• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மாயா இன மக்கள், இந்திய நாகர்கள் !!!

Status
Not open for further replies.
மாயா இன மக்கள், இந்திய நாகர்கள் !!!

mayan-monument.jpg


(English translation of this article is already posted here)

மாயா நாகரீகம் மத்திய அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, ஹான்டுராஸ்
குவாடிமாலா, பெலிஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. யார் இந்த மாயா இன மக்கள்? இவர்கள் எங்கிருந்து வந்து தென் அமெரிக்காவில் நுழைந்தனர்? இது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் எல்லோரும் ஏற்கக்கூடிய பதில்கள் கிடைக்கவில்லை. மாயா நாகரீகம் மர்மங்களும் புதிர்களும் நிறைந்ததாகவே நீடிக்கிறது. ஆனால் இந்துக்களின் கலியுகம் துவங்கும் ஆண்டை ஒட்டியே இவர்கள் ஆண்டும் துவங்குவதால் ஓரளவுக்கு புதிரை விடுவிக்க முடிகிறது. இவர்களுடைய தடயங்களும் சின்னங்களும் கி.மு.2600 முதல் கி.பி.1500 வரை கிடைக்கின்றன. ஆயினும் இவர்கள் காலக் கணக்கீடு கி.மு. ஆகஸ்ட் 11, 3114-ஆம் ஆண்டு துவங்குகிறது. நமது கலியுகம் கி.மு 3102 ல் துவங்குகிறது. உலகில் வேறு யாரும் இப்படி நெருக்கமாக ஆண்டுத் துவக்கத்தைச் சொல்லவில்லை!

அற்புதமான துல்லியமான காலண்டர்கள், வான சாத்திரக் கணக்குகள், பிரம்மாண்டமான கோவில்கள், தங்கம், பச்சைக் கல் நகைகள், புத்தகங்கள் ஆகியன இவர்களின் சிறப்பு அம்சங்கள். 1500ம் ஆண்டுகளில் இவர்களுடைய செல்வத்தைக் கொள்ளை அடித்து இவர்களை கிறிஸ்தவர்களாக்க முயன்ற ஸ்பெயின் தேசத்து ஆட்கள், மாயா இன மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். தங்கம், ஜேட் எனப்படும் பச்சைக் கல் நகைகளை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்றனர். அருமையான மாயா நூலகங்களைத் தீகிரையாக்கினர். நல்ல வேளையாக மாயா இனக் கோவில்கள் மிகப் பெரிய கோவில்கள் ஆதலால் அவைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

நாகா- கிருஷ்ண பரமாத்மா மோதல்

மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அர்ஜுனனும் கண்ணனும் தன் போக்கில் காடுகளை எரிக்கவே நிறைய பேர் இறந்தனர். இது தவிர காளீயன் என்னும் நாகர் தலைவர் இருந்த இடத்தில் மாடு மேய்க்கச் சென்ற இடையர்களுக்கும் காளீயனுக்கும் மோதல் வலுக்கவே அவனையும் கண்ணன் கொன்றான். இந்த மேய்ச்சல் நிலத் தகராறை பிற்கால புராண ஆசிரியர்கள் காளீயன் என்னும் பாம்பைக் கொன்றான் என்று கதை கட்டி விட்டனர். உண்மையில் காளியனும் ஒரு மனிதனே. அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர். பழங்காலத்தில் மக்கள் தங்களை இனம் காண கரடி (ஜாம்பவான்), கழுகு (ஜடாயு), குரங்கு (ஹனுமான்), பாம்பு (நாகர்) சின்னங்களை அணிவது வழக்கம். காலப் போக்கில் புராணக் கதை சொல்லுவோர் சுவை ஊட்டுவதற்காக இப்படி மிருகங்களின் பெயர்களை உண்மை என்று சொல்லிவிட்டார்கள்.

யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்ட நாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால் பாண்டவர்களுக்கு உலகம் வியக்கும் அரண்மணையைக் கட்டித் தந்தான். மஹாபாரத யுத்தம் முடிந்தபின், கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்புக்குப் பலியானான். பாண்டவ சகோதரர் ஐவரும் பழைய கால வழக்கப்படி வடக்கு நோக்கிச் சென்று பாத யாத்திரை செய்து உயிர்த் தியாகம் செய்தனர். அர்ஜுனனின் பெயரன் பரீக்ஷித் ஆட்சிக்கு வந்தான்.

பரீட்சித் மன்னன் காட்டுக்கு வேட்டை ஆடச் சென்றபோது சமீக என்ற முனிவரை அவமானப் படுத்தவே அவர் இன்னும் ஒரே வாரத்தில் நீ ஒரு நாகர் கையால் ( பாம்பு கடித்து ) இறப்பாய் என்று சாபமிட்டார். அவருடைய நாகா இன நண்பர் தட்சகனுக்கு இந்தப் பணியைக் கொடுத்தார். ஒரு வார காலத்துக்குள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அரண்மனை “செக்யூரிட்டியை” அதிகப்படுத்தினார். ஆனால் தட்சகன் ஒரு பழக் கூடையில் ஒளிந்துகொண்டு அரண்மனைக்குள் புகுந்து பரீட்சித் மன்னனைப் படுகொலை செய்தான்.

