• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வர லஷ்மி விரதம்

praveen

Life is a dream
Staff member
காக்கும் கடவுள் ஸ்ரீமஹா விஷ்ணுவின் துணைவியும், செல்வங்களை அள்ளி தரக்கூடிய மஹாலஷ்மி தேவியை வணங்கி அவரின் அருளாசி பெறுவதே இந்த வர லஷ்மி விரதம் விரதத்திற்கான நோக்கம்.

இந்தாண்டு வர லஷ்மி விரதம் ஆங்கில தேதி 20ம் தேதி (ஆவணி 4) வெள்ளிக்கிழமை கடை பிடிக்கப்படுகிறது.

|| வர லஷ்மி விரத முறை ||

வீட்டில் பூஜை எப்படி செய்வது, அதன் பலன்கள் என்ன என்று பார்ப்போமா !!

முதலில் வர லஷ்மி விரத பூஜைக்கான உகந்த நேரம் பார்க்கலாம் !!

வர லஷ்மி விரதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் முதல் நாளே வீட்டையும், பூஜை அறையையும் அழகாக சுத்தம் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.

வெள்ளிக்கிழமை தினத்தில் காலையில் குளித்து முடித்து விட்டு நெற்றியில் குங்குமம் இட்டு முதலில் விநாயகரை வணங்கி பின்னர் குல தெய்வத்தையும் வணங்கி பின் இவ் விரதத்தை தொடங்க வேண்டும்.

வர லஷ்மி விரதம் சிறப்பு பூஜை செய்ய குரு ஹோரை சுக்ர ஹோரையில் பூஜை செய்யலாம்.

வர லஷ்மி விரதத் திற்கான அலங்காரம் எப்படி செய்வது !!

எதை எல்லாம் பயன்படுத்தலாம் !!

வர லஷ்மி விரதத்தின் முக்கியத்துவம்:

இந்த விரதத்தின் முக்கியத்துவமே சுமங்கலி பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் சகல செளபாக்யமும் பெற்று வாழ வேண்டும் என்பதே.

தொழில் சிறக்க வேண்டும்.

அதனால் கிடைக்கும் தனம், பொருள் வரவு மூலம் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்பத்தை அனுபவிக்க வேண்டும் என எல்லா வரத்தையும் தரக்கூடிய லஷ்மி தேவியை நினைத்து கடைபிடிக்கக்கூடிய விரதமாகும்.

கன்னி பெண்கள்

சுமங்கலி பெண்கள் மட்டுமல்லாமல் கன்னி பெண்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர்.

ஒரு பெண்ணுக்கு முழுமையான அந்தஸ்தை பெறுவது அவள் திருமண உறவில் ஈடுபடும் போது தான்.

அவளுக்கு எல்லாமுமாக இருக்கக்கூடியவன் கணவன்.

அதனால் நல்ல கணவன் அமைய வேண்டும் என லஷ்மியை வணங்கி விரதம் இருக்கின்றனர்.

விரதத்தால் கிடைக்கும் அஷ்ட லட்சுமிகளின் அருள்

வர லஷ்மியை வணங்குவதன் மூலம் ஒருவர் அஷ்ட லஷ்மியின் ஆசீர்வாதத்தை பெறலாம்.

ஆடி அல்லது மஹா லஷ்மி (ஆன்மீகக் கற்றளைத் தூண்டுபவர் அல்லது பாதுகாப்பவர்)
தன லஷ்மி (செல்வத்தின் தெய்வம்)

தைர்ய லஷ்மி (தைரியத்தின் தெய்வம்)
செள பாக்ய லஷ்மி (நல்ல அதிர்ஷ்டத்தின் தெய்வம்)

விஜய லஷ்மி (வெற்றியின் தெய்வம்)

தான்ய லஷ்மி (தானியங்களை அருள்பவர்)
சந்தனா லஷ்மி (குழந்தைப் பேறு அருள்பவர்)
வித்யா லஷ்மி (ஞானத்தின் தெய்வம்)

இவ்வாறு, இந்த நாளில் ஒரு வரலஷ்மி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், பெண்கள் அஷ்ட லஷ்மியின் ஆசீர்வாதங்களை பெற்றிட முடியும்.

சரி வர லஷ்மி பூஜைக்கு தேவையான பொருட்கள் என்னென்ன !!

மண்டபத்திற்கு அலங்காரபொருட்கள்.


1- சின்ன வாழைக்கன்று இரண்டு
2- தோரணம் (கிடைத்தால்)
3- மாவிலை தோரணத்திற்கு.
4- முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின் பின் அலங்காரத்தை ரசிக்க)
5- சீரியல் மின் விளக்கு. அதை இணைக்க தேவையான extension cord.
6- பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு.

