• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வள்ளுவன் சொன்ன சுவையான கதைகள்

Status
Not open for further replies.
வள்ளுவன் சொன்ன சுவையான கதைகள்

tiruvalluvar-at-soas-university-of-london.jpg

Thiruvalluvar statue at the University of London; right extreme london swaminathan, author of this article, left extreme Dr L M Singhvi, High Commissioner for UK in 1996.

வள்ளுவன் சொன்ன சுவையான கதைகள்


தேனினும் இனிய தெள்ளு தமிழில், வான் புகழ் வள்ளுவன் யாத்த திருக் குறளுக்குச் சமமான ஒரு நூல் இன்று வரை தோன்றவில்லை. இனியும் தோன்றுமா என்பது சந்தேகமே. ‘’வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்’’ என்ற எனது முந்தைய கட்டுரையில், அவன் அதிகாரத்துக்கு அதிகாரம் தயக்கமின்றி சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்துவதையும் இந்து மத நூல்களில் வரும் ‘’தர்ம, அர்த்த காம’’ என்ற வரிசையில் ‘’அறம் ,பொருள் இன்பம்’’ என்ற முறையில் குறளை இயற்றினான் என்றும் காட்டினேன்.


துணிச்சலாக சம்ஸ்கிருதத்தில் ‘’தானம் தவம் இரண்டும்’’ (குறள் 19; 295) என்று குறளைத் துவக்கினான் (பகவத் கீதை 16—1). ‘’அச்சமே கீழ்களது ஆசாரம்’’(1075) என்று பிராமண பாஷையைப் பயன்படுத்தினான். பாவி (168), காரணம், நாகரீகம், வாணிபம் ….. இப்படி எத்தனையோ சம்ஸ்கிருத சொற்கள். அவன் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாலதான் இந்தத் துணிச்சல் வந்தது என்றும் முன்னர் சுட்டிக் காட்டினேன். இந்தக் கட்டுரையில் வள்ளுவன் பஞ்ச தந்திரக் கதைகளை எப்படிப் பயன்படுத்துகிறான் என்று காட்டுகிறேன்.


ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பேய்க்கதையை வள்ளுவன் குறள் 565-ல் சொன்னதை 20 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் இருந்து வந்த ‘’மேகம்’’ பத்திரிக்கையில் எழுதினேன். பின்னர் இதையும் 40 கட்டுரைகளையும் சேர்த்து ‘’தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்’’ என்ற தலைப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன் நூலாக வெளியிட்டேன். இது ‘’ஈ புக்’’ வடிவிலும் கிடைக்கும்.


ஏற்கனவே நூலில் எழுதிவிட்டதால் பேய்க் கதையை மிகவும் சுருக்கமாகப் பார்போம்:
‘’ராஜாவுக்கு முடிவெட்டும் ஒரு நாவிதன் காட்டு வழியாக வந்தான். மரத்தின் மீதிருந்த பிரம்ம ராக்ஷசன் (பேய்), உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா? என்று கேட்டது. யாருக்குதான் ஆசை இருக்காது? நாவிதனும் வேண்டும் என்று சொல்லவே ஏழு ஜாடி தங்கம் கிடைத்தது. ஆனால் ஒரே ஒரு குறை! ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் கொஞ்சம் குறைவாக இருந்தது. அதை எப்படியாவது நிரப்பவேண்டும் என்ற ஆசை வந்தது. உழைத்து உழைத்து ஓடாகிப் போய் எத்தனை போட்டாலுல் ஜாடி நிரம்பவே இல்லை.


ராஜாவுக்கு முடி வெட்டப் போகும் போதெல்லாம் மகிழ்ச்சியாக அவருடன் பேசிவிட்டு கூடுதலாகப் பணத்துடன் திரும்புவது அவனது வாடிக்கை. ஆனால் ஏழு ஜாடி தங்கம் வந்த பின் அந்த மகிழ்ச்சி எல்லாம் மாயமாய்ப் பறந்தோடி விட்டது. முகம் வாடியது, உடலும் மெலிந்தது இவனது நடத்தையில் மாற்றம் வந்தது ராஜாவுக்கும் தெரிந்தது. எவ்வளவோ கேட்டுப் பார்த்தார். ஒரு வேளை நாடே சீர் கெட்டுப் போய்விட்டதோ என்று ராஜாவை வேறுவகை பயம் பிடித்துக்கொண்டது.. இவன் எவ்வளவு கேட்டும் சொல்லாமல் எப்போது பார்த்தாலும், கூடக் காசு வேண்டும் என்று சொன்னவுடன், ஒரு நாள் ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது, ‘’ஏ, சனியனே, என்ன? எங்கேயாவது ஏழு ஜாடித் தங்கத்தை எடுத்துவந்து விட்டாயா?’’ இப்படிப் பணத்துக்காக பேயாகப் பறக்கிறியே!’’ என்று திட்டினார்.


நாவிதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது, ‘’ராஜா, மன்னித்துவிடுங்கள், புதையல் கிடைத்ததை உங்களிடம் சொல்லவில்லை. மன்னித்துவிடுங்கள். வீட்டுக்கு ஓடிப்போய் கொண்டுவந்து 7 ஜாடி தங்கத்தையும் ஒப்படைத்துவிடுகிறேன் என்றான் நாவிதன். ராஜாவோ, சிரித்துக் கொண்டே, ‘’அந்த ஏழு ஜாடி தங்கத்தை இங்கே கொண்டுவந்து விடாதே. ஓடிப்போய் மரத்துக்கு அடியில் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்து விடு’’ என்றார்.
marvel-ghost.jpg


நிறையாத ஏழாவது ஜாடி என்பது மனிதனின் பேராசையைக் குறிக்கும். அது எப்போதுமே நிறையாதது. அதுதான் வள்ளுவர் சொன்ன ‘பேய் காத்த செல்வம்’. ராமகிருஷ்ண பரமஹம்சரும் சொன்ன இக்கதை, நாடு முழுதும் நிலவிய கதை. அதைத் தமிழ்நாட்டோரும் அறிந்திருந்தனர். வள்ளுவன் இதை


‘’அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து’’ (குறள் 565)---என்றார்.

பொருள்: மக்களால் எளிதில் காண முடியாத, கோபம் கொண்ட மன்னனிடம் இருக்கும் செல்வம், பேய் காத்த செல்வம் போலப் பயன்படாது.

மேற்கூறிய கதை தெரியாவிட்டால் வள்ளுவன் வாக்கை முழுதும் புரிந்து கொள்ள முடியாது. இதோ இன்னும் பல சுவையான கதைகள்:


ஆந்தை / காக்கை- பஞ்ச தந்திரக் கதையைக் குறள் 481ல் காணலாம்:
‘’பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது ‘’

பொருள்: பகற்பொழுதில் பெரிய கோட்டானைச் சிறிய காகம் கூட வென்றுவிடும். அதனால் பகைவனை வெல்ல நினைக்கும் மன்னன் சரியான காலத்தை தெரிந்தெடுக்கவேண்டும்.
பஞ்ச தந்திரக் கதையில் வரும் காகம்—ஆந்தை போர் எல்லோரும் அறிந்ததே.
குறள் 500ல் மற்றொரு கதை வருகிறது. ஒரு யானையைக் கூட நரி தந்திரமாகச் சேற்றில் சிக்கவைத்துக் கொன்றது.

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு

பொருள்: வேல் ஏந்திய வீரனையும் தந்தத்தால் தூக்கி எறியும் யானையும் சேறில் சிக்கிவிட்டால், ஒரு சிறு நரி கூட அதைக் கொன்றுவிடும்.
குறள் 633-ல் பிரித்தல், சேர்த்துவைத்தல் போன்ற பஞ்ச தந்திரக் கொள்கைகளை எடுத்துரைக்கிறார்.

வள்ளுவர்—சாக்ரடீஸ்—சிவபெருமான் இவர்கள் மத்தியில் என்ன தொடர்பு? என்ற கட்டுரை ஏற்கனவே எனது புத்தகத்தில் உள்ளது. இங்கே ஆங்கிலத்திலும் அதை தனியே எழுதியுள்ளேன் (குறள் 580, நற்றிணை 355)

Please read ‘’Strange Link between Lord Shiva, Socrates and Thiruvalluvar’’-- posted in this blog September 18, 2011.

Pictures are taken from various websites; thanks.

valluvar-with-children.jpg
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top