எங்க பிரெண்டு ராமசாமி ஐயரோட ஞாபக மறதி உலக பிரசித்தி.. அவரும் என்னவெல்லாமோ டிரீட்மெண்டேல்லாம் பண்ணிப் பார்த்துட்டார் இப்போ யோகா கிளாஸ் கூட போயிண்றுக்கார்..ஹுஹும்.. ஞாபக மறதிய அவர் மறந்தால்தான் உண்டு..அவர் ஒரு நாள் அடிச்ச கூத்து இருக்கே... அம்மாடி...
“ராமசாமி ஐயரும் ..சைக்கிளும்”
ஏங்க.....கொஞ்சம் மார்கெட்டுக்ப் போய் காய் ஏதாவது வாங்கிட்டு வரிங்களா.. நீங்க வாங்கிட்டு வந்துதான் சமையல் செய்யணும்.. ரெங்கநாயகி மாமி...
அதுக்கென்ன ரிட்டையர் ஆனப்புறம் ஏதாவதுவேலை வேண்டாமா.. ராமசாமி அய்யரோட பெருந்தன்மை..
ஐயையோ.. அப்பாவ மார்கெட்டுக்கு அனுப்பாதேம்மா.. அப்பாவோட ஞாபக மறதியப் பத்தி நமக்கெல்லாம் தெரியும் ..இவர் மார்கெட்டுக்கு போறதுக்கு பதிலா சலூனுக்கு போய் நிப்பார் வேண்டாம்மா.. நான் போயிட்டு வரேன் அம்மா.. மகள் நிர்மலாவின் கவலை..
ராமசாமி ஐயரோட சுய கொளரவம் .. அதெல்லாம் ஒழுங்கா செய்வேன்.. நீ வேணும்னா பாரேன்.. பெண்ணுக்கு பதில் சொல்லிட்டு கிளம்பியாச்சு.. வாசல் திண்ணையில் வெச்சிருந்த சைக்கிளை எடுத்துகிட்டு.. [ மார்கெட்டுக்குப் போறதுக்கு பை, பர்ஸ் ரெண்டையும் எடுத்துக்க மறந்தாச்சு !]
சைக்கிளை திண்ணய விட்டு இறக்கி ரோடுக்கு வந்தபிறகு தெரிஞ்சது சைக்கிளோட பின்னால வீல்ல காத்து இல்லேன்னு.. அடாடா சரி சைக்கிள் கடைக்காரர் பக்கத்திலதானே இருக்கார்ன்னு சைக்கிளை தள்ளிண்டு போய் கடைக்காரரே கொஞ்சம் காத்து அடிச்சு குடுங்கன்னு கேட்டதுக்கு ..சார் பார்த்தா டயர் பஞ்சர் மாதிரி இருக்கு ..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இதோ டீ சாப்பிட்டு வந்துடறேன்னு ...பக்கத்தில இருக்கற டீ ஷாப்புக்கு போயாச்சு.. ராமசாமி ஐயரோட பதிலுக்கு வெயிட் பண்ணாம..
என்னடா இது சோதனைன்னு யோசிச்சபடியே நின்றிருந்த ...ராமசாமி ஐயரை ..என்ன ராமசாமி இங்க என்ன பண்ணிண்டிருக்கேன்னு கேட்டபடியே வந்து சேர்ந்தார் .அவரோட பால்ய நண்பர் ராமகிருஷ்ணன்..
ஒண்ணும் பெரிசா இல்லே .. மார்கெட்டுக்குப் போறேன் ..ராமசாமி ஐயரோட பதில்.. அட நானும் அந்த வழியாத்தான் போறேன் வா பேசிண்டே போகலாம்ன்னு ராமகிருஷ்ணன் சொன்னதுக்கு .. அதுவும் சரிதான்னு கிளம்பிட்டார். கிளம்பினவர் அங்க இருந்த ஒரு ஹெர்குலிஸ் சைக்கிளை எடுத்துக்கிட்டுராமகிருஷ்ணனோட கிளம்பிட்டார்..
சைக்கிளை பஞ்சர் ஓட்ட குடுத்தது சட்டன்னு ஞாபகத்துக்கு வரலே .சைக்கிள் கடையிலே சைக்கிள் விட்டது மட்டும் ஞாபகம் இருந்ததது . இவரோடதும் ஹெர்குலிஸ் சைக்கிள்தான் .அதனால வித்யாசம் தெரியல. சைக்கிள் கடைக்காரர் ரொம்ப மும்முரமா டீ ஷாப்பில அரசியல் பேசிண்றதபடியால் ராமசாமி ஐயர் எடுத்துண்டு போன சைக்கிளை கவனிக்கல.. கடைக்காரர் வாடகைக்கி குடுக்கறதுக்கா வெச்சிருந்த சைக்கிளைத்தான் ராமசாமி ஐயர் எடுத்து ராமகிருஷ்ணன் கூட சைக்கிளை தள்ளிண்டே பேசிண்டு மார்கெட்டுக்கு வந்து சேர்ந்தார்..
