• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

மார்கழி மாத விரதங்கள்.

Status
Not open for further replies.

kgopalan

Active member
மார்கழி மாத விரதங்கள்.

18-12-2014. காஞ்சி மஹா பெரியவாள் ஆராதனை_;-அன்றைய தினம் மஹா பெரியவாள் பூஜை, அவரது உபதேசங்களையும் கேட்கலாம்.


17-12-2014 முதல் 14-1-2015 வரை தநுர் மாத பூஜை.

மனிதனுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். . இந்த நாளின் அதிகாலை வேளை தான் மார்கழி மாதம்.

ஒவ்வொரு வீட்டிலும் ஸூரியன் உதிக்கும் முன்பே எழுந்திருந்து வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலம் போட்டு ஸ்நானம் செய்து பூசணி பூக்களால் வாசலை அலங்கரித்து ஸ்வாமி சன்னதியில் விளக்கு ஏற்றி வீட்டில் உள்ள ஸ்வாமிக்கு தினசரி செய்யும்

பூஜையை அபிஷேக அர்ச்சனையுடன் செய்து பயத்தம் பருப்பு பொங்கல் நிவேத்தியம் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு நாள் செய்யும் பூஜை, ஒரு வருடம் பூஜை செய்த பலன் தரும் என்கிறது சாஸ்த்திரம்.

காலையில் ஸ்நானம் செய்து ஸந்தியாவந்தனம் செய்து விட்டு இந்த தநுர் மாத பூஜையை அபிஷேகம் அர்ச்சனை வரை செய்து விட்டு காயத்ரி ஜபம் செய்துவிட்டு ஸூர்யன் நன்கு உத்யமானபிறகு பூஜையின் தொடர்ச்சி தூபம், தீபம், நைவேத்யம் முதலியவற்றை செய்ய வேண்டும்..

இதனால் தநுர் மாத பூஜையும் நித்ய பூஜையையும் ஒன்றாக செய்ததாக ஆகும்.



22-12-2014 ஹனுமத் ஜயந்தி

மார்கழி மாதம் அமாவாசை திதி மூல நக்ஷத்திரம் ஞாயிற்று கிழமை வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் புத்ரனாக அவதரித்தார் ஹனுமான்.
திரேதா யுகத்தில் அனுமாராகவும், , துவாபர யுகத்தில் பீமனாகவும், கலி யுகத்தில் மத்வாசாரியராகவும் அவதரித்து பெருமாள் கைங்கரியம் செய்கிறார்.

இன்று சுந்த்ர கான்டம் படிக்கலாம். ஆஞ்சநேயர் ஸ்தோத்ரங்கள் படிக்கலாம். ராமா ராமா என்று சொன்னாலும் ஆஞ்சநேயர் அருள் புரிவார்.


28-12-2014. தனுர் மஹாவ்யதீபாதம்.

இந்த நாளில் காலையில் நித்ய கர்மாக்களை முடித்து விட்டு ஒரு தாமிர பாத்திரத்தில் நாட்டு சக்கரையை பரப்பி அதன் மேல் ( தங்கம் அல்லது வெள்ளியில் ) பிரதிமையில் வ்யதிபாதம் ஆவாஹயாமி என்று வ்யதீபாத தேவதையை ஆவாஹனம் செய்து வ்யதீபாத தே நம: என்ற மந்திரத்தினால் 108 முறை ஜபித்து சக்திக்கு தக்கவாறு தானம் செய்யலாம்.

இன்று புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து வ்யதீபாத பூஜையும் தானமும் செய்வதால் விரும்பிய அனைத்தும் கிட்டும் என்கிறது புராணம்.


1-1-2015. வைகுண்ட ஏகாதசி

ஏகாதசி ஸமம் கிஞ்சித் பாவனம் ந ச வித்யதே ஸ்வர்க்க மோக்ஷப்ரதா
ஏஷா ராஜ்ய புத்ரப்ரதாயினீ..

ப்ரளயத்தில் மூழ்கிய உலகத்தை மீண்டும் உண்டாக்க விரும்பிய மஹா விஷ்ணு ப்ருஹ்மாவை சிருஷ்டித்தார். அந்த ப்ருஹ்மாவை அழிக்க மது கைடபர் என்ற அசுரர் தோன்றினர். அவர்களை தடுத்த மஹா விஷ்ணுவிடம்

அவர்கள் சண்டைக்கு வந்தனர். , மஹா விஷ்ணு அவர்களை அழித்தார். பின்னர் ஞானமடைந்த அசுரர்கள் மஹா விஷ்ணுவிடம் வைகுண்டத்தில் வாசம் செய்ய வேண்டும் என ப்ரார்தித்தார்கள்.. அவர்கள் வேண்டுகோளை

ஏற்ற மஹா விஷ்ணு மார்கழி சுக்ல பக்ஷ ஏகாதசியன்று விண்ணகரத்தில் வடக்கு நுழை வாயிலை திறந்தார். அதன் வழியாக பரம பதத்திற்கு அநுப்பினார்..

அந்த அசுரர்களும் மார்கழி சுக்ல ஏகாதசியன்று இந்த சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருநாளாக கொண்டாட வேண்டும் என வேண்டினர்.

அன்று திருகோவில்களில் சுவர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் அர்ச்சாவதார பெருமாளை தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என் வேண்டினர்.

