• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தில பத்ம ஏகாதசி இத்யாதி

kgopalan

Active member
தில பத்ம துவாதசி. ஷட் தில ஏகாதசி 20-02-2024 & 21-02-2024.

தில ஷட் என்பது 6 என்றும் திலம் என்பது எள் என்றும் பொருள்படும். இப்படி 6 வகையான எள் பயன்பாடு ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது.



அன்னதானம் செய்யாத ஒரு பெண் எள் மட்டும் கொடுத்து சுவர்க்கம் புகுந்த கதை இந்த ஏகாதசிக்கு அடிப்படையாக அமைந்தது. அவரைச் சோதிக்க விஷ்ணு, ஒரு பிச்சைக்காரர் வேஷத்தில் வந்தார் என்றும் அப்போது அவர் மண் உருண்டை ஒன்றை மட்டுமே கலயத்தில் போட்டார் என்றும் கதை. அவர் சொர்க்கம் புகுந்தபோதும் தானம் என்ற ஒன்றைச் செய்யாததால் பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வறட்டி தட்டியதில் எள்ளும் கலந்ததாகவும் அது ஹோமத்தில் பயன்படுத்தப்பட்ட போது அந்தப் புண்ணியமே அவரைக் காப்பாற்றியது என்றும் கூறுவர்.



இந்த நாளில் விரதம் மேற்கொள்வோர் எள்ளை ஆறு விதமாகப் பயன்படுத்துவார்கள்.



1. எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொண்டு நீராடுவது.



2. எள் தானம் செய்வது.



3. எள்ளால் ஹோமம் செய்வது.



4. எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது.



5. எள் அன்னம் உண்பது.



6. எள் தானம் பெறுவது.



இப்படி 6 வகையான எள் பயன்பாடு ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது. இதனால் அநேகப் பாவங்கள் விலகுகின்றன என்றும் எள்தானம் செய்த அளவிற்கேற்ப அத்தனை ஆயிரம் வருடகாலம் சுவர்க்கத்தில் வசிக்கும் பேறு பெறுவர். முன்னொரு காலத்தில் பூலோகத்தில் பல தர்மங்கள் செய்த பெண்ணொருத்தி இறந்தபின் சொர்க்கம் சென்றாள்.



சொர்க்கத்தின் எல்லா வசதிகளும் அவளுக்குக் கிடைத்தாலும் உணவு மட்டும் கிடைக்கவில்லை. ஏனெனில் பூவுலகில் இருக்கும்போது அவள் அன்னதானம் செய்யவில்லை. ஒருவன் அன்னதானம் செய்யாமல் அவனால் தேவலோகத்தில் ஜீவிப்பது கூட கடினம். எனவே அவளது இக்குறையைத் தீர்க்க எண்ணி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பிச்சைக்காரன் வடிவில் சென்று அவளிடம் அன்னபிக்ஷை வேண்டினார். அதைக் கேட்டவள் ஆத்திரத்தில் மணலால் ஆனதொரு பிண்டத்தை அவருக்கு தானமளித்தாள். அதனை எடுத்துக் கொண்டு அவரும் வந்துவிட்டார்.



அதனைக்கொண்டு சுவர்க்கத்தில் ஒரு அழகான வீட்டை ஸ்ரீ கிருஷ்ணர் அமைத்தார். மணலால் ஆன பிண்டத்தை தானம் அளித்த பலனால் அவள் வாழ்வு முடிந்து சுவர்க்கம் வந்தபோது மாமரத்துடன் கூடிய வீடு இருந்தது. ஆனால் வீட்டினுள் தனம், தானியம், இருக்கைகள் ஏதுமின்றி அவள் அளித்த மண்ணைப் போலவே இருந்தது. அதனைக் கண்டவள் மிகவும் பயத்துடனும், கோபத்துடனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து பூவுலகில் இத்தனை விரதங்கள் கடைப்பிடித்து வந்தேன். ஆனால் எனது வீட்டில் ஏதும் இல்லாததற்கான காரணம் என்ன இறைவா? என்றாள்.



