ப்ரெட் ஊத்தப்பம்.

Status
Not open for further replies.
ப்ரெட் ஊத்தப்பம்.

ப்ரெட் ஊத்தப்பம்.

தேவையான போருட்கள்:

6 ஸ்லைஸ் வெள்ளை ரொட்டி (WHITE BREAD, NOT SWEET BREAD)

3 டேபிள் ஸ்பூன் கோதுமை ரவை

ஒரு டேபிள் ஸ்பூன் மைதா

1/4 கப் தயிர்

1 டீ ஸ்பூன் உப்பு (ரொட்டி உப்பு ரொட்டியாக இருந்தால் 3/4 டீ ஸ்பூன் போதும்)

1/4 டீஸ்பூன் சீரகம்

குடை மிளகாய் பொடிப் பொடியாக நறுக்கியது.

பச்ச மிளகாய் மிகவும் மெலிதாக அரிந்தது

இஞ்சி 1/2 இன்ச் அளவு, மிகவும் பொடியாக நறுக்கியது

தக்காளி பொடிப் பொடியாக நறுக்கியது.

கொத்தமல்லி தழை பொடிப் பொடியாக நறுக்கியது.


செய்முறை:

ப்ரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்சியில் ரொட்டித் துண்டுகள், ரவை, தயிர், மைதா, உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியான கலவையாக அரைத்துக் கொள்ளவும், தேவையானால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையுடன் மீதமுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

மிதமான தீயில் தோசைக் கல்லில் ஒரு கரண்டி மாவு விட்டு, ஓரங்களில் சிறிது நெய் விட்டு 2 நிமிடங்கள் கழித்து திருப்பி அடுத்த பக்கத்தையும் வேக வைக்கவும்.

இதைப் பொன்னிறமாக வார்க்கவேண்டும், அதற்காகத்தான் தீயை மிதமாக வைக்க வேண்டும்.

சூடு அதிகமானால் கறுத்துப் போவதுடன், உட்பக்கம் சரியாக வெந்திருக்காது.

தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னி ஏற்றது.

குழந்தைகளுக்கு தக்காளி சாஸுடன் பரிமாறலாம்.


11412297_1130732833620346_2404810073607879907_n.jpg


THANKS TO S.v. Ramani
 
The recipe of the same item may appear in many web sites, i have given my source.
<Warning: Abusive messages are not tolerated here and against forum rules. Continued violation will result in your account being suspended - Praveen>
 
Last edited by a moderator:
Anyone can access the internet; translate English to Tamil.

But even the image is copied from others! :tsk:
 
I am always :cool:, P J Sir!

I never use those BOLD- lettered- black-lines often!! :lol:

BTW, 'Thanks to S. v. Ramani', [with the image from Mrs. Manjula's blog
(HERE)], is NOT a source!! :nono:
 
i have requested Mr. S v. Ramani Sir to give permission to post his recipes in this Forum.
I presume That should be sufficient to post my threads here
 
Status
Not open for further replies.
Back
Top