• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ராமேஸ்வரம்-தில ஹோமம்.

kgopalan

Active member
சாரதா திலக கல்போக்த தில ஹோமம்..
ஸத் புத்ர பாக்கியம் வேண்டி பித்ரு சாப பரிஹாரமாக செய்யும் சாரதா திலக கல்பத்தில் உள்ள தில ஹோம விதி
பல ஜன்மங்களாக சேர்த்த பாபம் பித்ரு த்ரோகம் பித்ரு சாபம் ஸர்ப்ப வகைகளை வதைத்தல் குருவை த்வேஷித்தல் ப்ராணிகளின் முட்டைகளை அபகரித்தல் மிருகங்களை வதைத்தல் பாபங்களை உளமறிந்து செய்தல் சிவ
விஷ்ணு சொத்துகளை அபகரித்தல் இரக்கமே இன்றி கர்பிணியின் கர்பத்தை கலைக்க செய்தல் ஆகிய தோஷங்களால் நற்குணவான்களான புத்ரர்களை பெறும் பாக்கியம் அகன்று விடுகிறது.
சனிகிழமை அல்லது பரணி நக்ஷத்ரம் சனி தசையிலோ; அஷ்டம சனி நடக்கும் போது இதை செய்யலாம்.
குளிகன்=மாந்தி இருக்கும் ராசியில் ஹோமம் செய்வது உத்தமோத்தமம்.
அதி காலையில் எழுந்து கர்த்தா ஸ்நானம் செய்து மடி உடுத்தி ஸந்தியா வந்தனம் காயத்ரி ஜபம் செய்து ஒளபாஸனம் செய்து தயாராக இருக்கவும்
வீட்டை பசுஞ்சாணியால் மெழுகி கோலம் போட்டு வாழை மர தோரணங் கட்டி மண்டபம் அலங்கரித்தல்; நெல் அரிசி உளுந்து இவற்றால் ஸ்தண்டிலம் அமைத்தல்; ; எள்ளினால் மண்டலம் அமைத்தல் ;கும்ப ப்ரதிஷ்டாபனம்.
பர்மிஷன்== அநுக்ஙை
--------------ஏபிஹி ப்ராஹ்மனை ஸஹ சாரதா திலக கல்போக்த ப்ரகாரேன ப்ராச்யி—உதீச்யாங்க கோதானம்; வைஷ்ணவ சிராத்தம்; நாந்தி சிராத்தம்; தச தானம்; ப்ராஹ்மண போஜனம் ஸஹிதம் தில ஹோமாக்யம் கர்ம கர்த்தும் யோக்கியதா ஸித்திம் அநுக்ரஹான..
விக்னேஸ்வர பூஜை; புண்யாக வசனம்; கோ தானம்; மட்டை தேங்காய்; வைஷ்ணவ சிராத்தம்; நாந்தி சிராத்தம் புண்யாஹ வசனம்; ஆசார்யன் ருத்விக் வரணம்; அக்னி கார்யம்; அக்னிக்கு தென் கிழக்கே நவதான்யங்கள்.
அவற்றின் மேல் எட்டு நீல ( பட்டு ) வஸ்த்ரங்கள்; அதன் மீது தேங்காய். அதன்மீது யம தர்ம ராஜன் இரும்பாலான ப்ரதிமை இதற்கு கிழக்கே வாழைபழத்தின் மீது வெள்ளியிலான ஸ்த்ரீ ப்ரதிமை; புருஷ ப்ரதிமை;
தெரியாத முன்னோருக்காக ப்ரேத ப்ரதிமை வைத்து தெற்கு பக்கத்திலிருந்து ஆரம்பித்து பூஜை செய்க விதிப்படி புருஷ ப்ரதிமை தெற்கேயும் ஸ்த்ரீ ப்ரதிமை மத்தியிலும் அக்ஞாத குல பித்ரு வடக்கேயும் இருக்க வேண்டும்.
யமதர்மராஜன் ஆவாஹணம்; ப்ராணப்ரதிஷ்டை; ப்ராசீனாவீதி ப்ரேத ப்ரதிமைகளில் ஆவாஹணம். உபசார பூஜைகள்.
வடக்கே கும்ப ஸ்தாபனம். லக்ஷமி நாராயணர்-ப்ரதிமை ஆவாஹனம் ;ப்ராண ப்ரதிஷ்டை 16 உபசார பூஜைகள்; கும்பத்திற்கு தெற்கு பக்கத்தில் வஸ்த்ரத்தின் மேல் காம்தேனு ப்ரதிமையில் ஆவாஹனம் 16 உபசார பூஜைகள்;