அவளிடம் ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கான காரணத்தைக் கூறிய போது, அதிலிருந்து மீள வழி என்ன என்று கேட்டாள். அப்போது அவளிடம், இப்போது உன் இல்லத்திற்கு உன்னைக் காண தேவஸ்த்ரீகள் வருவர். அவர்கள் வரும் வேளையில் கதவை அடைத்து, அவர்களிடம் இந்த ஷட்திலா ஏகாதசி மகாத்மியத்தைக் கேள். அவர்கள் கூறும் வரை கதவைத் திறக்காதே என்றார்.



அவளும் அப்படியே செய்தாள். அதனைக் கேட்ட அனைத்துப் பெண்களும் சென்றுவிட்டனர். சற்று நேரத்தில் அவளைக் காணும் ஆவலில் திரும்பி வந்த தேவஸ்த்ரீகள், அவளிடம் ஷட்திலா ஏகாதசியின் மகாத்மியத்தைக் கூறினர். பிறகு அதனைக் கேட்டு, கதவைத் திறந்தாள். அந்த வீட்டில் இருப்பது ஒரு கந்தர்வியோ, நாகரோ, இல்லாமல் ஒரு மானுடப்பெண் நிற்பது கண்டு வியந்து சென்றனர்.



அதன் பின்னர், அந்த பிராமணஸ்திரீ ஷட்திலா ஏகாதசி விரதத்தை நியமம் தவறாது கடைப்பிடித்தாள். அதன் பலனாக அவளது உடல் தேவஸ்த்ரீகளைப் போன்று ஜொலித்தது. அவளது இல்லம் முழுவதும் தனம், தானியங்களால் நிரம்பி வழிந்தது. அவளது வீடு ஸ்வர்ண மயமான மாளிகையாக மாறி பேரொளியோடு மின்னியது. எனவே, பகட்டுக்காக இல்லாமல் பக்தியுடன் ஒருவர் இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால் இறுதியில் சுவர்க்கமும், எல்லாப் பிறவிகளிலும் ஆரோக்கியமும், இறுதியில் முக்தியும் கிடைக்கும்.



எவரொருவர் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் அவருடைய பாவங்களிலிருந்து விடுபடுகிறார். மேலும் இந்த விரதத்தினால் அவரை எந்தவொரு தீய சக்தியும், தீய சகுனங்களும் பின்தொடராது என்றும் அவரது இல்லத்தில் வறுமை என்ற பேச்சுக்கே இடமின்றி தனம், தானியங்களால்



..நிரம்பி வழியும். அது மட்டுமின்றி, இந்த விரதத்தினை தான, தர்மங்களோடு கடைப்பிடிப்பவருக்கு என்றும் உணவுப் பஞ்சமே வராது என்றும் அவர்கள் பல பிறவிகளிலும் நித்ய ஆரோக்கியத்துடன் விளங்குவதோடு இறுதியில் அவர்கள் முக்தி அடைவர் என்று புலஸ்திய முனிவர் தாலப்ய முனிவருக்குக் கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் குறிப்பிடுகிறது.



20-2-2024 ஏகாதசிக்கு ஷட் திலா ஏகாதசி என்று பெயர்.. கருப்பு எள்ளை இன்று ஆறு விதமாக உபயோக படுத்த வேண்டும்.



கருப்பு எள்ளை அறைத்து உடலில் பூசிக்கொண்டு கறுப்பு எள் கலந்த நீரில் ஸ்நானம் செய்தல்



கறுப்பு எள்ளால் ஹோமம் செய்தல். கறுப்பு எள் கலந்த நீரால் தர்ப்பணம் அல்லது தானம் செய்தல்.



கறுப்பு எள் அல்லது நல்ல எண்ணைய் தானம் செய்தல்.