1- அம்மனை வைக்க சொம்பு.
2- காதோலை இரண்டு பக்கமும் வைக்க
3- கருக வளையல் இரண்டு பக்கமும் வைக்க
4- மாவிலைக்கொத்து, தேங்காய் மற்றும் அம்மன் வைக்க
5-தாழம்பூ ( கிடைத்தால் அதை கருக வளையலில் சேர்த்து இரு பக்கமும் வைக்கலாம்)
6- ஜடை அலங்காரம் இப்போது பூக்கடைகளில் கிடைக்கிறது.
7- சொம்பிற்கேற்ப சிறிய தேங்காய்.
8- சிறிய வாழை இலை. அதில் அரிசியை பரப்பி, அம்மனை வைக்க
9- புதிய ரவிக்கை துண்டு (அம்மனுக்கு சாத்த)

பூஜைக்கு தேவையான பொருட்கள்.

1- காமாட்சி விளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.
2- பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு)
3- பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
4- மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்
5- ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
6- மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
7- பஞ்ச பாத்திரம், உத்தரினி.
8- இழை(மா)க்கோலம் போட தேவையான பொருட்கள்
9- மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ.
10- அர்க்கியம் விட கொஞ்சம் பால்

நைவேத்தியங்கள்.

அப்பம்
வடை (உளுந்து வடை)
கொழுக்கட்டை
வெல்ல பாயசம்
சர்க்கரை பொங்கல்
கொத்துக்கடலை சுண்டல் (சாயந்திரம் நைவேத்தியத்திற்கு)
இதற்கு தேவையான தேங்காய்,
வெல்லம் மற்றும் தேவையான மளிகை சாமான்கள்

பழ வகைகள்

1- வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா வகையான பழங்களும்.

பூஜை முடிந்த பின், அர்க்யம் விட்ட பிறகு, மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ளவும்.

மாலையில் மஹா லஷ்மிக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து, கற்பூரம் ஆரத்தி எடுக்கவும்.

பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் தஷிணை கொடுக்கவும்.

மறு நாள் காலை புனர்பூஜை செய்து, மஹா லஷ்மியை எடுத்து அரிசி பானையில் வைக்கவும்.

மஹா லஷ்மிக்கு வைத்த அரிசியை, வரும் கிருஷ்ண ஜயந்தி பட்சணம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம்.

முதலில் விக்னேஸ்வர பூஜை

உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,

ஓம் கேசவாய ஸ்வாஹா
ஓம் நாராயணாய ‌ ஸ்வாஹா
ஓம் மாதவாய ஸ்வாஹா

என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும்.

மீதியை புஸ்தகம் பார்த்து ஆசமனம் செய்ய வேண்டும்.

கையில் மஞ்சள் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||

மமோ பாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ லஷ்மி நாராயணப் ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
- என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும்.

விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசமனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும்.

கண்டம் மணி அடிக்கவும்.
ஆகமார்த்தம் து.....

பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.

அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ

விக்னேஸ்வரம் த்யாயாமி

ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி

என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.

இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ

மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

தெரிந்தவர்கள்

அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்.

பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரபா|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூஸர்வதா||
- என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.

அடைப்புக் குறிக்குள்() இருப்பவை இந்த வருடத்துக்கான ( ) நாள் நட்சத்திரங்கள் திதி என‌ நீங்களே சேர்த்துக் கொள்ளலாம்.

சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்ரூ தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதிரூ ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, ப்லவநாம ஸம்வத்ஸரே, தெக்ஷிணாயனே கீர்ஷ்மருதௌ, கடகமாஸே, சுக்லபக்ஷே, துவாதஸ்யாம் சுபதிதௌ,ப்ருகு வாஸரயுக்தாயாம், மூலாநக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் துவாதஸ்யாம் சுப திதௌ,

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ லஷ்மி நாராயணப் ப்ரீத்யர்த்தம் அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுளாரோக்ய ஐஸ்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், ஸகல சத்ரு உபாத நிவர்த்யர்த்தம்‌ இஷ்ட தேவதா அனுக்ரஹ சித்யர்த்தம் குல தேவதா அனுக்ரஹ சித்யர்த்தம் அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யானரூஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே|

என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும்.

உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு,

ஸ்ரீ விக்னேஸ்
வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.

பின் கலச பூஜை செய்யவும்.

பஞ்ச‌ பாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.

கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
தாம்ரவர்ண்யை நம:
என்று பூஜித்து,

பவமான சூக்தம் மற்றும் வருண பகவான் ஆவாஹனம் மற்றும் வருண சூக்தம்
சொல்லி தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.

பின்னர் நவக்கிரஹ பூஜை புஸ்தகம் பார்த்து கொள்ளவும்.

