லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.

vembuv

Active member
Shared as received thro Facebook.....and accepting or rejecting is your discretion....:-):)

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்

இங்கு பதிவாகியுள்ள கருத்துக்கள் தனி நபரின் சொந்த கருத்துக்களே

இவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளவோ, நிராகரிக்கவோ அல்லது தணிக்கைசெய்யவோ அனைவருக்கும் உரிமை உண்டு

தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டுகிறேன்

ஆரோக்கியமான கருத்துகளை பரிமாறிக்கொள்ள அன்புடன் விழைகிறேன் :)


லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.

1. அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.

2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.

3. ஐரோப்பியர்கள் படித்தவர்கள்.ஆனால்
அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல.

4. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.

5. இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களை விட மிக அதிகம்.

6. பாதிரியார், அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரி, மௌலவி, மதகுருமார்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது.

7. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் ,கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல.

8. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் உலகில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

9. இந்த உலகமும் தங்களுக்கு சொந்தமானது என்று விலங்குகளும் பறவைகளும் முதல்முறையாக உணர்ந்தன.

10. நட்சத்திரங்கள் உண்மையில் மின்னும், இந்த நம்பிக்கை முதலில் பெருநகரங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டது.

11. உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.

12. நாமும் நம் குழந்தைகளும் 'பாஸ்ட் பூட் ' இல்லாமல் கூட வாழலாம்.

13. தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல.

14. பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும் என்று கிடையாது.

15. சமூக ஊடகம் பொய்கள் மற்றும் முட்டாள்களின் ஒரு கூடாரம் மட்டுமே.

16. நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே, வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல.

17 இந்தியப் பெண்கள் காரணமாக வீடு கோயிலாக மாறும்.

18. பணத்திற்கு மதிப்புக் குறைவே.

19. இந்தியப் பணக்காரர்கள் பலர் நற்குணம் நிறைந்தவர்கள்.

20. இக்கட்டான நேரத்தை இந்தியரால் மட்டுமே கையாள முடியும்.

21. ஒற்றைக் குடும்பத்தை விடக் கூட்டுக் குடும்பம் சிறந்தது.

22.உண்மையான தன்னலமற்ற அரசியல்வாதிகளை ஆபத்து நேரங்களில் இனம் காணமுடியும்

Source: Facebook
 
Last edited:
Back
Top