துவாதசி அன்று எள்ளு சாதம் சாப்பிட வேண்டும்.



ஆகாரம் எதுவும் சாப்பிடாமல் மேற்கூறிய வாறு செய்து விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபட்டு வேண்டுதல் செய்தால் பாபங்கள் பல நீங்கும் .



ஸ்ம்ருதி கெளஸ்துபம்- 480 படி மறு நாள்21-02-2024 துவாதசி அன்று நல்ல எண்ணைய் விளக்கு விஷ்ணு சன்னதியில் ஏற்றி எள்ளு சாதம் நிவேதனம் செய்து



விநியோகம் செய்வதால் பாபங்கள் போம்.எல்லா சுகங்களும் கிடைக்க பெறும்.



மாக மாத சுக்ல பக்ஷ துவாதசி திதியன்று தான் விஷ்ணு பகவான் கடுந்தவம் புரிந்து தனது உடலிலிருந்து கறுப்பு எள்ளை வெளிபடுத்தினார்.





மாசி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு ஷட் தில ஏகாதசி என்று பெயர். திலம் என்றால் கருப்பு எள். தில ஸ்நாயீ திலோத்வர்த்தீ தில ஹோமீ திலோதகீ தில புக் தில தாதா ச ஷட் திலா: பாபா நாசன:



ஸ்ம்ருதி கெளஸ்துபம் 480:- மாகே து சுக்ல துவாதசியாம் யதோ ஹி பகவான் புரா திலான் உத்பாத யாமாஸ தப: க்ருத்வா ஸுதா ருணம் தில தைலேன



தீபாஸ் ச தேயா: தேவ க்ருஹேஷு ச நிவேதயேத் திலா நேவ.



13-02-2024 மாகமாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தியன்று சிவனும் பார்வதியும் சேர்ந்த படத்தில் பகலில் உபவாசம் இருந்து மாலையில் மல்லிகை பூவால் 16 உபசார பூஜை, ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்து பூஜித்து சாப்பிட குறைவற்ற பணம் கிடைக்கும்





என்கிறது நிர்ணயஸிந்து என்னும் புத்தகம் 162ம் பக்கத்தில் மாக சுக்ல சதுர்த்தியாம் து குந்த புஷ்பைஹி ஸதாசிவம் ஸம்பூஜ்ய யோ ஹி நக்தாஸ்ரீ ஸம்ப்ராப்னோதி ஸ்ரீயம் நர: கோவிலிலோ வீட்டிலோ செய்யலாம். மல்லிகை பூவிற்கு குந்த புஷ்பம் என்று ஒரு பெயருமுண்டு.





14-02-2024 .ஸ்ரீபஞ்சமி:- மாக மாதம் சுக்ல பஞ்சமியில் மல்லிகை பூவால் அர்ச்சிக்க வேண்டும் மஹா விஷ்ணுவையும் மஹா லக்ஷ்மியையும். ரதி மன்மதன் படம் வைத்து பூஜிக்க வேண்டும். கரும்பு துண்டத்திலும் ரதி மன்மதன் ஆவாஹனம்



செய்து பூஜிகலாம். 16 உபசார பூஜை, இனிப்புகள், கார பக்ஷணங்கள், நைவேத்யம்.பாட்டு,





நடனம், பஜனைகள், நாம ஸங்கீர்த்தனம். செய்வதால் எல்லா செல்வங்களும் வந்தடையும்.புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு பரிசு கொடுத்து ஸந்தோஷ படுத்த வேண்டும். மாக மாஸே ந்ருப ஶ்ரேஷ்ட சுக்லாயாம் பஞ்சமி திதெள ரதி



காமெள து ஸம்பூஜ்ய கர்த்தவி ஸு மஹோத் ஸவாஹா. (ஸ்ம்ருதி கெளஸ்துபம்-47.)

ஸரஸ்வதி தேவி அவதரித்த நாள் இன்று. மல்லிகை பூவால் அர்சித்து வழி படலாம்.