அடுத்து அஷ்ட திக் பாலக பூஜை புஸ்தகம் பார்த்து கொள்ளவும்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ் ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||

என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப் ரதிஷ்டை செய்யவும்.
அதாவது உயிர் கொடுக்க வேண்டும்.

அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்ம விஷ்ணு மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)

ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம்||

பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.

ஆவாஹிதோ பவ|
ஸ்தாபிதோ பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|
தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதிரூபாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

- இப்படி ப்ராண ப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.

கும்பத்தில் ஸ்ரீமந் நாராயணனையும் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.

பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்|
க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|
க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|
பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|
வரலக்ஷ்ம்யை நம:|
என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.

பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸ_த்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹூலான் வரான்||
என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.

ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|
ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||
வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|
என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸ_த்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணிஃபனைஓலை அணிவிக்க)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)

மஹா லஷ்மி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.

பின், நூற்றியெட்டு அஷ்டோத்ர சத நாமம் சொல்லி, அஷதை புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

பணம் வேண்டுபவர்களுக்காக

தாமரை இலை அர்ச்சனை துளசி இலை அர்ச்சனை மற்றும் வில்வ இலை அர்ச்சனை செய்து வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும்.

மஹா லக்ஷ்மியின் அஷ்டோத்ர சத நாமாவளி.

ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:
ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண்மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்யபுஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:
ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் பத்மின்யை நம:
ஓம் பத்ம கந்தின்யை நம:
ஓம் புண்ய கந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் சிரோதஸம்பவாயை நம:
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
ஓம் பூத்யை நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோகசோக விநாசின்யை நம:
ஓம் தர்மநிலயாயை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:
ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பத்மோத்பவாயை நம:
ஓம் பத்மமுக்யை நம:
ஓம் பத்மநாபப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்ம மாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் வஸுந்தராயை நம:
ஓம் உதாராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேம மாலின்யை நம:
ஓம் தனதான்யகர்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த் வதனாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சதுர்ப்புஜாயை நம:
ஓம் சந்த்ரரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்துசீதலாயை நம:
ஓம் ஆஹ்லாத ஜனன்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விஸ்வ ஜனன்யை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்ய நாசின்யை நம:
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமால்யாம்பர தராயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வ நிலயாயை நம:
ஓம் வராஹ ரோஹாயை நம:
ஓம் யசஸ்வின்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸ்த்ரைண ஸெளம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் வரலக்ஷ்ம்யை நம:
ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ர தனயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்கள தேவதாயை நம:
ஓம் விஷ்ணு வக்ஷஸ் தலஸ்தி தாயை நம:
ஓம் விஷ்ணு பத்ன்யை நம:
ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம:
ஓம் நவ துர்காயை நம:
ஓம் மஹா காள்யை நம:
ஓம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மி காயை நம:
ஓம் த்ரி கால ஜ்நாஸம்காயை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:

அஷ்டோத்திரம் முடிந்து ஸ்ரீசூக்த பாராயணம் 9 முறை லஷ்மியின் சஹஸ்ரநாமமும் கனகதாரா ஸ்தோத்ரம் அஷ்ட லஷ்மியின் ஸ்தோத்ரம் நாராயண சூக்தம் விஷ்ணு சூக்தம் பூ சூக்தம் பாக்யா சூக்தம் ருத்ரம் சமகம் நாராயணாய உபநிஷத் பாராயணம் செய்வது அளவுக்கு அதிகமான பலன்களை தரும்.

கடைசியாக நைவேத்தியம் செய்து தூபம் தீபம் காட்டி ஒரு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்து வீட்டில் உள்ள அனைவருக்கும் பிரசாதம் கொடுக்க வேண்டும்.

முக்கியமான விஷயம்

அன்று உங்கள் வீட்டிற்கு வரும் அனைவரும் மஹா லஷ்மியின் அம்சமாவே பாவிக்க வேண்டும்.

யாராக இருந்தாலும் சரி !!

வீட்டிற்கு வந்தவர்களுக்கு முதலில் நீங்கள் நெற்றியில் குங்குமம் இட்டு பின்‌ அவர்களுக்கு குங்குமம் கொடுக்க வேண்டும்.

பின் அவர்களுக்கு ரவிக்கை துணி தாம்பூல தஷிணை கொடுக்க வேண்டும்.

பூஜை இவ்வளவு பிரம்மாண்டமாக செய்ய வேண்டுமா என்று கேட்டால்

சாதாரணமாக எளிய முறையிலும் செய்யலாம்.

ஆனால் ஆத்மார்த்தமான பக்தியை மட்டுமே மஹாலக்ஷ்மி விரும்புவாள்.

சுபம்


1627707007757.png
 
Last edited:

Latest ads

Back
Top