• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ப்ரதக்ஷின அமாவாசை தொடர்ச்சி

kgopalan

Active member
அரச மரத்தின் மீது அபிசேகம் செய்வதானால் நல்ல எண்ணைய். ,வாசனை திரவிய பொடி, சந்தனம், பால், தீர்த்தம் ஆகியவைகளால் மட்டும் அபிஷேகம் செய்யவும். மற்ற திரவ்யங்களால் அபிசேகம் செய்தால் அது அரச மரத்திற்கு அடியில் சென்று மரத்திற்கு ஊறு விளைவிக்க கூடும்.அரச மரத்தடி, விநாயகர், நாகருக்கும் இம்மாதிரியே அபிசேகம் செய்ய வேண்டும்.





அரச மரம் எல்லா பாகமும் மருத்துவ குணங்கள் கொண்டது.அரச இலை பெண்மையையும், வேப்பம்பழம் ஆண்மையையும் குறிப்பதாக ஐதீகம்.வேப்ப மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டவை. பஞ்சபூதங்களில் ஆகாயத்தை குறிப்பது அரச மரம். இடா, பிங்களா, ஸுசும்னா நாடிகள் நமது உடலில் சூக்ஷ்ம சரீரத்தில்



இருந்து குண்டலினி சக்தி என்ற பெயருடன் சிரஸ்ஸின் உச்சியில் ஸஹஸ்ராரத்தை சென்றடைகிறது. இதனால் ஞானம் ஸித்திக்கின்றது. அவன் ஜீவன் முக்தன் ஆகிறான். இடா நாடியும், பிங்களா நாடியும் பிண்ணி பிணைந்து எழுவதைத்தான் அரச மரத்தடியில் , இரண்டு நாகங்கள் இணைந்து இருப்பதாக உரு அமைக்க பட்டு, ப்ரதிஷ்டை செய்யபட்டு, உள்ள நாகர்கள் குறிப்பிடுகின்றன.





விரித்த படத்துடன் ஒரு நாகர் மட்டும் உள்ளதாக செதுக்க பட்டுள்ள நாகர் பிரதிமைகள்,ஸுஸும்நா வழியாக எழுந்த குண்டலினி ஸஹஸ்ராரத்தில் விகஸித்து ஞானம் வழங்குவதை அறிவிக்கிறது.



வீட்டிலிருந்து கோயிலுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள்._ மஞ்சள் தூள்20 கிராம்; குங்குமம்-10 கிராம், சந்தனம்-பெளடர் 50 கிராம்; வெற்றிலை-20; பாக்கு அல்லது சீவல் 20 கிராம், வாழைப்பழம்-6; அரச மரத்து அடியில் விளக்கேற்ற ஒரு காமாக்ஷி விளக்கு, நல்ல எண்ணைய்-100 கிராம், திரி நூல்-4; தீப்பெட்டி-1; கற்பூரம்-10 கிராம், ஊதுவத்தி-4; ஊதுவத்தி ஸ்டேன்டு; கற்பூர கரண்டி, பஞ்ச பாத்திர உருத்திரிணி, அபிஷேகம் செய்ய ஜலத்திற்கு வேண்டிய பாத்திரம்.உதிரி புஷ்பம்-அர்ச்சனைக்கு-200 கிராம்; தொடுத்த புஷ்பம் -4 முழம். ;மணி;தீர்த்தம் விட ஒரு கிண்ணம்; தேங்காய்-1.; கஞ்சுகம்-1, வாத்தியார் தக்ஷிணை;





உட்கார தடுக்கு-1; அபிஷேகத்திற்கு நல்ல எண்ணைய், காய்ச்சாத பசும்பால்-200 மில்லி; வாசனை பொடி தூள் 10 கிராம்.