இதற்கு தான் வஸந்த பஞ்சமி எனப்பெயர்.





ப்ருஹ்ம யக்ஞம்.



கிழக்கு,வடக்கு,வடகிழக்கு இவைகளில் ஒரு திக்கை நோக்கிச் செய்யலாம்.



ஹோமத்திற்கு பிறகு அல்லது மாத்யானிக ஜபத்திற்கு பிறகோ

தேவ தர்பணத்திற்கு பிறகு,வைஸ்வதேவத்திற்கு பிறகேனும் செய்யலாம்.

வேதம் ஒரு ப்ரஸ்னமோ,சில அனுவாகங்களோ முதல் நாள் விட்டதற்கு மேல் தொடங்கி ஜபிக்க வேண்டும்.



இதற்கு அநத்யயன தினம் பார்க்க வேண்டாம்.தர்ப்பாசனம் அல்லது தடுக்கு கீழே போட்டுக்கொண்டு அதன் மேல் உட்கார்ந்து ஜபிக்கவும்.கம்பளத்தில் உட்கார்ந்து சொல்லக்கூடாது.



காலை நேரம் தவறிப்போய் விட்டால் மாத்யாநிகம்,வைஸ்வதேவத்திற்க்கு பின்னும் தான் காலமாகும்.அத்யயனமே தபஸ்.தபஸே அத்யயனம். .அத்யயனம் பண்ணாதவன் புருஷ ஸூக்தத்தையாவது பகவத் த்யானத்துடன் சொல்ல வேன்டும்.அல்லது காயத்திரியையாவது பத்து தடவை ஜபிக்க வேண்டும்.



வேத பாராயணம் ஆனதும் இதிகாஸ புராணம் படிக்க வேன்டியது.இந்த யக்ஞத்தில் ப்ருஹ்மம் என்ற வேதமே ஆஹூதி த்ரவ்யமாக ஹோமம் பண்ணபடுகிறது. .அத்யயனமே வஷட் காரமாகும்.அதனால் தான் இதற்கு அநத்யயன தோஷமே கிடையாது.



ச்ருதியும் இந்த யக்ஞத்திற்கு மேகமே ஹவிஸ் வைக்கும் பாத்ரம்,மின்னலே அக்னி;மழை ஹவிஸ்;இடியே வஷட் காரம்;மேக கர்ஜனை அனுவஷட் காரம்;



வாயுவே சரீரம்.அமாவாஸ்யையே ஸ்வஷ்டாகாரம்;



இவைகளை இப்படி அறிந்து மழை பெய்யும் போதும்;இடி இடிக்கும் போதும்;.மேகம் கர்ஜிக்கும் போதும் காற்று வீசும் போதும்,அமாவாசையின் போதும் ஒரு ரிக்கையேனும் ஜபித்தாலும்,அல்லது ஸத்யம் தப:என்ற மந்த்ரதையேனும் ஜபித்தாலும் ப்ருஹ்ம யக்ஞ அத்யயன பலனை பெறுகிறான் என்கிறது வாஜஸநேயி ப்ராஹ்மணம்.



தேவதார்ச்சனம்,பாராயணம்,காம்ய ஜபம்,யாகத்திற்கு,வேதாங்கங்களை அப்யசிப்பதற்கு,ப்ருஹ்ம யக்ஞத்திற்கும் அனத்தியயன தோஷமில்லை.



ப்ரதி தினம் ஒரு ப்ரச்னம் சொல்லுபவன் அனத்தியயன தினத்திலும் சொல்லலாம்..பிறப்பு இறப்பு தீட்டு உள்ள போது மட்டும் சொல்ல வேண்டாம்.



ப்ருஹ்ம யக்ஞத்திர்கு பிறகு ராமாயணம்,பாகவதம்,பகவத் கீதை தினம் ஒரு அத்யாயமாவது படிக்க வேண்டும்..இரவிற்குள் செளகரியபட்ட போதாவது படிக்கவும்.