மொகலாய சாம்ராஜ்யத்தில் அவுரங்கசீப்பினால் சிறைப் பிடிக்கப்பட்ட மாமன்னன் சிவாஜியும் இப்படி பழக்ககூடை மூலம்தான் சிறையிலிருந்து தப்பித்து இந்து சாம்ராஜ்யத்தை நிறுவினார்.
பரீட்சித் மன்னன் படுகொலை, பாண்டவ வம்சத்துக்கு ஒரு களங்கமாக அமைந்தது. உடனே மன்னனின் மகன் ஜனமேஜயன் நாகர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு உத்தரவிட்டான். இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றதற்காக டில்லியில் இரவோடிரவாக ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்றது போல. இந்த நாகர் படுகொலை மக்களுக்கு பெரிய கவலையைத் தந்தது.

பிராமணர் சமாதான உடன்பாடு

அந்தக் காலத்தில் கலப்புத் திருமணம் நிறைய நடந்தது. ஜரத்காரு என்ற ஒரு பிராமண ரிஷி / முனிவர் ஒரு நாக இனப் பெண்ணை மணந்து கொண்டார். அகத்தியர் வழியில் பிறந்த பிற்கால அகத்திய ரிஷி கம்போடியாவில் உள்ள யசோவதி என்ற நாக மங்கையை மணந்தது போல. பீலிவளை என்னும் நாக இன அழகியை சோழன் கிள்ளி வளவன் மணந்தது போல.
அந்தப் பிராமண முனி ஜரத்காருவுக்கு ஆஸ்திக முனிவர் என்று ஒரு மகன் இருந்தார். அவருக்கு அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு. ஆக அவரைத் தேர்ந்தெடுத்து சமாதான தூது அனுப்பினர். அவருடைய தூது வெற்றி பெற்றது. நாகர்கள் படுகொலை நிறுத்தப்பட்டது. அவர்களும் பாண்டவ வம்சத்தைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தனர்.

விந்தையிலும் விந்தை! 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த சமாதான உடன்பாட்டை இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் ஒரு மந்திரமாக சொல்லுகிறார்கள் ( நர்மதாயை நம: என்னும் இந்த மந்திரம் நர்மதை நதிக்கரையில் நடந்த சர்ப்ப யாகத்தை நினைவு படுத்துகிறது) அந்த மந்திரத்தில் நாகர்கள், ஜரத்காரு, ஜனமேஜயன், ஆஸ்தீகர் ஆகிய அனைவரும் நினைவு கூறப்பட்டு புகழப் படுகின்றனர். உலகிலேயே மிகப் பழைய சமாதான உடன்பாடு இதுதான்!!

இதைத் தொடர்ந்து மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறத் துவங்கினர். அவர்கள் புண்ய பாரத நாட்டை விட்டு வெளியேறிய தேதி ஆக்ஸ்ட் 11, கி.மு.3114 என்பதால் தான் அந்த தேதியை இன்றும் மத்திய அமெரிக்க கல்வெட்டுகளில் பொறிக்கின்றனர். இந்தியாவின் மீது அவ்வளவு நன்றி! ஜனமேஜயர் ஆட்சிக்கலத்தில் இது நடந்தது.
இந்துக்கள் கலியுகத்துக்கு முந்தைய காலம் பற்றித் தெளிவாகக் கூறுகின்றனர். ஆனால் மாயாக்கள் இதற்கு முன் எங்கேயிருந்தனர் என்பது பற்றி ஒன்றும் கூறவில்லை.

அதிசய நாகா ஆடைகள்

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் மஹாபாரதத்திலும் நாகர்கள் தயாரிக்கும் அதிசய உடுப்புகள் பற்றியும் இரண்டு குறிப்புகள் கிடைக்கின்றன. அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நீல நாகன் என்பவன் கொடுத்த அற்புதமான ஒரு ஆடையை அவன் தான் அணியாமல் சிவ பெருமானுக்குச் சூட்டியதாக புலவர்கள் (சிறுபாஅண். 96-99) பாடுகின்றனர். இதே போல நிஷத நாட்டு மன்னனான நளனுக்கு கார்க்கோடகன் என்ற நாகர் இனத் தலைவர் ஒரு ஆடையைக் கொடுத்து அவன் மனைவிக்கு அடையாளம் தெரிய அதைப் போட்டுக் கொண்டால் போதும் என்கிறான். அதாவது நளனுக்கும் அவன் மனைவி தமயந்திக்கும் அந்த ஆடை பாற்றி முன்னரே தெரியும்.
நாகர்கள் பாம்புத்தோல் போன்ற மெல்லிய ஆடைகளை அணியும் நெசவாளர்கள். சங்க இலக்கியம் பல இடங்களில் பாம்புத் தோல் போன்ற மெல்லிய ஆடைகளைப் பற்றி (பொருநர். வரிகள்82/83, புறம்383) பேசுகிறது.

(இத்துடன் நாகர்-மாயா அற்புத ஒற்றுமைகள் பற்றித் தொடர்ந்து வரும் இரண்டு கட்டுரைகளையும் படிக்கவும்).
************************************
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top