முருகனுக்கு பல பெயர்கள்; பல காரணங்கள்!

Status
Not open for further replies.
முருகனுக்கு பல பெயர்கள்; பல காரணங்கள்!

முருகனுக்கு பல பெயர்கள்; பல காரணங்கள்!

TN_111021175947000000.jpg



சரவணபவ

நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் (8 எழுத்து) ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.


ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).
ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).
வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர். ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம்.


ஸ்கந்த நாமச் சிறப்பு

ஸ்கந்தர் என்றால் துள்ளிக் கொண்டு வெளிப்பட்டவர் என்று அர்த்தம் பரமேச்வரனுடைய சக்தி நேத்ர ஜ்யோதிஸ்ஸாக (நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஒளி) ஒரே துடிப்போடு, லோகாநுக்ரஹம் பண்ண வேண்டுமென்ற துடிப்போடு, துள்ளிக்கொண்டு வெளிப்பட்டே ஸ்கந்தமூர்த்தி உத்பவமானார். அந்த விசேஷத்தால் தான் அவருக்கு ஸூப்ரஹ்மண்யர், கார்த்திகேயர், குமாரர், சரவணபவர் என்றிப்படி அநேக நாமாக்கள் இருந்தபோதிலும், அவரைப் பற்றிய புராணத்திற்கு ஸ்கந்த புராணம், ஸ்காந்தம் என்றே பெயரிருக்கிறது. அவருடைய லோகத்துக்கு ஸ்கந்தலோகம் என்றே பெயர். அவர் ஸம்பந்தமான விரதத்தை ஸ்கந்த ஷஷ்டி என்றே சொல்கிறோம். அம்பாளோடும் முருகனோடும் இருக்கும் பரமேச்வரமூர்த்திக்கும் சோமாஸ்கந்தர் என்றே பேர் இருக்கிறது. முருகன் என்று அவருக்குச் சிறப்பாகத் தமிழ்ப்பெயர் கொடுத்திருக்கும் நம் பாஷையிலும், கந்தர நுபூதி, கந்தரலங்காரம், கந்தர் கலிவெண்பா என்றே ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. சென்னை பட்டணத்தில் சிறப்பாகக் கந்த கோட்டம் இருக்கிறது.

-மகாபெரியவர் விளக்கம்


ஆறுமுகம் பெயர் காரணம்!



சமயங்களில் ஆறு, கோசங்கள் ஆறு, ஆதார கமலங்கள் ஆறு, சாஸ்திரங்கள் ஆறு, நான்கு வேதங்களும், ராமாயண, மகாபாரதமும் சேர்ந்து ஆறு, ஞான சாதனைகள் ஆறு (சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை) இப்படிப் பல விஷயங்கள் ஆறாகிப் பெருகி நிற்பதால், சிவனவன் தன் சிந்தையுள் நிறைந்துள்ள பஞ்சாட்தரி மந்திரத்துடன் ஓம் என்ற ஓங்காரத்தையும் சேர்த்து, ஆற்றாக்கி, ஆறுமுகனைப் படைத்தான். இது வடமொழியில் சடக்கரம் என்று வழங்கப் பெறும். இதுவே ஆறுமுனின் பெயர்க் காரணம்.



