• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

லக்ஷ்மி பூஜை செய்பவர்களுக்கு சகல ஐஸ்வர்&

Status
Not open for further replies.
லக்ஷ்மி பூஜை செய்பவர்களுக்கு சகல ஐஸ்வர்&

லக்ஷ்மி பூஜை செய்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யமும் கிட்டும்.

வெள்ளிகிழமைகளில் நேரம் இருப்பவர்கள் இப்பூஜையை செய்து பலன் அடையலாம்.

இதற்கு வேண்டிய பொருட்கள்:

குத்து விளக்கு - ஒன்று
உதிர்த்த மல்லிகை மற்றும் சாமந்தி பூக்கள் - ஒரு சிறு பாத்திரத்தில்
பால் - ஒரு கிண்ணம்(சுத்தமான வெள்ளி கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளலாம்) பழங்கள் - வாழை, எந்த பழம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
தண்ணீர் - ஒரு கிண்ணம்
குங்குமம் - இடுவதற்கு
சந்தனம்/மஞ்சள் - இடுவதற்கு
பெரிய தாம்பாளம் - ஒன்று
லக்ஷ்மி உருவம் பதித்த வெள்ளி தகடு - அவரவர்கள் வசதிக்கேற்ப வெண்கலத்திலும் சிறிய மகா லக்ஷ்மி விக்ரகாங்கள் கிடைக்கின்றன
சர்க்கரை பொங்கல் - நெய்வேத்யம் செய்ய
முளை கட்டிய கருப்பு கொண்டாய் கடலை - (பூஜைக்கு முன் நாள் காலையிலே கடலைகளை ஊற வைத்து விடுங்கள்)

பூஜை அன்று பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து கோலம் இடுங்கள்.
குத்து விளக்குடன் லக்ஷ்மி தகடை சிறிய நூலால் கட்டிவிடுங்கள்.
மாட்டுவதற்கு விளிம்பு இருந்தால் குத்து விளக்கில் மாட்டிவிடலாம்.
குத்து விளக்கை தாம்பாளத்தில் வைத்து மஞ்சள் குங்குமம் இடுங்கள்.
இப்போது நெய்வேத்யம் செய்ய பால், தண்ணீர், பொங்கல், பழங்கள், கடலைகளை தயாராகி வைத்துவிடுங்கள்.
ஐந்து முக விளக்கை ஏற்றுங்கள்.
நெய்யினால் கூட விளக்கு ஏற்றலாம்.
பூஜையை மலர்களை வைத்து ஆரம்பிக்கலாம்.
லக்ஷ்மி அஷ்டோத்திர மந்திரத்தை முழுவதுமாக மலர்களை கடவுளுக்கு அர்ச்சனை செய்துகொண்டே
மனம் ஒன்றி படியுங்கள்.

Before Starting Sri Mahalakshmi Puja, Please Chant whatever slokam you know praying Lord Sri Vigneswara

and offer a Neyvedayam

Then Start Sri Mahalakshmi Puja



Goddess Sri Mahalakshmi Devi Ashtotram - 108 Names of Goddess Lakshmi

https://www.youtube.com/watch?v=5ickwLed2Xg

ஸ்ரீ லக்ஷ்மி 108 அஷ்டோத்திரம்
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி

ANJU APPU: SRI LAKSHMI ASHTOTHRAM 108 NAMAVALI, TAMIL LYRICS

படித்து முடித்தவுடன், சகல ஐஸ்வர்யமும் கிட்ட கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

தீர்த்தம் கொண்டு சர்க்கரை பொங்கல், பழங்கள், பால் மற்றும் கொண்டாய் கடலைகளை கடவுளுக்கு நெய்வேத்யம் செய்யுங்கள்.

பின் ஒரு புது துணியில் முளை விட்ட கடலைகளை கட்டி வெற்றிலை பாக்குடன் வைத்து, நெய்வேத்யம் செய்த சர்க்கரை பொங்கல் சேர்த்து சுமங்கலிகளுக்கு கொடுக்கலாம்.

இவ்வாறு செய்து வர, மகா லக்ஷ்மி நம் வீடு தேடி வருவாள்.

முளை கட்டிய கடலைகள், சகல சௌபாக்ய வாழ்க்கையின் நம்பிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.


Aanmigam
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top