P.J.
0
லஞ்சம் அதிகம் புழங்குவதால் ஆர்.டி.ஓ. அலுவī
லஞ்சம் அதிகம் புழங்குவதால் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மூடப்படும்: கட்கரி ஆவேசம்!
புனே: லஞ்சம் அதிகம் புழங்குவதால் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மொத்தமாக மூடப்படும் என்று ஆவேசமாக நிதின் கட்கரி கூறினார்.
மத்திய தரைவழி போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புனேவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, ''நாட்டிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களை மூட மத்திய அரசு சட்டம் இயற்ற உள்ளது.
நாட்டில் காலவாதியான சட்டங்களும், அமைப்பும் மாற்றப்பட வேண்டும். அதில் முக்கியமான ஒன்று வட்டார போக்குவரத்து அலுவலகமாகும். இந்த காலவாதியான அமைப்பு விரைவில் புதிய சட்டம் மூலம் ஒழிக்கப்படும். பொதுமக்களின் நலனுக்காக அதில் புதிய முறை அமல்படுத்தப்படும்.
ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பணம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அதை தடுக்கும் பொருட்டு, புதிய திட்டத்தின்படி போக்குவரத்தை மீறுபவர்களின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றால், தீர்ப்புக்கு பின் அந்த வழக்கில் நோட்டீஸ் பெற்ற நபர் தோற்றுவிட்டால் அபராத தொகையை போல் மூன்று மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட உள்ளது.
வெளிநாடுகளில் உள்ளது போல் போக்குவரத்தையும், போக்குவரத்து விதிகளையும் மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது" என்று ஆவேசமாக பேசினார்.
?????? ?????? ???????????? ???.??.?. ??????????? ??????????: ?????? ??????!