• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

மகாசிவராத்திரி விரத பூஜை

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
மகாசிவராத்திரி விரத பூஜை

[h=2]மகாசிவராத்திரி விரத பூஜை[/h]
201802081437168576_shivaratri-viratham-puja_SECVPF.gif




மகாசிவராத்திரி அன்று அதிகாலையில் நீராடி, தூய ஆடைகளை அணிந்து விரதத்தை ஆரம்பித்து பகல் முழுவதும் ஜெபம், பாராயணத்தில் ஈடுபட வேண்டும்.

மகாசிவராத்திரி பூஜையை வீட்டில் செய்ய விரும்புபவர்கள் அதிகாலையில் நீராடி, தூய ஆடைகளை அணிந்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபட வேண்டும். மாலையில் வீட்டில் ஒரு தூய்மையான இடத்தில் அல்லது பூஜை அறையில் சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். இரவு 4 காலமும் பூஜை செய்ய வேண்டும்.

இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்திலாவது கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்ய வேண்டும்.

அதிகாலை 3 மணிக்கு வில்வ இலை மற்றும் மலர்களால் தீபாராதனை காண்பிக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து `சிவாய நம நமச்சிவாய' என மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை கேட்கலாம். சினிமா, டி.வி. பார்க்கக் கூடாது.

முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், காய்கறி ஆகியவற்றையும், வில்வ பழத்தையும், நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் ஜாமத்தில் லட்டு, பலாப்பழத்தையும், மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயசம், மாதுளம் பழங்களையும் நிவேதனம் செய்து வணங்கி வழிபட வேண்டும். நான்காம் ஜாமத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பலகாரம் மற்றும் கிடைக்கும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.


Read more at: https://www.maalaimalar.com/Devotio...08143717/1144790/shivaratri-viratham-puja.vpf
 

[h=2]மகாசிவராத்திரி விரத சிறப்புகள்[/h]மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக பதவி கிட்டும்.


201802071425306796_shivaratri-viratham_SECVPF.gif



[h=2]சிவபெருமானை வழிபடுவதில் முக்கியமான, முக்தியைத் தரும் விரதம் மகாசிவராத்திரி விரதம். இந்த விரதம் மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று கடைப்பிடிக்கப் படுகிறது. அன்று இரவு முழுவதும் சிவாலயங்களில் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். பஞ்சாட்சர மந்திரம் ஒலிக்கும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள்.[/h]
சிவபெருமான், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே சிவராத்திரி. பிரம்மதேவனும், திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று தெரிந்து கொள்வதற்காக, ஈசனின் அடி, முடிகளை தேடினர். அவர்கள் இருவருக்கும் எட்டாமல் அண்ணாமலையார் அருள் ஜோதியாக ஒளி வீசிய நாளே சிவராத்திரி என்றும் சொல்லப்படுகிறது.

தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது. அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார். சதுர்த்தசியன்று தேவர்கள் பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி என்று சொல்பவர்களும் உண்டு.


Read more at: https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/02/07142531/1144560/shivaratri-viratham.vpf
 
Status
Not open for further replies.
Back
Top