சரி நீ ..மார்கெட்டுக்கு போ.. நான் பஸ் ஸ்டாண்டு வரைக்கும் போற வேலை இருக்கு...ராமகிருஷ்ணன் கிளம்பிட்டார்...
மார்கெட்டுல காம்பவுண்டு சுவர் பக்கத்தில இன்னொரு சைக்கிள் இருந்தது.. நம்ம ஹீரோ கனகாரியமா தான் தள்ளிண்டு வந்த சைக்கிளைஅதுக்கு பக்கத்திலயே நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு.. சைக்கிளை பூட்டி சாவிய சட்டைப் பாக்கெட்டில் போட்டுண்டு மார்கேட்டுக்குள் நுழைஞ்சாச்சு..
மார்கெட்டில வலது பக்கம் இருக்கிற முதல் கடையில்தான் ராமசாமி ஐயர் கறிகாய் வாங்கறதுவழக்கம்..
கடைக்காரர் கன்னையன் சாருக்கு நல்ல பழக்கம்.. அதுவும் தவிர எல்லா கறிகாயும் அவர் கடையில ஒரே இடத்தில் கிடைக்கும் ..
தேவையான கறிகாய் எல்லாம் பொருக்கி எடுத்த அப்புறம் பார்த்தா வீட்டிலேந்து பை கொண்டு வரலே.. என்ன செய்யறதுன்னு தெரியலே.. கன்னயனே கேட்டார் ..என்ன சாமி பை கொண்டுவரலியா ..பரவாயில்லே நான் பை தரேன் அப்புறமா கொண்டுவந்து குடுங்கன்னு சொல்லி எல்லா கறிகாயையும் பையில் போட்டு குடுத்தார்.. பணம் குடுக்கணுமே .. ராமசாமி ஐயர் சட்டை பாக்கெட்டு பேண்டு பாக்கெட்டு எல்லாத்தையும் தடதடவி பார்த்துட்டு அசடு வழிய நின்னார்.. பர்ஸ வீட்டிலியே மறந்து வெச்சிட்டு வந்தாச்சு..
என்ன சாமி ..என்ன ஆச்சுன்னு கன்னையன் கேட்டதுக்கு..இல்லே பர்ஸ வீட்டிலயே வெச்சிட்டு வந்துட்டேன்.. வீட்டுக்குப் போய் பணம் எடுத்துண்டு வந்து கறிகாய வாங்கிக்கறேன்ன்னு ராமசாமி ஐயர் கிளம்ப..
அட என்ன சாமி.. இதுக்குப் போய் வருத்தப்படுறிங்க...இத்தனை வருஷமா நம்ம கடையிலதான் கறிகாய் வாங்குறிங்க.. நீங்க ஒண்ணும் ஏமாத்த மாட்டிங்க ..நீங்க வீட்டுக் போய் கறிகாய் எல்லாத்தையும் குடுத்துட்டு என் பை ..பணம் எல்லத்தையும் கொண்டுவந்து குடுங்கன்னு அனுப்பி வெச்சாறு..
நம்ம ஹீரோக்கு மனசில ரொம்ப வருத்தம்... ஏன்தான் இந்த ஞாபக மறதி இப்பிடித் தன்னை வாட்டுதோன்னு.. அந்த கவலையிலயே வெளியில வந்தவர் காம்பவுண்டு சுவருக்கு பக்கத்தில இருந்த சைக்கிளை எடுத்துண்டு வீட்டுக்கு கிளம்பியாச்சு.. தான் வந்த சைக்கிளை காம்பவுண்டு சுவருக்கு பக்கத்தில நிறுத்தி சைக்கிளைப் பூட்டி சாவிய சட்டைப் பாக்கெட்டில போட்டுண்டதை மறந்தாச்சு..
பாவம் இவர் எடுத்துண்டு ஜம்முனு வீட்டுக்கு கிளம்பிப் போன சைக்கிள் கறிகாய் கடை கன்னையனோடது.. எல்லருக்கும் தெரியும் அது கன்னையனோட சைக்கிள்ன்னு..அதனால அதை பூட்டி வைக்கிறது கிடையாது..
வீட்டுக்கு வந்ததும் ஏதோ யுத்தத்துக்கு போயிட்டு வந்தமாதிரி ..பெருமையா பாத்தியா நான் பத்திரமா போய் கறிகாய் எல்லாம் வாங்கிண்டு வந்திருக்கேன்னு பீத்திண்டு இருக்கும்போதே .. மகள் ..சைக்கிளை பார்த்துட்டு.. அப்பா இந்த சைக்கிள் ஏது..பார்த்தா புதுசா இருக்கேன்னு கேக்க.