காமதேநுவிற்கு தெற்கு பக்கத்தில் பத்ர காளி ப்ரதிமையில் தேவி ஆவாஹனம் 16 உபசார பூஜை; இதற்கு தெற்கு பக்கத்தில் சனைஸ்சரன் ஆவாஹனம் 16 உபசார பூஜை; பத்ர காளிக்கு கிழக்கு பக்கத்தில் நாகராஜ பிரதிமையில் ஆவாஹனம். 16 உபசார பூஜை;.
பத்ர காளீ மூல மந்திர ஜபம்.அங்கன்யாசம் கரன்யாசத்துடன் ஓம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஸ்ட்ரே காளராத்ரே ப்ரத்யங்கிரே ஹூம் பட்.; மாம் ரக்ஷ ரக்ஷ மம சத்ரூன் பாதய பாதய துஷ்ட கிரஹாம் ச ஸம்ஹர ஸம்ஹர ஹூம் பட் ஸ்வாஹா.
இங்கு சத்ரூன் என்பது உங்கள் உடலிலுள்ள காமம் க்ரோதம் மோஹம் மதம், மாத்சரியம் டம்பம் லோபம் முதலியவைகள் தான்..
பிறகு ஸர்ப்ப ராஜன் மூல மந்த்ர ஜபம் ந்யாஸங்களுடன்
மூல மந்திரம்:-ஸர்ப்ப ராஜாய வித்மஹே ஸஹஸ்ர பணாய தீ மஹி தன்னோ அநந்தஹ ப்ரசோதயாத். ஸெள:ஸ்ரீம் க்லீம் பவ சரணம் ஸ்வாஹா.
ஸாம் என்று தொடங்கும் ஷடங்க ந்யாசம் செய்க; நமோ அஸ்து என்ற மந்திரத்தால் 16 உபசார பூஜை.
அடுத்து ஆச்சார்யர் ப்ரஹ்ம வரணம் தொடங்கி முகாந்தம் வரை செய்வார் .அக்நெள----இமம் யம---யமாய தர்ம ராஜாய—ஹோம குண்டத்தில் ஆவாஹனம் 16 உபசார பூஜை பிறகு ஸமித்து—அன்னம்-ஆஜ்யங்களினால் ஹோமம்,; உப ஹோமம்;
பிறகு கும்பத்தை தர்பை கட்டால் தொட்ட வண்ணம் மற்ற ருத்விக்குகளுடன் வாத்யாரும் சேர்ந்து பின் வரும் மந்திரங்களை ஜபம் செய்ய வேண்டும்.
நான்கு வேத ஆரம்ப வாக்கியங்கள்; திக்பாலகர்கள் மந்திரங்கள்; ர்க்ஷோக்ன மந்திரம். யமம் யோ வித்யாத் என்று தொடங்கும் யம ஸூக்தம்; ருத்ராத்யாயாம்; சமகம், புருஷ ஸூக்தம் விஷ்ணு சூக்தம்;ருத்ர
ஸூக்தம்.துர்கா சூக்தம், ஸ்ரீ ஸூக்தம் பூமி நீளா ஸூக்தம் ம்ருத்யு ஸூக்தம் ருசாம் ப்ராசி பஞ்ச சாந்தியும் ஜபிக்க வேண்டும்.
தனியாக கருப்பு எள்ளை மட்டும் ஹோமம் செய்ய க்கூடாது. கறுப்பு எள்ளுடன் நெல் கலந்தே ஹோமம் செய்ய வேண்டும். நெய்யுடன் எள் கலந்து ஹோமம் செய்யலாம்.
காயத்ரீ த்ருஷ்டுப்; கீதா த்ருஷ்டுப்; அஷ்டாக்ஷர மந்திரம்; சுதர்சன மந்திர ஹோமம் செய்ய வேண்டும் யமன் உப ஹோமம் செய்து ஸம்பாதம் செய்
ஒவ்வொரு ஆஹூதிக்கும் யம தர்மராஜ ப்ரதிமை மீதும் மூன்று வெள்ளி ப்ரதிமை மீதும் ஸம்பாத ஹோமம் செய்ய வேண்டும் ஒவ்வொரு ஆஹூதி ஹோமம் செய்தவுடன் நெய் கரண்டியை ப்ரதிமைகள் மீது வைக்க
வேண்டும். ஹோமம் செய்து மீந்த நெய் இந்த ப்ரதிமைகள் மீது சொட்ட வேண்டும். இதற்கு ஸம்பாத ஹோமம் என்று பெயர்.

