ப்ரம்ம யக்ஞத்தின் முழு பலன் பெற என்ன செய்ய வேண்டும்

  • Thread starter Thread starter Umanitya
  • Start date Start date
U

Umanitya

Guest
நாம் அனைவரும் தினசரி செய்ய வேண்டிய நித்ய கர்மாக்களில் ப்ரம்ம யக்ஞம் மிக முக்யமானது. 5 முதல் 7 நிமிடங்களில் அதை செய்து முடித்துவிடலாம். பிறக்கும்போதே நாம் அனைவரும் தேவ, ரிஷி, பித்ரு ருணங்களுடன்தான் (கடன்களுடன்தான்) பிறந்திருக்கிறோம். காலை 08.30 மணிக்கு மேல் மாத்யானிகம் செய்தபின் கண்டிப்பாக நாம் அனைவரும் ப்ரம்ம யக்ஞம் செய்ய வேண்டும். ரிஷிகளின் அளப்பரிய கருணையால் நாம் மிகக் குறைந்த நேரத்தில், சிறிது ஜலத்தை மட்டுமே பயன்படுத்தி ப்ரம்ம யக்ஞம் செய்து மிகுந்த பலனை பெற முடியும். இதன் பலன் நமக்கு கிடைக்க வேண்டுமானால் நாம் முடிந்த அளவு ஏதேனும் ஒரு தொகையை "ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோஹோ, அனந்த புண்ய ஃபலதம் அதஸ் ஷாந்திம் ப்ரயச்சமே, அத்ய க்ருத ப்ரம்ம யக்ஞ கர்மணஹ, சம்பூர்ண ஸாங்க ஃபல சித்யர்த்தம், மந்த்ர சாத்குண்யார்த்தம் ஹிரண்யம் ப்ராம்மணாய சம்ப்ரததே" என்று சொல்லி ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ, பத்து ரூபாயோ, நம்மால் முடிந்த தொகையை ஒரு வெள்ளி அல்லது பித்தளை தட்டில் சிறிது துளஸியுடன் சேர்த்து, ஜலம் விட்டு தத்தம் பண்ணி எடுத்து வைத்து விட வேண்டும். பின் எப்போது முடியுமோ அன்று நம் ஆத்து வாத்யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தக்ஷ்ணை கொடுக்கவிலை என்றால் நாம் செய்த ப்ரம்ம யக்ஞத்தின் முழு பலனை பெற முடியாது. மேலும் விபரங்களுக்கு 9382102020 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
 
Back
Top