• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

வழிபாட்டின் பலன் யாருக்கு?

Status
Not open for further replies.
வழிபாட்டின் பலன் யாருக்கு?

வழிபாட்டின் பலன் யாருக்கு?

E_1414138679.jpeg



தேவையின் பொருட்டு கடவுளை துதிப்போருக்கும், பக்தி செலுத்துவோருக்கும் கடவுள் ஒரு நாளும் காட்சி அளிப்பதில்லை. எவன் ஒருவன் களங்கமற்ற மனதுடன், இறைவன் குறித்து ஏகாந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறானோ, அவன் வழிமுறைகள் தவறு என்றாலும், அவனுக்கு, ஜோதிமயமான இறைவன் அவன் வேண்டிய உருவில் காட்சி தந்து அருளுகிறார். இதற்கு உதாரணமாக, சோழநாட்டைச் சேர்ந்த சனந்தனரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையே எடுத்துக் கொள்ளலாம்.

தன் இள வயதிலேயே நரசிம்ம மந்திர உபதேசம் பெற்றவர் சனந்தனர். இவர் ஒரு முறை, காட்டில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது, வேடன் ஒருவன் சனந்தனரைப் பார்த்து, 'சாமி... இந்த காட்டுல கண்ண மூடி உட்கார்ந்துட்டு என்ன செய்றீங்க?' எனக் கேட்டான். அவன் குரல் கேட்டு கண்விழித்த சனந்தனர், 'இந்த வேடனுக்கு நரசிம்மரை பற்றியும், அவருடைய உபாசனை குறித்தும் எப்படி சொல்லி புரிய வைப்பது...' என நினைத்து,'வேடனே... நீ காட்டில் விலங்குகளை தேடுகிறாய் அல்லவா... அதுபோல, நானும் ஒரு விசித்திரமான விலங்கை கண்களை மூடியபடி, தேடிக் கொண்டிருக்கிறேன்...' என்று கூறி, நரசிம்ம உருவத்தை விவரித்தார்.

அதைக்கேட்ட வேடன் வியந்து, 'பாதி சிங்கம்; பாதி மனித வடிவில் ஒரு உருவமா... ஆச்சரியமாக இருக்கே... இருந்தாலும், நீங்க கவலைப்படாதீர்கள். நாளை சூரியன் மறைவதற்குள் நீங்கள் சொன்ன அந்த விலங்கை கட்டி, இழுத்து வருவேன்; அப்படி கொண்டு வராவிட்டால், நெருப்பில் விழுந்து இறப்பேன்; இது சத்தியம்...' என்று கூறி, புறப்பட்டான்.

மறுநாள் பொழுது விடிந்ததும், நரசிம்மத்தை தேடி, காடெங்கும் அலைந்தான் வேடன். அவன் சிந்தனை முழுவதும் நரசிம்மர் நினைவிலேயே இருந்தது; தண்ணீர் கூட அருந்தாமல் தேடி அலைந்தான். அந்தி சாயும் நேரம் நெருங்கியது, வேடன் மனம் உடைந்து போனான்.

'அந்த நல்ல மனிதருக்கு, அவர் தேடும் விலங்கை கொண்டு வருவதாக வாக்கு கொடுத்தேனே... அதை நிறைவேற்றாத நான், இனிமேல் உயிருடன் இருக்கக் கூடாது...' என்று நினைத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான்.

அப்போது, காடே அதிரும்படியாக ஒரு கர்ஜனை கேட்டது. வேடன் திரும்பிப் பார்த்தான்; அங்கே, நரசிம்மர் நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும், வேடனுக்கு கோபம் தாங்கவில்லை. காட்டு கொடிகளை நரசிம்மரின் கழுத்தில் கட்டி, 'தரதர'வென இழுத்து போய், சனந்தனரின் முன்னால் நிறுத்தி, 'சாமி, நீங்கள் தேடிய விலங்கை இழுத்துக் கொண்டு வந்து விட்டேன்...' என்று கூறினான்.

சனந்தனருக்கு, நரசிம்மரின் கர்ஜனை கேட்டதே தவிர, உருவம் கண்ணுக்கு தெரியவில்லை. 'வேடனுக்கு கிடைத்த புண்ணியம் எனக்கு கிடைக்கவில்லையே...' என்று அழுதார் சனந்தனர். அப்போது நரசிம்மர், 'சனந்தனா... இந்த வேடனுக்கு உள்ள ஏகாந்த சிந்தனை, ஒருமைப்பட்ட மனது உனக்கு ஏற்படவில்லை; அப்படி உனக்கு ஏற்படும் சமயத்தில் நான் உனக்கு அருள் புரிவேன்...' என்று அசரீரியாக கூறினார்.

அந்த சனந்தனர் தான் பிற்காலத்தில் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவராகி, பத்மபாதர் என திருநாமம் பெற்றார். காபாலிகன் ஒருவன் ஆதிசங்கரரை கொல்ல முயன்ற போது, சனந்தனரின் உடம்பில் நரசிம்மர் ஆவாகனமாகி, காபாலிகனை கொன்று, ஆதிசங்கரரை காப்பாற்றினார் என்பது வரலாறு.

பி.என்.பரசுராமன்

??????????? ???? ????????? | ??????? | Varamalar | tamil weekly supplements
 
Status
Not open for further replies.
Back
Top