அந்தணர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினசரி சிறிதளவாவது சொல்வதற்குத்தான் ப்ருஹ்ம யக்ஞம் என்று பெயர்.



தினசரி காலையில் ஸந்தியாவந்தனம்,ஓளபாசனம் பூஜை முதலிவற்றை முடித்துவிட்டு குரு முகமாக கற்றுக்கொண்ட ஶ்ரீ ருத்ரம்,சமகம்,புருஷ சூக்தம்,ஶ்ரீ ஸூக்தம்,துர்கா ஸுக்தம்,பாக்கிய ஸூக்தம் போன்ற வேத பாகங்களை சிறிதாவது சொல்ல வேண்டும்.,அல்லது காயத்ரியாவது சொல்லலாம்



ஆசனத்தின் மீது அமர்ந்து கொன்டு கிழக்கு முகமாக வலது காலை இடது துடை மேல் போட்டுக்கொன்டு.வேதம் சொல்ல வேண்டும்.



வேதம் கற்றவர்கள் முதல் நாள் முடிவடைந்த பகுதியில் தொடங்கி,தொடர்ந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும்..இதற்கு பிறகு தேவர்கள்,ரிஷிகள்,பித்ருக்களுக்கு ஜலத்தால் தர்பணம் செய்ய வேண்டும்.



இதுவே ப்ருஹ்மயக்ஞம் எனப்படும்.தேவ,ரிஷி பித்ரு அருளை மிக சுலபமாக பெற்று தரும் இந்த ப்ருஹ்ம யக்ஞ தர்பணம் தினமும் செய்ய வேண்டும்.



க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய ஆரண்யகம் சொல்கிறது:உத்தமம் நாககும் ரோஹதி;உத்தம:ஸமாநானாம் பவதி;யாவந்தகும் ஹவா:அக்ஷய்யஞ்சாபபுநர் ம்ருத்யுஞ் ஜயதி;ப்ருஹ்மண:ஸாயுஜ்யம் கச்சதி என்று.



தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்பவர் இறந்த பின்னர் ஸ்வர்க்கம் செல்வர்;



இவ்வுலகில் ஜீவித்திருக்கும் வறை தமக்கு சமமானவர்களுக்குள் சிறந்தவராக இருப்பர்;;செல்வம் நிறைந்த பூமி முழுவதும் தானம் செய்த பலனுக்கு அதிகமாகவே பலன் கிடைக்கும்.;துர் மரணம் வராது;ஸ்வர்க்கத்தை அடைவான்;ப்ருஹ்ம ஸாயுஜ்யம் என்னும் முக்தி அடைவான் என அர்த்தம்.



வேதம் சொல்வது,ப்ருஹ்ம யக்ஞத்தின் முதல் பகுதி...மாத்யானிகம் செய்த பிறகுத்தான் ப்ருஹ்ம யக்ஞ தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.வேதம் சொல்வதை காலையிலும் செய்யலாம்.மாத்யானிகம் செய்த பிறகு வேதம் சொல்லி விட்டு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யலாம்



.மாத்யானிகத்திற்கு முன்பு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யக்கூடாது.ப்ருஹ்மசாரி உள்பட அந்தணர் எல்லோரும் தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.இதனால் மறைந்த முன்னோர்களுக்கு தேவையான ஆஹாரம் கிடைக்கிறது.சந்தோஷ மடைகிறார்கள்.(.யஜுர் வேதம்).



முறையாக நான்கு வேதங்களின் ஆரம்பத்தையும் சொல்லிவிட்டு அதன் முடிவில் தேவ ரிஷி பித்ரு தர்பணம் கரிஷ்யே என்று சொல்லி தர்பணம் செய்கிறோம்.;இவ்விரண்டும் சேர்ந்ததே ப்ருஹ்ம யக்ஞம்.