அதன் படியே நடக்கும் என திருமாலும் ஆசி வழங்கினார். அந்த நாளே வைகுண்ட ஏகாதசி ஆகும்.

வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்து நாள் பகல் பத்து . வைகுண்ட ஏகாதசி முதல் இராப் பத்து எனவும் பத்து நாட்கள் நடைபெறும். இந்த மொத்த இருபது நாட்களில் அர்ச்சாவதார பெருமாள் திருவிழா மண்டபத்தில் பிரதானமாக எழுந்தருளியிருப்பார்..

அவரை தரிசித்த வண்ணமாக வரிசையாக இருபக்கங்களிலும் ஆழ்வார்கள் மற்றும் வைணவ குருமார்களும் ஆசார்ய பெருமக்களின் திரு உருவங்களுடன் அமர்ந்திருப்பர்.

பெருமாளுக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படும். இந்த நாட்களில் நாலாயிர திவ்ய பிரபந்தம் ராமானுஜர் அமைத்த முறைப்படி பக்தர்களால் பாராயணம் செய்யப்படும்.

இராப்பத்து கடைசி நாளில் நம்மாழ்வார் முக்தி அடைந்த தாகவும் மீண்டும் நம் பொருட்டு அரங்கன் நமக்கு திருப்பி அளித்ததாகவும் ஐதீகம். அன்று

ஆழ்வார் கோஷ்டியில் அமர்ந்திருக்கும் நம்மாழ்வாரை இருவர் கைதாங்கலாக அழைத்து போய் பெருமாளின் திருவடிகளில் அருகில் வைத்து துளசி இலைகளால் முழுவதும் மூடி விடுவார்கள்.

பிறகு அர்ச்சகர்கள் திருமாலிடம் நம்மாழ்வாரை உலக நன்மைக்காக திரும்ப அளிக்க வேண்டுமென வேண்டுவர். பின் ப்ரார்த்தனை நடக்கும்.

பிறகு துளசி தலங்களால் மூடப்பட்டிருந்த ஆழ்வாரை கை தாங்கலாக அழைத்து வந்து ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்த்து வைப்பர்.

இந்த கடைசி நாள் வைபவத்திற்கு ஆழ்வார் திருவடி தொழுதல் எனப்பெயர்..
பாக்கியசாலிகளே இந்த வைபவத்தை தரிசிப்பர்.

கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்னதாக வைகுண்டத்திற்கு சென்றவர் யாருமில்லை யென்பதால் (ஸ்வர்க வாசல்) வைகுண்ட வாசல் மூடப்பட்டிருந்த தாகவும்

பின்னர் வைகுண்ட ஏகாதசி அன்று அது திறக்கபடுவதாகவும் ஐதீகம். இந்த வைபவத்தை முதன்முதலாக திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் ஏற்படுத்தினார்.

கார்த்திகையில் திருப்பாணாழ்வார் அவதார நன்னாளில் திருமால் திருக்கோவில் மூலவருக்கு தைல காப்பு சார்த்தப்படும் .அதனால் வைகுண்ட ஏகாதசி வரை மூலவர் தரிசனம் கிடையாது.

, வைகுண்ட ஏகாதசி அன்று மூலவர் தரிசனம், உற்சவர் ஸ்வர்க்க வாசல் வழியாக வருவதையும் நாமும் பார்க்கலாமே.



5-1-2015. ஆருத்ரா தரிசனம். திருவாதிரை களி.

.
மார்கழி மாதம் க்ருஷ்ண பக்ஷ பஞ்சமி. 10-1-2015. தியாக ப்ருஹ்ம உற்சவம் திருவையாறு உற்சவம்

11-1-2015. கூடார வல்லி

மார்கழி மாதம் இருபத்து ஏழாம் தேதி திருப்பாவை 27 ஆம் பாடலில் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்று தொடங்குகிறது. ஆகவே இன்று இல்லங்களில் சக்கரை பொங்கல் செய்து ஶ்ரீ மஹா விஷ்ணுவிற்கு நிவேதனம் செய்வது சிறப்பு. பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார என்பது 27ஆம் பாடலில் வருவதால் இன்று எல்லா விஷ்ணு கோயில்களிலும் சக்கரை பொங்கல் நிவேதனம் செய்ய படுகிறது.

14-1-2015. தனுர் மாத பூஜை முடிவடைகிறது .இனி வழக்கபடி சூர்ய உதயத்திற்கு பின் நித்ய கர்மாக்களை முடித்து பூஜைகள் செய்யலாம்.


14-1-2015. போகி பண்டிகை.

மார்கழி மாத கடைசி நாளில் தேவதைகள் தூக்கத்திலிருந்து விழிக்கும் காலம்.. தேவேந்திரனே சுகத்தை ( போகத்தை) அநுபவிப்பதில் சிறந்தவன்..
ஆதலால் இன்று தேவேந்திரனை பூஜை செய்ய வேன்டும்.

வீடெல்லாம் சுத்தம் செய்து பழய பொருட்களை தூர எறிந்து மங்கள ஸ்நானம் செய்து க்ருஷ்ணரையும் இந்தரனையும் பூஜை செய்ய வேண்டும்

கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பாரத யுத்தம் 18 நாட்கள் நடந்த மாதம். சுப கார்யங்கள் எதுவும் செய்வதில்லை. பகவத் பக்தி மாத்திரம் தான் செய்ய வேண்டும்..
 
Status
Not open for further replies.
Back
Top