மூஞ்சூறு காதில் வேண்டுதல்

Status
Not open for further replies.
மூஞ்சூறு காதில் வேண்டுதல்

நமது ஊரில் நந்தியின் காதில் வேண்டுதலை பக்தர்கள் சொல்வது போல, மும்பை சித்தி விநாயகர் கோயிலில் மூஞ்சூறு வாகனத்தின் காதில் சொல்கின்றனர்.
கோயில் அமைப்பு: இந்த கோயில் கோபுரம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் உள் பகுதியில் பல்வேறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 அடுக்காக கட்டப்பட்ட கோயிலின் உட்பகுதியில் அலுவலகம் உள்ளிட்ட அறைகள் உள்ளன. இவற்றிற்கு செல்ல லிப்ட் வசதி உண்டு. கீழ்தளத்தில் விநாயகர் சந்நிதி இருக்கிறது. விநாயகர் செந்தூரம் பூசி, இரண்டரை அடி உயரத்தில் சிறியவராக காட்சி தருகிறார். அவர் முன் இரண்டு வெள்ளி மூஞ்சூறு வாகனங்கள் உள்ளன.
சிறப்பம்சம்: நம்மூரில் நந்தியின் காதில் கோரிக்கை சொல்வது போல இந்த மூஞ்சூறுகளின் காதில் கோரிக்கையை சொல்கிறார்கள். விநாயகரின் முன்பு நின்று கைத்தட்டி வணங்கும் வழக்கமும் இருக்கிறது.
தரிசன முறை: எந்நேரமும் கூட்டம் அதிகம் வரும் கோயில். வரிசை நீளமாக இருக்கும். செவ்வாய் கிழமைகளில் தரிசனம் கிடைக்க அரைநாள் ஆகிவிடும். பூஜை பொருட்களை அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அவற்றைத் திருப்பி தரும் வழக்கம் கிடையாது. அனைத்தும் வெளியில் உள்ள உற்சவருக்கு அர்ப்பணிக்கப்பட்டு பிரசாதம் மட்டும் தரப்படும். பக்தர்களுக்கு சால்வை அணிவிக்கும் வழக்கம் இருக்கிறது. மோடக் எனப்படும் இனிப்பு பண்டம் முக்கிய பிரசாதம்.
கருவறை அமைப்பு: மிகச் சுத்தமாக வைக்கப்பட்டுள்ள இந்த கோயிலின் கருவறையை பார்த்தாலே பக்தி உணர்வு மனதில் ஊற்றெடுக்கும். ஒளிவெள்ளம் சிந்தும் விளக்குகளின் மத்தியில் விநாயகர் அழகே வடிவாகக் காட்சித் தருகிறார். மேல்மண்டபம் கூம்பு வடிவத்தில் உள்ளது.
இருப்பிடம்: தாதரில் இருந்து 6 கி.மீ.,
 
Status
Not open for further replies.
Back
Top