சோமாஸ்கந்தர்



முருகனை நடுவில் வைத்து சிவனும், பார்வதியும் கொஞ்சி மகிழும் கோலத்தை சோமாஸ்கந்த வடிவம் என்பர். பாலமுருகன் உலகைச் சுற்றி வந்த பிறகும், அவருக்கு கனி கிடைக்கவில்லை. ஞானத்தை தரும் கனி என்பதால், அந்த ஞானப்பண்டிதன் மற்றொரு ஞானக்கனியைப் பெற வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தார். ஒரு முறை தந்தையிடம் கரிய நிறத்தில் நாவல்பழம் போல் கழுத்தில் உருண்டையாக தங்கியிருக்கும் விஷத்தைக் கேட்டு அடம் பிடித்தார். சிவன், விஷம் என்று எடுத்துக்கூறியும், குழந்தை முருகன் கேட்கவில்லை. தந்தையின் கழுத்தை பிடித்து இழுத்து, விஷ உருண்டையை வெளியே கொண்டு வர முயற்சித்தார். சிவன் குழந்தையின் பிடி தாங்காமல் மூச்சு திணறினார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி, முருகனை தன் மடியில் இருத்தி ஞானப்பால் ஊட்டி பார்வதி அமைதிப்படுத்தினாள். இதுவே சோமாஸ்கந்தர் கோலமானது. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இந்த வடிவத்தை காணலாம்.



பிரம்ம சாத்தன்



குமரன், தேவசேனாபதி, சரவணன், கார்த்திகேயன், கந்தசாமி, சக்திதரன், சண்முகன், வேலவன், வடிவேலன், அழகன், முருகன் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் தமிழ்க் கடவுளுக்கு பிரம்ம சாத்தன் என்றொரு பெயரும் உண்டு.அந்தப் பெயர் வரக் காரணமாக ஒரு புராண சம்பவம் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் திருக்கயிலாயத்திற்கு சிவ தரிசனம் செய்ய வந்த படைக்கும் கடவுளான பிரம்ம தேவன், சிவகுமாரனாகிய முருகனை சிறிதும் மதிக்காமல் சென்றார். அவரது செருக்கடக்க எண்ணிய முருகப்பெருமான், வீரபாகுவை அனுப்பி பிரம்மனைப் பிடித்து வரச் செய்து, பிரணவத்தின் பொருள் யாது? என்று வினவினார். பிரணவத்தின் பொருள் கூற மாட்டாது நின்ற பிரம்மனை தலையில் குட்டி, சிறையிலும் அடைத்து விட்டார், முருகப்பெருமான். இதனால் படைப்புத் தொழிலை மேற்கொள்ள, தனது ஆறுமுகங்களையும், பன்னிரு கண்களையும், வேலும், மயிலும் துறந்து, ஒற்றைத் திருமுகமும், நான்கு கரங்களும் கொண்ட திருவுருவமேந்தி, வலக்கரத்தை அபய ஹஸ்தமாகவும் இடக்கரத்தினை வரமளிக்கும் வரத ஹஸ்தமாகவும் கொண்டு, நின்ற திருக்கோலமாகக் காட்சி தந்தார். பிரம்மனின் படைப்புத் தொழிலைச் சில காலம் ஏற்று நடத்தியதால் முருகனுக்கு பிரம்ம சாத்தன் என்ற திருநாமம் உண்டு. இன்றும் கூட திருப்போரூர் மற்றும் காஞ்சி குமர கோட்டத்தில் முருகப் பெருமான் இத்திருவுருவிலேயே பக்தர்களுக்குக் காட்சி தருவதைக் காணலாம்.



சரவணப் பொய்கையில் குழந்தையானதால் சரவண பவன்.
கங்கை ஏந்தியதால் காங்கேயன்.
கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பட்டதால் கார்த்திகேயன்.
விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
அக்னி ஏந்தியதால் அக்னி பூ.
ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன், ஷண்முகன்.
ஆறு குழந்தைகள் ஒன்றியதால் ஸ்கந்தன், கந்தன்.
தமிழில் முருகு என்றால் அழகு; அழகானவன்-அதனால் முருகன்.


விசாகம், கார்த்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டவன் முருகன். இதுவும் ஒரு சிறப்பு. கந்தனின் அவதார சமயத்தில் சிவன் பார்வதியுடன் கங்கையும் அக்னியும் அங்கிருந்தனர். அவன் யார்மீது அதிக அன்பு வைத்திருக்கிறான் என்பதை அறிய விரும்பி, ஒரே சமயத்தில் நான்கு பேரும் குழந்தையை அழைத்தனர். அவன்தான் சிவஞான பண்டிதனாயிற்றே!