ஸ்விஷ்டக்ருத் ஹோமம் ப்ரஹ்மா உத்வாஸனம்; யமனுக்கும் வர்கத்வய பித்ருக்களுக்கும் உத்தராபோஜனம்.
ருசாம் ப்ராசி—பஞ்ச சாந்தியும் ஜபம்; புநஹ் பூஜை கர்பூர ஹாரத்தி மந்திர புஷ்பம் ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள்; பலி; பிண்ட ப்ரதானம். குசோதகம்.அக்னி உபஸ்தானம்; கும்பம் உத்வாஸநம்; கர்த்தாவுக்கும் பத்நிக்கும் அபிஷேகம்;
ஸ்நானத்திற்கு பிறகு கர்த்தா மடி வஸ்த்ரம் கட்டிகொண்டு வந்து ஆசாரிய ருக்கு வஸ்த்ர தானம்; மற்ற தானங்கள். காமதேநு; யம தர்மராஜா ப்ரதிமை ;மாவாலான காமதேநு தானம்; எள்ளாலான காமதேநு தானம்;
நாக ப்ரதிமை தானம்; ஒவ்வொரு தானத்திற்கும் தக்ஷிணை கொடுக்க வேண்டும் லக்ஷமி நாராயண ப்ரதிமை தாநம்; ; மறுபடியும் பசு தானம்;-==மட்டை தேங்காய்.; தச தானம்; வைஷ்ணவ சிராத்தம்;
தச தானமென்பது:-== தங்கம்; வெள்ளி; பூமி; பசு; அரிசி;; எள்; வெல்லம். நெய் உப்பு;; வஸ்த்ரம்=9+5 வேஷ்டி; இவைகளை தானம் மந்திரம் சொல்லி கொடுக்க வேண்டும். இவைகளுடன் தக்ஷிணயும் நெய் உப்பு; எள்ளு; அரிசி வெல்லம் இவைகளுக்கு வைத்துகொள்ள பாத்திரங்களும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
பிறகு ராமேசுவரத்திலிருந்து ஜீப்பில் தநுஷ்கோடி செல்ல வேண்டும். 18 கிலோ மீட்டர் தூரம். முதல் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் ரோடு உள்ளது. பிறகு பத்து கிலோமீட்டர் தூரம் மணலில் செல்ல வேண்டும்.
ஆகந்த பிதரஹ; பூயாஸ்த; யேஸமாநாஹா; +கல்பதாம்; ;யேஸ ஜாதாஹா + ஸதகும் ஸமாஹா ப்ரேத+மதந்தி: உத்திஷ்டத பிதரஹ+தேவதாஸு; வாஜே வாஜே +யாநைஹி; ஆகிய மந்திரங்கள் ஜபம்; தெற்கு முகமாக பார்த்து
இருந்துகொண்டு தம்பதியர் வாய்விட்டு ஓம் தத்ஸத் என்று கூறி மூன்று வெள்ளி ப்ரதிமைகளையும் ஜலத்தில் விட்டு விட வேண்டும் ஸ்நானம் செய்ய வேண்டும் ராமேசுவரம் திரும்ப வேண்டும்
பல தானம் ருத்விக் தக்ஷிணை ஆசாரியர் தக்ஷிணை கொடுக்கவும். ஆசாரியருக்கு இரண்டு பசு மாடுகள் வழங்கிடுக. பிறகு சாப்பிடுக
 

Latest ads

Back
Top