P.J.
0
மயிலை சீரடி சாயிபாபா கோவில்,chennai
மயிலை சீரடி சாயிபாபா கோவில், CHENNAI
ஸ்தல வரலாறு....
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சீரடி சாயிபாபா ஆலயம் கலாச்சார மையமாக விளங்கி வருவதுடன் தென்னகத்தின் சீரடி என்று சொல்லும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஆலயமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இது விளங்குகிறது. இந்த ஆலயத்தை சீரடி சாயிபாபாவின் மீது பக்தி கொண்ட பூஜ்ய ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி 1941-ல் தோற்றுவித்தார்.
சீரடி சாயிபாபாவை பற்றி பல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த இவர் பாபா பற்றியும், அவரது உபதேசங்களையும் கட்டுரையாக எழுதி உள்ளார். இவரது அரிய முயற்சியால் உருவான ஆலயம் இன்று அதி நவீன வளர்ச்சி அடைந்துள்ளது. மயிலையில் குடிகொண்டிருக்கும் சத்குரு சாய்பாபாவிற்கு ஜிர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகமும், பூஜ்ஜிய ஸ்ரீ நரசிரம்ம சுவாமிஜியின் திரு உருவ சிலை பிரதிஷ்டையும், மகாகும்பாபிஷேகமும் கடந்த 15-7-2010 அன்று வெகு விமரிசையாக நடந்தது.
தற்போது அகில இந்திய சாயி சமாஜத்தின் தலைவர் தங்கராஜ் மற்றும் பொருளாளர் செல்வராஜ் செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி இயங்கும் நிர்வாகக்குழு சீரிய, கடுமையான முயற்சியால் சீரடி சாயி பாபாவின் கோவில் தற்பொழுது அதிக வசதிகளுடன் புதுப்பொலிவுடன் பக்தர்களை கவரும் வண்ணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாபாவின் சன்னதி, துவாரகாமாயி அனா, குருஸ்தான் மற்றும் பின்புறம் உள்ள நரசிம்ம ஸ்வாமிஜியின் சமாதியை உள்ளடக்கிய ஹால் ஆகியவை கண்ணிற்கும், கருத்திற்கும் விருந்தாக புதுப்பொலிவுடன் திகழ்கிறது. நரசிம்ம ஸ்வாமிஜியின் சமாதியின் மேல் உள்ள சுவர் வெண் பளிங்குச்சிலை அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன பாபாவின் உற்சவமூர்த்தி ஆகியவை மனதில் பக்தி பரவச மூட்டும் வகையில் அமைந்துள்ளன.
இந்த பாபாவின் உற்சவ மூர்த்திக்கு தினமும் அபிஷேகமும், சகஸ்ரநாம அர்ச்சனையும் வடை மாலை சாத்துதலும் நிகழ்கின்றன. அநேக பக்தர்கள் தினமும் தவறாமல் கலந்து கொள்கின்றனர். துனி என்கிற அணையாத புனித நெருப்பு உள்ள இடமும் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. மற்ற பாபா கோவில்களில் இல்லாத இந்த கோவிலில் மட்டுமே உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால் நீங்களே சன்னதியில் பாபாவின் வெண்பளிங்குச் சிலையை தொட்டு வணங்கலாம்.
மாலை, சால்வைகள் சார்த்தலாம். அவர் பாதங்களை தொட்டு கீழே விழுந்து வணங்கலாம். கோவிலில் நுழைந்து அவர் சன்னதி முன் நிற்கும் போது ஒரு தெய்வீக அலையை, உணர்வை நிச்சயம் அனுபவிப்பீர்கள். சாதிசமய வேறுபாடுகள் இருக்க கூடாது என்பதில் கவனம் செலுத்தும் நிர்வாகம் மெக்கா போட்டோவையும், ஏசு போட்டாவையும் ஆலயத்தில் வழிபாட்டிற்காக வைத்துள்ளனர். கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் அன்னதானம்.
காலையிலும், மாலையிலும் சூடான சுவையான பிரசாதம் தொன்னையில் வழங்கப்படுகிறது. இலவச மருத்துவமனை ஒன்றும் இந்தக் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. திறமையான மருத்துவர்கள் சேவை புரிகின்றனர். நடை திறந்திருக்கும் நேரம்...... கோவில் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
தகவல் அறிய......
துன்பூசை, சகஸ்ரநாம அர்ச்சனை போன்று பல வழிபாடுகள் தினமும் நடைபெறுகிறது. வழிபாடுகள் பற்றிய விவரங்கள் கோவில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் தெரிந்து கொண்டு முன் பதிவு செய்யலாம்.
போன்:- 24640784.
போக்குவரத்து வசதி.....
மயிலாப்பூரில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
http://www.maalaimalar.com/2012/04/20115824/sai-baba-temple-in-mylapore.html