• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

ப்ரஹ்ம யக்ஜம்

Status
Not open for further replies.
ஒரு உபன்யாசத்தில் அம்மாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்வதால் ப்ரஹ்ம யக்ஞத்தில் பித்ரு தர்ப்பணம்
செய்ய வேண்டியதில்லை / செய்யக்கூடாது என்று சொன்னார்கள் இது சரியா என்கிற விவரம் தேவை. எனக்கு
தெரிந்த வரையில் அம்மாவசை தர்ப்பணம் கோத்ரம், பெயர் சொல்லி தர்பிக்கிறோம். ப்ரஹ்ம யக்ஞத்தில் கோத்ரம்
பெயர் கிடையாது அதனால் ப்ரஹ்ம யக்ஞத்தில் பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் . அதனால் சரியான விளக்கம் தர்ம சாஸ்திரப்படி தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

Rajappa Namakkal
 
ப்ருஹ்ம யஞ்கம்

பித்ருக்களில் பல குழுவினர் உள்ளது. இதில் திவ்ய பித்ருக்கள் குழு தினமும் காலையில் சூரிய உதயத்தின் போது உங்கள் வீட்டு வாசலில் வருகிறார்கள்.
உள்ளே வருகிறார்கள். அஸ்து என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். தினமும் நீங்கள் குளித்தவுடன் உங்கள் குடுமி முடி தண்ணீரை முன் பக்கமாக போட்டுக்கொண்டால் கீழே விழும் அந்த தண்ணிரை குடிக்கிறார்கள்.
இந்த குழு பித்ருக்களுக்குத்தான் ப்ரஹ்ம யஞ்கம் செய்கிறோம். சிராத்தம், அமாவாசை பித்ருக்கள் குழுவிற்.கு அதிவ்ய பித்ருக்கள் எனப்பெயர்..

கற்றுக்கொண்ட வேதம் மறக்காமலிருக்க தினமும் வேதம் ஒரு சில ருக்குகள் தொடர்ச்சியாக சொல்ல வேண்டும். முந்தைய நாள் விட்ட இடத்திலிருந்து மறு நாள் தொடர்ச்சியாக சொல்லி க்கொன்டே முடிக்க வேண்டும். பிறகு மறுபடியும் முதலிலிருந்து சொல்ல வேன்டும்..

மாத்யானிகம் செய்த பிறகு இந்த வேத மந்திரங்களை நமக்கு அளித்த ரிஷிகளுக்கு .. தர்பணம் செய்வதற்கே ப்ருஹ்ம யஞ்கம் என்று பெயர்.

ப்ருஹ்ம யஞ்கம் என்பது இரண்டு பகுதி. ஒன்று முறையாக ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம் கற்றுகொண்ட பிறகு தினமும் முடிந்த அறை சிறு சிறு பகுதிகளாக சொல்லிக்கொன்டு வர வேண்டும்.. முழுவதும் வேதம் படித்தவர்கள் தினமும் சொல்ல வேன்டும். முடிந்த வரை சில அநுவாகங்கள்.

இரண்டாவது பகுதி தேவ ரிஷி பித்ரு தர்பணங்கள் செய்ய வேண்டும்.. இந்த இரண்டு பகுதிகளும் சேர்ந்ததே ப்ருஹ்ம யஞ்கம் என்று பெயர். இங்கு அதிவ்ய பித்ருக்களுக்கு மட்டும் தர்பணம் செய்கிறோம், ஆதலால் தந்தை உள்ளவர்களும் இந்த ப்ருஹ்ம யஞ்க பித்ரு தர்ப்பணம் செய்யலாம். தினமும் இதை செய்வதால் இதற்கு பவித்ரம் தேவை இல்லை.. மாத்யானிகத்திற்க்கு முன்னால் தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்ய கூடாது.

