• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மஹாலய பக்ஷ்யம்

#வருகிறது..● மஹாலய பக்ஷ்யம் !!

வருகிறது மகாளயபட்சம்... தயாராகுங்கள்... 15 நாட்கள்... இவ்ளோ பலன்களா?
மகாளய பட்சத்தில் வரும் திதியின் பலன்கள்..!!

?பித்ருக்களின் ஆராதனைக்கு மகாளயம் என்று பெயர். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம் ஆகும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள்.

?மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். நற்கதி அடைந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாக மகாளயபட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது.

?நமது மூதாதையர்களின் ஆசிர்வாதம் நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.

?இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும்.

எந்த திதியில் என்ன பலன்?

?முதல்நாள் அன்று பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும்.

?இரண்டாம் நாள் அன்று துவிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள்.

?மூன்றாம் நாள் அன்று திரிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

?நான்காம் நாள் அன்று சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்வதால் எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம்.

?ஐந்தாம் நாள் அன்று பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்வதால் வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

?ஆறாம் நாள் அன்று சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்வதால் பேரும், புகழும் கிடைக்கும்.

?ஏழாம் நாள் அன்று சப்தமி திதியில் தர்ப்பணம் செய்வதால் சிறந்த பதவிகளை அடையலாம்.

?எட்டாம் நாள் அன்று அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும்.

?ஒன்பதாம் நாள் அன்று நவமி திதியில் தர்ப்பணம் செய்வதால் திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்கள்.

?பத்தாம் நாள் அன்று தசமி திதியில் தர்ப்பணம் செய்வதால் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

?பதினொன்றாம் நாள் அன்று ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி அடைவார்கள்.

?பனிரெண்டாம் நாள் அன்று துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

?பதிமூன்றாம் நாள் அன்று திரயோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.

?பதினான்காம் நாள் அன்று சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பாவங்கள் நீங்கும். வருங்கால தலைமுறைக்கு நன்மைகள் உண்டாகும்.

?அடுத்து பதினைந்தாம் நாள் அன்று மகாளய அமாவாசை நாளாகும்.

?மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்...
 

Latest ads

Back
Top