விசுவ இந்து பரிஷத்தின் மதமாற்ற நடவடிக்க&

Status
Not open for further replies.
விசுவ இந்து பரிஷத்தின் மதமாற்ற நடவடிக்க&

விசுவ இந்து பரிஷத்தின் மதமாற்ற நடவடிக்கை: பிரதமர் மோடி அதிருப்தி!


narendra%20modi%287%29.jpg

சூரத்:
முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களை, விசுவ இந்து பரிஷத் இந்துக்களாக மதமாற்றம் செய்து வருவதற்கு பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் 57 முஸ்லீம் குடும்பத்தினரையும், குஜராத்தில் 500 பழங்குடியின கிறிஸ்தவர்களையும், கேரளாவில் 20 தலித் கிறிஸ்தவர்களையும், விசுவ இந்து பரிஷத் இந்துக்களாக மதமாற்றம் செய்தது. இதுகுறித்து விசுவ இந்து பரிஷத், ''அவர்களை நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே முன்வந்து மதம் மாறினர்'' எனக் கூறியுள்ளது.

இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், விசுவ இந்து பரிஷத்தின் மதமாற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், இதையடுத்து, மதமாற்ற நிகழ்வுகளில் ஈடுபட வேண்டாம் என விசுவ இந்து பரிஷத் தலைவர்கள், அதன் நிர்வாகிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


????? ????? ?????????? ??????? ?????????: ??????? ???? ?????????!
 
Status
Not open for further replies.
Back
Top