பித்ருக்கள் என்பவர் பல வகை குழுவாக இருக்கிறார்கள்.இவர்களில் நித்ய(திவ்ய)பித்ருக்கள் என்பவர் சிலர்.தினசரி ஸ்நானம் செய்த பிறகு குடுமி முடியை முன் பக்கமாக விட்டுக்கொண்ட ஜலம் பூமியில் விழுவதை குடிக்கிறார்கள்.வஸ்த்ரம் பிழியும் தண்ணீரையும் குடிக்கிறார்கள்.



ப்ருஹயக்ஞம் பித்ரு தர்பண நீரையும் இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.



அமாவாசை முதலிய நாட்களில் அதிவ்ய பித்ருக்களுக்கு தர்பணம்செய்கிறோம். தந்தை உள்ள இல்லாத எல்லோரும் பூணல் இடம் போட்டுக்கொண்டு ப்ருஹ்மயக்ஞ தர்பணம் செய்யலாம்..இதனால் தர்பணம் செய்பவருக்கும் அவரின் பெற்றோருக்கும் ஆயுள் அதிக மாகும்.



ப்ருஹ்மோபதேசம்(பூணல் கல்யாணம்)முதல் கடைசி காலம் வரை தினமும் ப்ருஹ்மயக்ஞம் அந்தணர்கள் செய்ய வேண்டும்.



அமாவாசை தர்பணம் செய்த பிறகு ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.ச்ராத்தம் முடிந்த பிறகு பின்ட பித்ரு தர்பணம் செய்த பிறகு பரேஹணி தர்பணம் செய்த பிறகு ப்ரஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.







ப்ருஹ்மயக்ஞத்தில் கூறப்படும் ஸோம பித்ருமான் முதலான பித்ருக்கள் நித்ய பித்ருக்கள் ஆவார்கள்.ப்ருஹ்மசாரி உள்பட பெற்றோர்கள் இருப்பவர்களும் தர்பணம் செய்யலாம்.ஆசார பூஷணம் பக்கம்168ல் அபஸவ்யம் த்விஜாக்ர்யாணாம் பித்ர்யே ஸர்வத்ர கீர்த்திதம் ஆப்ரகோஷ்டந்து கர்தவ்யம் மாதாபித்ரோஸ்து ஜீவதோ:



என்ற சாஸ்த்ர வாக்யபடி,தாய் தந்தை யுள்ளவர்கள் ப்ருஹ்ம யக்ஞம் போன்ற கர்மாக்களில்,பித்ருக்களுக்கு தர்பணம் செய்யும்போது,பூணலை இடமாக போட்டுக்கொள்ள வேண்டும்.



ஆனாலும் பூணல் முழங்கைக்கு மேல் போகாமல் இருக்குமாறு இடம் போட்டுக்கொண்டு தர்பணம் செய்ய வேண்டும் தந்தை இல்லாத எல்லோரும் முழுமையாக பூணலை இடம் போட்டுக்கொள்ளலாம்..

ப்ருஹ்மஸ்ரீ நன்னிலம் ராஜ கோபால கணபாடிகள் ( வைதீக ஸ்ரீ) எழுதிய ஸந்தேஹ நிவாரணி -பாகம்-5 பக்கம் 86ல் நித்ய (திவ்ய ) பித்ருக்களுக்கு தான் ப்ருஹ யஞ்யம் செய்கின்றோம். அமாவாசை முதலிய நாட்களில் அதிவ்ய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்கிறோம். ஆகவே தந்தை உள்ள இல்லாத எல்லோரும் ப்ருஹ்ம யக்ய முடிவில் தேவ ரிஷி தர்ப்பணம் செய்த பிறகு பூணலை இடம் போட்டுக்கொண்டு பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் . இதனால் தர்ப்பணம் செய்பவருக்கும் அவரது பெற்றோருக்கும் ஆயுஸ் அதிகரிக்கும் என்று எழுதி இருக்கிறார்.