சந்தன பெளடர்; கோல மாவு,= அரிசி மாவு; மங்களாக்ஷதை;





108 எண்ணிக்கை ப்ரதக்ஷிணம் செய்யும் போது போட வேண்டிய பொருள், உருண்டை மஞ்சள்; குங்குமம் பொட்டலம், தாம்பூலம், புஷ்பம், கொய்யா பழம், சப்போட்டா பழம், வாழை பழம், வேர்க்கடலை/பொட்டுகடலை, உருண்டைகள், தட்டை. முறுக்கு; அதிரசம், அப்பம், , திராக்ஷை, மாதுளம்பழம்; அப்பம். ஜம் பிஸ்கட், சாகலேட், இத்யாதிகளில் ஏதோ ஒன்று. அதற்கு மூடி போட்ட பாத்திரத்துடன் எடுத்து வரவும். இது தவிர நைவேத்தியம் செய்ய தனியாக பத்து எண்ணிக்கை இந்த 108 போக எடுத்து வரவேண்டும்.



ஒரு தாம்பாளம் அல்லது டிரே அரச மரத்தடியில் வைத்து மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொன்றாக போடவும். விளக்கு அணையாமல் எறிவதற் குண்டான செங்கற்கள்.



அரச மரம் ப்ரதக்ஷிணம் செய்யும்போது கீழ் காணும் 11 சுலோகங்கள் ஜபிக்க வேண்டும். குறைந்த பக்ஷமாக , 5,6ஆவது

சுலோகங்களை மட்டுமாவது ஜபிக்கவும்.



1. ஆயுர் பலம் யஶோ வர்ச்ச: ப்ரஜா: பஶு வஸூ நிச, ப்ருஹ்ம ப்ரஞ்யாம் மேதாம் ச த்வம் நோ தேஹி வனஸ்பதே.

2. ஸததம் வருணோ ரக்ஷேத் த்வாமாராத் வ்ருஷ்டிராஶ்ரயேத், பரிதஸ்த்வாம் நிஷேவந்தாம் த்ருணானி ஸுகமஸ்துதே.

3. அக்ஷிஸ்பந்தம் புஜஸ்பந்தம் துர்ஸ்வப்னம் துர்விசிந்தனம், ஶத்ரூணாம்ச ஸமுத்தானம் ஹ்யஸ்வத்த ஶமய ப்ரபோ.

4.அஶ்வத்தாய வரேண்யாய ஸர்வைஶ்வர்ய ப்ரதாயிநே நமோ துஸ்ஸ்வப்ன நாசாய சுஸ்ஸ்வப்ன பல தாயினே.

5.மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே, அக்ரதஹ் சிவ ரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:



6.அஶ்வத்த ஸர்வ பாபானி ஶத ஜன்மார் ஜிதானி ச நுதஸ்ய மம வ்ருக்ஷேந்த்ர ஸர்வைஶ்வர்ய ப்ரதோ பவ.





7 யம் த்ருஷ்ட்வா முஸ்யதே ரோகை: ஸ்ப்ருஷ்ட்வா பாபைஹி ப்ரமுஸ்யதே, பதாஶ்ரயாச் சிரஞ்சீவிதமஶ்வத்தம் நமாம்யஹம்





8. அஶ்வத்த ஸுமஹா பாக ஸுபக ப்ரியதர்சன, இஷ்ட காமாம்ஸ்ச மே தேஹி ஶத்ருப்யஸ்ச பராபவம்.

9. ஆயு; ப்ரஜாம் தனம் தான்யம் ஸெளபாக்கியம்,ஸர்வஸம்பதம் தேஹி தேவ மஹா வ்ருக்ஷ த்வாமகம் சரணம் கத:



10. ருக் யஜுர் ஸாம மந்த்ராத்மா ஸர்வரூபி பராத்பர: அஶ்வத்தோ வேத மூலோ அஸாவ்ருஷுபி: ப்ரோச் யதே ஸதா



11. ப்ருஹ்மஹா குருஹா சைவ தரித்ரோ வ்யாதிபீடித: ஆவ்ருத்ய லக்ஷ ஸங்க்யம் தத் ஸ்தோத்ரமேதத் ஸுகீ பவேத்.



அனந்த ராம தீக்ஷிதர் ஜய மங்கள ஸ்தோத்ரத்தில் உள்ளது.



நாராயண காயத்ரி மந்திரம்:- ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி;தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்.