சிவன் தந்தை; அக்னி வளர்ப்புத் தந்தை.

பார்வதி தாய்; கங்கை வளர்ப்புத் தாய்.

அவன் ஸ்கந்தன், விசாகன், சாகன், நைகமேயன் என நான்கு உருவம் கொண்டான்.


சிவனிடம் ஸ்கந்தனும், பார்வதியிடம் விசாகனும், அக்னியிடம் சாகனும், கங்கையிடம் நைகமேய னுமாகத் தாவிச்சென்று அனைவரையும் மகிழ்வித்தானாம். முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள். இதில் மற்றொரு தத்துவமும் உண்டு. அத்ரிக்கும் அனுசூயா தேவிக்கும் வினோதமாக உதித்த குழந்தை தத்தாத்ரேயர். பிரம்மா, விஷ்ணு, சிவ ஐக்கியமான உடல்; மூன்று தலை; ஆறு கைகள். இதற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்?


மு என்றால் முகுந்தன்- அதாவது விஷ்ணு.
ரு என்றால் ருத்ரன்- அதாவது சிவன்.
கு என்றால் கமலத்தில் உதித்தவன்- அதாவது பிரம்மன்.


ஆறுமுகமான பொருள் நாம் மகிழ வந்தான்



இறைவனை அடைவதற்குரிய அகச்சமயங்கள் ஆறு. அவை சைவம், வைணவம், காணாபத்யம், கவுமாரம், சாக்தம்,சவுரம் என்பன. இந்த ஆறு சமயங்களுக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்குபவர் சண்முகநாதர். சமயங்களுக்குரிய சாத்திரப் பொருளாக நிற்கும் புனித மூர்த்தியும் அவரே ஆவார். ஒரு பெரிய நகரத்திற்கு ஆறு வழிகள்; அவை பல இடங்களில் இருந்து புறப்படுகின்றன. பல வகையாக வளைந்து வருகின்றன. முடிவில் அவை அந்த நகரத்திலேயே வந்து முடிகின்றன. அதுபோல, ஆறு சமயங்களும் பல்வேறு வகையாக தொடங்கி, பல்வேறு விஷயங்களை போதித்தாலும் இறுதியில் அவை முழுமுதல் கடவுளான முருகப்பெருமானிடமே முடிவடைகின்றன.



ஆறு சமயங்களுக்கும் தலைவன்அவனே என்பதற்கு அறிகுறியாகவே, குமரப் பெருமானுக்கு ஆறு திருமுகங்கள் விளங்குகின்றன. அந்த ஆறு முகங்களிலும் ஈஸ்வரனுடைய ஆறு குணங்கள் இலங்குகின்றன. சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களுடன், அம்பிகையின் ஒரு முகமும் சேர்ந்து முருகப்பெருமான் ஆறு திருமுகம் கொண்டு எழுந்தருளினார். சுப்பிரமணிய மூர்த்தியின் ஆறு முகங்களில் ஒரு முகம் ஓம்கார வடிவத்தைஉடையது. அது இன்பத்தை தருவதாகும். மற்றொரு முகம் ஞான மொழியை மொழியும். இன்னொரு முகம் சரவணபவ என்ற ஆறெழுத்தைக் கூறும் பக்தர்களின் வினைகளைத் தீர்க்கும். ஒரு முகம் ஞானசக்தியை ஏவி இன்னருளை தரும். மற்றும் ஒரு முகம் அற மார்க்கத்திலிருந்து வழுவிய சூரர்களை அழித்தது போல் வீரத்தை தரும். இன்னொரு முகம், வள்ளி நாயகியின் மனம் கவர்ந்தது போல், பக்தனை தன் பக்கம் ஈர்க்கும்.



Kanda sashti | ??????????? ?? ????????; ?? ?????????!
 
Status
Not open for further replies.
Back
Top