நம்மஆளு..தலையசொறிண்சிண்டே..
மார்கெட்டிலேந்து எடுத்துண்டு வந்தேன்னு சொல்ல.. அவருக்கே குழப்பம் இது யாரோடதுன்னு
அப்பத்தான் வாசலிலே குரல் கேட்டது.. ..
சார்...இருக்காரான்னு ...வேற யாருமில்லே கறிகாய் கடைக்காரர்தான்.. கூட கடைப் பயனோட.. ஏன் சாமி இது உங்களுக்கே நல்லா இருக்கா.. ஏதோ பை இல்லேன்னு பையை குடுத்தேன்.. அப்புறம் பர்ஸ கொண்டுவரலேன்னு .. வீட்டுக்குப் போய் பணம் எடுத்துண்டு வாங்கன்னு சொல்லி அனுப்பினேன்.. நீங்க என்னடான்னா என் சைக்கிளைவேறதூக்கிட்டுவந்திட்டீங்ளே கறிகாய் கடை கன்னையன் கோபத்தில கத்தினது நாலு வீட்டுக்கு கேட்டிருக்கும். ராமசாமியின் மனைவி கன்னையனை சமாதானாம் பண்ணவேண்டியதாப் போச்சு.. இந்தாங்க கன்னையன் .. உங்களுக்கே தெரியும் சாருக்கு ஞாபக மறதி ஜாஸ்தின்னு .. அதனாலதான் இப்பிடி தப்பு நடந்து போச்சு.. கோவிச்சுக்காதிங்க.. இந்தாங்க பையும் ..கறிகாய் வாங்கினதுக்கு பணமும்..
அம்மா இனிமே சார எங்கேயும் தனியா அனுப்பாதீங்க.. நீங்க யாராவது கூட போங்க.. நான் வரட்டுமா.. ஒரு வழியா கன்னையனைஅனுப்பி வெச்சாச்சு..
அப்பா உங்க சைக்கிள் எங்கே மார்கெட்டுக்கு எப்பிடி போனிங்க.. நிர்மலா கேள்வி கேட்டு முடிக்கலே...
சார் இருக்காரான்னு கேட்டுக்கிட்டே சைக்கிள் கடைக்காரர் வந்துநின்னார்...
ஏன் சாரே என் கடை சைக்கிளை எங்க கொண்டு போய் விட்டிங்க ....வாடகைக்கி விடறுதுக்காக வெச்சிருந்த சைக்கிள் அது .. நல்லவேளை கடைப்பையன் நீங்க சைக்கிளை எடுத்துகிட்டு போறதைப் பார்த்துட்டான்.. இல்லேன்னா நான் சைக்கிளை காணோம்னு போலீஸ்ல புகார் குடுத்திருப்பேன்.. இந்தாங்க உங்க சைக்கிள் பஞ்சர் ஒட்டியாச்சு ..அதுக்கு காசு குடுங்க ..
ராமசாமி ஐயர் மெதுவா சட்டை பையிலேந்து சைக்கிள் சாவிய எடுத்து...இது உங்களுதான்னு பாருங்கன்னார்.. அமாம்..சாவி இங்க இருக்கு சைக்கிள் எங்கேன்னார் சைக்கிள் கடைக்காரர்..
அதுவா... மார்கெட்டுக்குப் போய் அங்க காம்பௌண்டு செவுத்துக்கு பக்கத்தில வெச்சேன்னு நினைக்கிறேன்னார். அப்பிடியா சரி நான் பையனை அனுப்பி எடுத்துக்கறேன் ..இனிமே நீங்க கடைப்பக்கம் வராதிங்கன்னு சொல்லிட்டு கிளம்பி போனார்..
ஒரு நாள் மார்கெட்டுக்குப் போய்ட்டு வாங்கன்னா இப்படி கூத்தடிச்சிருகிங்க. இனிமே நீங்க எங்கேயும் போகவேண்டாம் வீட்டோடவே இருங்க ..நாங்க பாத்துக்கறோம்.. ராமசாமிஐயர் மனைவி கண்டிப்பு..
ஹுஹும் ..நாளைக்கி பிரண்டு கண்ணனோட பிள்ளைக்கி கல்யாணம்.. சத்திரம் இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம்.. சைகிள்ளதான் போகபோறேன்..
“அட ராமா” ராமசாமி ஐயர் மனைவியும் பெண்ணும் தலையில் கை வெச்சிண்டு உக்காந்தாச்சு..
டி வி கே