10-02-2024 முதல் 18-02-2024 வரை சியாமளா நவராத்திரி. லலிதா ஸஹஸ்ரநாமம் , கட்கமாலா, தேவி ஸ்தோத்ரங்கள். தேவி பாகவதம், தேவி மஹாத்மியம் படிக்கலாம்..



aekadasi advice.









The following informs us as to why we need to avoid grains on Ekadashi days.















It is stated in the Padma Purana:











bhuyo-bhuyo drdha vani sryatam syata janah



na bhoktavyam na bhoktavyam na bhoktavyam harer dine











“O human beings, please listen, I tell you repeatedly with steadfast determination, please never eat any grains on the Day of Lord Hari (Ekadasi day, the Lord’s appearance day like Janmastami day etc.). Please never eat any food grains even by mistake on the Day of Lord Hari. Please do not eat grains on the Day of Lord Hari even if forced or compelled to do so.”























The reason to not eat food grains on Ekadasi is stated in the Vrihan Naradiya Purana thus:











yani kani ca papani brahma hatyadikani ca



annam asritya tiathanti samprapte hari vasare











“Every type of sin in this world, including the grievous sin of killing a Brahmana, reside in food grains on the Day of Lord Hari (Ekadasi and other fasting days). If grains are eaten on fasting days sins enter the body of that human being.”











The Hari Bhakti Vilasa states:











brahmacari grhastho va vanaprastho ‘thava yatih



ekadasyam hi bhunjano bhukte go-mamsam eva hi











“Whether a person is Brahmachari (unmarried celibate student), Grihastha (householder), Vanaprasthi (retired, elderly), Sanyasi (renounced person) or any other social order, if they eat food grains on Ekadasi, they acquire the same sin as that received by eating cow’s meat.”











The Skanda Purana also states:











matr ha pitr has caiva bhratr ha guru has tatha



ekadasyas tu ya bhunkte visnu-lokac cyuto bhavet











“Those who eat grains on Ekadasi and on the Day of Lord Hari (including Janmastami, Gaura Purnima etc.) obtain the sin equal to killing one’s own mother, own father, own brother and own Guru; and they cannot reach the spiritual world, which is why one should never eat grains on fasting days.”











One may think or say that fasting on Ekadasi days and the Lord’s appearance days are meant only for Vaisnava devotees and not for worshippers of Lord Siva or Durga etc. But the Padma Purana informs such people:











na saiva na ca saurohasaun na sakta gana sevakah



yo bhunkte vasare visnor jneyah pasvadiko hi sah











“Whether one is a follower of Lord Siva, the goddess Durga, Kali, Surya (sungod), Ganesa, Bhairava or any other demigod, they should avoid







eating grains on the fasting days of Lord Hari (Ekadasis and other fasting days of Lord Hari). If one does not rigidly follow this rule and eats grains on fasting days they are considered worse than an animal.”











The Brihan Naradiya Purana states:











brahma-hatyadi papanam kathancin niskrtir bhavet



ekadasyat tu yo bhunkte niskrtir nasti kutracit











“By rigidly following religious and ritualistic processes one may become free from grievous sin like killing a Brahmana, but it is impossible to eliminate the sins of those who eat grains on Ekadasi days.”











It is written in the Skanda Purana that Lord Yamaraja (superintendent of hell) told his messengers not even to go near the immediate three generations of those who fast on Ekadasi days, even if they are lowborn and full of sin.







. But even if a pious person is learned in the four Vedas and performs rituals and is pure, but eats grains on Ekadasi days, they must be taken to hell to suffer.







If grain filled prasadam is given to a person on a fasting day it should be kept for consumption on the next day, but should not be consumed on the fasting day. Only fruits, roots (such as potatoes, sweet potatoes, tapioca, sago etc.) water, milk products, nuts, rock salt,







Singhara flour, Kutu flour, Sama Rice (found in the Indian grocery stores) and prescribed medicines can be consumed on fasting days.
 

Latest ads

Back
Top