அஶ்வத்த நாராயாண காயத்ரி :-ஓம் நாராயணாய வித் மஹே வ்ருக்ஷ ராஜாய தீமஹி,தன்னோ அஶ்வத்த ப்ரசோதயாத்.





அரச மரத்து வேரடியில் கோலம் போடவும். விளக்கு ஏற்றி வைத்துகொள்ளவும். முதலில் விநாயகர் பூஜை. சொம்பிலும், பஞ்ச பாத்திர உத்ரிணியிலும் கோவிலில் இருந்து ஜலம் எடுத்து வைத்துக்கொள்ளவும். மஞ்சள் தூளில் சிறிது ஜலம் விட்டு

பிள்ளையார் பிடித்து ஒரு பித்தளை தாம்பாளத்தில், வெற்றிலையில் வைக்கவும்.வெற்றிலை நுனி தெற்கு பார்த்து வராமல் வைத்துகொள்ளவும்,



உதிரி புஷ்பம், பழம், 2 வெற்றிலை, ஒரு பாக்கு, சந்தனம், குங்குமம், மங்களாக்ஷதை, எடுத்து வைத்துக்கொள்ளவும். ஊதுபத்தி, ஏற்றி வைத்து கொள்ளவும். கற்பூர கரண்டியில் கற்பூரம் பெரிய வில்லையாக வைத்தால் தான் அணையாமல் எரியும்.



கையில் புஷ்பம், அக்ஷதை எடுத்துகொண்டு நெற்றியில் ஐந்து தடவை குட்டிக்கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும், சசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸ்ஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.



அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோ அஸ்த்விதி பவந்தோ மஹாந்தோ அணுக்ருஹ்ணந்து. என்று ப்ரார்த்தித்து கொள்ளவும். அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோஸ்து என்று ப்ரதி வசனம் தானே சொல்லிக்கொள்ளவும். ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம், சந்திர பலம் ததேவா வித்யா பலம் தெய்வ பலம் ததேவா லக்ஷ்மிபதே தேங்க்ரியுகம் ஸ்மராமி.



பெண்களுக்கு ப்ராணாயாமம் கிடையாது.



ஸங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்ய மானஸ்ய கர்மண: நிர்விக்னே ந பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்நேஸ்வர பூஜாம் கரிஷ்யே.



ஆஸன பூஜை:- ப்ருதிவ்யா: மேரு ப்ருஷ்ட ரிஷி: சுதலம் சந்த: கூர்மோ தேவதா; ப்ருத்வீ த்வயா த்ருதா லோகா தேவி த்வம் விஷ்ணு நா த்ருதா; த்வம் ச தாரய மாம் தேவி ப்வித்ரம் குரூ ச ஆஸனம். ஆஸனத்தில் மேல் அக்ஷதை சேர்க்கவும்.



மணி பூஜை:- ஆகமார்த்தம் து தேவானாம் கம நார்த்தம் து ரக்ஷஸாம் கண்டாரவம் கரோம்ஞசனம் யாதெள தேவதாஹ்வான லாஞ்சனம். மணி அடிக்கவும்.



கையில் புஷ்பம் எடுத்துக்கொண்டு மஞ்சள் பிள்ளையார் மீது போடவும். கணா நாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவீம் கவிணாம் உபமஶ்ர வஸ்தமம். ஜ்யேஷ்டராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணஸ்பதே ஆ ந: ஶ்ருண்வன் நூதிபிஸ்ஸீத ஸாதனம். அஸ்மின் ஹரித்ரா பிம்பே மஹா கணபதிம் த்யாயாமி, மஹா கணபதீம் ஆவாஹயாமி.



மஹா கணபதயே நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி. ; புஷ்பம் போடவும். பிறகு உத்தரிணியிம் ஜலம் எடுத்துக்கொண்டு மந்திரம் சொல்லிகொண்டே அரச மரத்தடியில், அல்லது ஒரு கிண்ணத்தில் ஜலம் விட்டு வரவும்.

மஹா கணபதயே நம: அர்க்கியம் ஸமர்ப்பயாமி.

