மின், குடிநீர் கட்டணம் கட்ட இனி அலைய வேண்&#297

Status
Not open for further replies.
மின், குடிநீர் கட்டணம் கட்ட இனி அலைய வேண்&#297

மின், குடிநீர் கட்டணம் கட்ட இனி அலைய வேண்டாம்!



மத்திய, மாநில அரசுகளுக்கான கட்டணங்கள் மற்றும் வரியை செலுத்த, தனியார் பொது சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக, நிதி நிறுவனங்களிடம் இருந்து, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

* அரசு நிறுவனங்களின் சேவைகளை, ஒரே இடத்தில் அளிப்பது.


* வெளிப்படைத் தன்மைஉடன் செயல்படுவது.


* குறைந்த கட்டணத்தில், சேவை வழங்குவது.


* அரசுடன் இணைந்து, தனியாரும், பொது சேவை மையங்கள் மூலம், சேவை அளிப்பது.


* எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும், அரசின் சேவையைப் பெறுவது.


* சாதாரண குடிமகனுக்கும், மின் ஆளுமையைக் கொண்டு செல்வது என, பொது சேவை மையங்கள் அமைப்பதற்கான, நோக்கத்தை அரசு வெளியிட்டு உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும், சண்டிகர், டில்லி யூனியன் பிரதேசங்களிலும், ஏற்கனவே, பொது சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பொது சேவை மையங்கள் அமைக்க, மத்திய, மாநில அரசுகள் முன் வந்துள்ளன. தமிழகம் முழுவதும், 234 மையங்கள் துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மையங்களை, தனியார் நிதி நிறுவனங்கள் அமைக்க, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இம்மையங்கள் மூலம், மத்திய, மாநில அரசுகளின், பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.


என்ன சேவைகள்?
மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள், வரி ஆகியவற்றை, பொது சேவை மையங்கள் வசூலித்து, அரசுக்கு செலுத்தும் என, பொதுவாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -


| ????, ???????? ??????? ???? ??? ???? ????????! Dinamalar
 
Status
Not open for further replies.
Back
Top