மாத்யானிகம் காயத்ரி ஜபம் செய்த பிறகு ப்ருஹ்ம யஞ்கம் செய்யலாம்.. இரண்டு பகுதிகளையும் சேர்த்தும் செய்யலாம். இப்போது.

தந்தை உள்ளவர்களும் ப்ருஹ்ம யஞ்கம் தர்பணம் செய்யும் போது பூணல் இடம் போட்டு கொண்டு பித்ரு தர்பணம் செய்யலாம்.. பூணல் இடம் போட்டுக்கொள்ளும் போது உங்கள் வலது பக்க தோள் தெற்கு பாகத்தில்

இருப்பதால் தெற்கு பாகத்தில் பித்ருக்கள் இருப்பதால் கையையும் தெற்கு பாகத்தில் மறித்து விடுவதால் பித்ருக்களுக்கு சென்றடைகிறது என்னும் போது பூணல் இடம் போட்டு கொள்வதால் பூணலும் தெற்கு பக்கம் இருக்கட்டும் என்பதற்காகவே பூணல் இடம் போட்டு கொள்கிறோம்.

இதனால் ப்ருஹ்ம யக்ஜம் செய்பவருக்கும் அவரது பெற்றோருக்கும் ஆயுஸ் அதிகரிக்கும்.. க்ருஷ்ன யஜுர் வேத தைத்தரீய ஆரண்யகம் சொல்கிறது—தினசரி ப்ருஹ்ம யஞ்கம் செய்பவர்கள் இறந்த பின் ஸ்வர்க்கம் செல்வர் என்றும், , தனக்கு சமமானவர்களுக்குள் தலை சிறந்தவராக இருப்பர் என்றும்
செல்வம் நிறைந்த பூமி முழுவதும் தானம் செய்த பலனுக்கு மேலேயே அதிக பலன் கிடைக்கும்,, முக்தி அடைவான், துர்மரணம் ஏற்படாது, , ஸ்வர்க்கம் அடைவான் என்று சொல்கிறது.
 
thanks for your clarification. But my doubt is notyet clarified. Wheter we have todo pitru tharpanam on
Amavasai/madhapriappu dates when we do dharsa sankramana tharpanams.

Rajappa Namakkal
 
Ram Ram,

In Andhra patthathi(Yajurvedham, Apasthamba suthram) Brahma yagnam is a part after the regular pitru tharpanam . While pithuru tharpanam needs to be done with plain forehead, after finishing we need to apply vibuthi and then do brahma yagnam.

Thanks,
Arun M
 
திவ்ய பித்ருக்கள் உங்கள் வீட்டு வேலைகாரர்கள் மாதிரி. அதிவ்ய பித்ருக்கள் அதாவது உங்கள் தகப்பனார், தாத்தா, கொள்ளு தாத்தா நிங்கள் அழைத்து உணவு அளிக்கும் விருந்தாளிகள். முதலில் நீங்கள் அழைத்த விருந்தாளிககளுக்கு தர்பணம் செய்து அனுப்பி விட்டு வீட்டிலுள்ள திவ்ய பித்ருக்களுக்கு அதாவது வேலைகாரர்களுக்கு தர்பணம் செய்து ஆகாரம் போட்டு விட்டு பிறகு தேவ பூஜை செய்து விட்டு நீங்கள் சாப்பிட வேண்டும் அதிவ்ய பித்ருக்களுக்கு சாப்பாடு போட்டு விட்டால் திவ்ய பித்ருக்கள் பசி அடங்காது.இருவருக்கும் ஆகாரம் போட வேண்டும். உங்கள் மூதாதயர்களுக்கு சாப்பாடு போட்டு விட்டேன். அவர்களை காப்பாற்றும் விச்வேதேவர்களுக்கு ஆகாரம் கொடுக்காமல் இருக்க முடியாது.ஆதலால் இருவருக்கும் தர்பணம் செய்தே ஆக வேண்டும்.
 
Status
Not open for further replies.
Back
Top