மஹா கணபதயே நம: பாத்யம் ஸமர்ப்பயாமி.

மஹா கணபதயே நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.





மஹா கணபதயே நம: ஔபஸாரிக ஸ்நானம் சமர்ப்பயாமி.

மஹா கணபதயே நம: ஸ்நாநா னந்த்ரம் ஆசமணியம் ஸமர்ப்பயாமி.

கையில் அக்ஷதை எடுத்துக்கொண்டு மஞ்சள் பிள்ளயார் மீது போடவும்.

மஹா கணபதயே நம: வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.

மஹா கணபதயே நம: யக்ஞோப வீதார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.



மஹா கணபதயே நம: கந்தாந் தாரயாமி- சந்தனம் எடுத்து மஞ்சள் பிள்ளயார் மீது வைக்கவும்.

மஹாகணபதயே நம: ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி- குங்கும வைக்கவும்.

மஹா கணபதயே நம: அலங்கர ணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி. அக்ஷதை சேர்க்கவும்.





மஹா கணபதயே நம: புஷ்பை பூஜயாமி; புஷ்பத்தால் மஞ்சள் பிள்ளையாருக்கு அர்சிக்கவும்.

ஓம் ஸுமுகாய நம: ஓம் ஏக தந்தாய நம:ஓம் கபிலாய நம:; ஓம் கஜ கர்ணகாய நம:; ஓம் லம்போதராய நம:; ஓம் விகடாய நம:; ஓம் விக்ண ராஜாய நம:; ஓம் கணாதிபாய நம: ஓம் தூம கேதவே நம:; ஓம் கணாத்யக்ஷாய நம:;ஓம் பால சந்திராய நம:; ஓம் கஜானனாய நம:; ஓம் வக்ர துண்டாய நம: ஓம் ஸூர்ப்ப கர்ணாய நம: ஓம் ஹேரம்பாய நம: ஓம். ஸ்கந்த பூர்வஜாய நம: ஓம் மஹா கணபதயே நம: நானா வித பரிமள பத்ர புஷ்பானி ஸமர்பயாமி.





தூபார்த்தம் தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி--அக்ஷதை சேர்க்கவும். வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து நைவேத்தியம் செய்யவும். பழம் , ஒற்றைபடையில் வைத்து நைவேத்யம் செய்ய க்கூடாது. வெற்றிலை காம்புகளை கிள்ளி எறிந்து விட்டு நைவேத்யம் செய்யவும். பழத்தின் தோல் சிறிது உறிக்க பட்டிருக்க வேண்டும். உத்திரிணியில் தீர்த்தம் எடுத்து கீழ் கண்ட மந்திரம் சொல்லி நைவேத்திய பொருட்களை சுற்றவும்.



ஓம் பூர்புவஸ்ஸுவஹ; தத்ஸ விதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத்.ஓம் தேவ ஸவித அப்ரஸுவ; ஸத்யம் த்வர்தே ந பரிஷஞ்சயாமி. அம்ருத மஸ்து; அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் எடுத்துக்கொண்டு ஓம் ப்ராணாய ஸ்ஸுவாஹா, ஓம் அபானாய ஸ்ஸுவாஹா; ஓம் வ்யானாய ஸ்ஸுவாஹா:; ஓம் உதானாய ஸ்ஸுவாஹா:



ஓம் ஸமானாயா ஸ்ஸுவாஹா: ஓம் ப்ருஹ்மணே ஸ்ஸுவாஹா: ப்ரஹ்மணிம ஆத்மா அம்ருதத்வாயா மஹா கணபதயே நம; கதலி பலம், தாம்பூலம் நிவேதயாமி. புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையார் மீது போடவும். மத்யே மத்யே அம்ருத பானீயம் ஸமர்ப்பயாமி உத்தரணியில் ஜலம் எடுத்து கிண்ணத்தில் அல்லது அரச மரத்தடியில் விடவும். அம்ருதா பிதா நமஸி:- உத்தரா போஜனம் ஸமர்ப்பயாமி-உத்தரணியில் ஜலம் எடுத்து விடவும்.



