ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது: அ&#2990

Status
Not open for further replies.
ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது: அ&#2990

ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது: அமைச்சர் சதானந்த கவுடா!

புதுடெல்லி:
ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விரைவில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ரயில்வே பட்ஜெட் குறித்து மத்திய அமைச்சர் சதானந்த கவுடா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ரயில்வேயில் மத்திய அரசு புதிய கொள்கையை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ரயில்வேயின் புதிய திட்டங்களுக்கு ஏற்படும் செலவில் அந்தந்த மாநில அரசுகளுக்கும் பாதி பங்கு வழங்க ஆலோசித்து வருகிறோம்.

வர இருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்பு, பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, சிறப்பான சேவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த 3 அம்சங்களும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட பின்பு 4வதாக ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்துவது பற்றி முடிவு செய்யப்படும்.

நாடு முழுவதும் ரயில்வேயில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்த வேண்டி உள்ளது. ஆனால், ரயில்வேக்கு ரூ.25 ஆயிரம் கோடி முதல் ரூ.30 ஆயிரம் கோடி வரைதான் வருவாய் கிடைக்கிறது. வரவுக்கும், செலவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

தெற்கு ரயில்வே மற்றும் தென்மேற்கு ரயில்வேயில் 50 ஆண்டுகள் ஆகியும் சில திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நீண்டு கொண்டே போகிறது. தாமதத்தால் திட்டச்செலவு பல மடங்கு அதிகரிக்கிறது. இதுபோல், நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்களை துரிதமாக முடிக்க கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

தற்போதைய நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமும் உள்ளது. மல்லிகார்ஜுன கார்கே இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது 5 சதவீத சரக்கு கட்டண உயர்வும், 10 சதவீத பயணிகள் கட்டண உயர்வும் இருக்கும் என்று அறிவித்தார்.

மேலும், கட்டண விகிதங்களையும் மாற்றி அமைப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போதைய நிலையை கவனத்தில் கொண்டு அவற்றை நாங்கள் அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ரயில்வே குடோன்கள் சரக்கு குடோன்கள் கட்டுமானத்தில் ரயில்வேயில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும். நிலக்கரி சேமிப்பு கிடங்குகள் அமைக்க நிலக்கரி துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்ய சம்மதித்துள்ளது.

ரயில்வேயை நவீனப்படுத்துவது பற்றி மெட்ரோ ரயில் தலைவர் ஸ்ரீதரனுடன் ஆலோசனை நடத்தினேன். பட்ஜெட் தாக்கல் செய்து முடித்ததும் ரயில்வேயில் நவீன தொழில் நுட்பத்தை புகுத்துவது குறித்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். படித்த இளைஞர்களின் ஆலோசனைகள் பயன்படுத்தப்படும்.

ரயில்வே திட்டங்களில் மாநில அரசுகளும் நிதி ஒதுக்கி பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன். கர்நாடக முதல்வர் சித்தராமையா என்னைச் சந்தித்து மாநில அரசுக்கு நிதி நெருக்கடி இருப்பதால் ரயில்வே திட்டங்களில் பங்கெடுக்க முடியாது என கூறிவிட்டார்" என்றார்.



Source:????? ????? ?????? ???????? ?????????: ???????? ??????? ?????!
 
Status
Not open for further replies.
Back
Top