தாம்பூலம் ஸமர்ப்பயாமி:- உத்தரணியில் ஜலம் எடுத்து தாம்பூலத்தை சுற்றி விடவும். கற்பூரம் ஏற்றி நீராஜனம் ஸமர்ப்பயாமி என்று சொல்லி மஞ்சள் பிள்ளையாருக்கு காண்பிக்கவும். நீராஜனாந்தரம் ஆசமணம் ஸமர்ப்பயாமி. உத்தரிணி ஜலம் எடுத்து விடவும்.





பிரார்த்தனை:- வக்ர துண்ட மஹா காய ஸூர்ய கோடி ஸமப்ரப அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.

ப்ரதக்ஷிணம், நமஸ்காரம். கணபதி ப்ரஸாதம் தலையில் தரித்து கொள்ள வேண்டும்.



சுமங்கலி பெண்கள் தீர்க்க ஸெளமங்கல்யமும், புத்ர ஸெளபாக்கியமும் ஏற்பட இதை செய்ய வேண்டும். திங்கட் கிழமை

காலையில் சூரிய உதயத்தின் போது முதல் பத்தரை மணி வரைக்கும் குறைந்த பக்ஷம் அமாவாசை திதி இருக்க வேண்டும். திங்கட்கிழமை காலை பத்தரை மணிக்கு மேல் அமாவாசை திதி வந்தால் அரச மரம் ப்ரதக்ஷிணம் கிடையாது.





ப்ரதான பூஜை:-

சுக்கலாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப சாந்தயே.



ஸங்கல்பம்;- மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஶுபே ஶோபனே முஹூர்த்தே



ஆத்ய ப்ருஹ்மண:த்விதீய பரார்த்தே , சுவேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதி தமே கலியுகே, ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே, பரதஹ் கண்டே, மேரோ:; தக்ஷிணே பார்ஶ்வே, ஶாலி வாஹன சகாப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே-விகாரி---------- நாம சம்வத்ஸரே--உத்திராயணே-------அயனே-வஸந்த--------ருதெள--ரிஷப----





மாஸே, --க்ருஷ்ண ------பக்ஷே-அமாவாஸ்யாயாம் புண்ய ------திதெள இந்து---------வாஸர யுக்தாயாம்---ரோஹிணி----------- நக்ஷத்திர யுக்தாயாம் சுபயோக சுப கரண ஏவங்குண ஸகல விசேஷேன விசிஷ்டாயாம்-அமாவாஸ்யாயாம்--------------புண்ய திதெள/ சுப திதெள---மம ஸமஸ்த செளபாக்கிய ஸித்தியர்த்தம்,

மநோ வாக்காய க்ருத மஹா பாதஹ நிவ்ருத்தியர்த்தம், மஹத் ஐஸ்வர்ய ப்ராப்தியர்த்தம்,



புத்திர பெளத்திர அபிவ்ருத்தியர்த்தம் ஸ்ரீ மஹா விஷ்ணு/ ப்ரீத்யர்த்தம்,/ அமாஸோம வார புண்ணிய காலே அசுவத்த நாராயண பூஜாம் கரிஷ்யே. தத் அங்கம் கலச பூஜாம் ச கரிஷ்யே. உத்தரணி ஜலத்தால் கையை துடைத்து கொள்ள வேண்டும்.



விக்நேஸ்வரம் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. ஶோபனார்த்தே க்ஷேமாய புனர் ஆகமனாய ச. மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு பக்கம் பிள்ளையாரை நகர்த்தவும்.



கலச பூஜை:- பஞ்ச பாத்திரத்தில் நான்கு பக்கமும் சந்தனம், குங்குமம் இட்டு, அதை வலது கையால் மூடிக்கொண்டு



கலசஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர: ஸமாஶ்ரித: மூலே தத்ர ஸ்திதோ ப்ருஹ்மா மத்யே மாத்ருகணா ஸ்மிருதா:

குக்ஷெள து ஸாகரா ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா; ருக்வேதோ த யஜுர் வேத: ஸாமவேதோ ப்யதர்வண: அங்கைஸ்ச





ஸஹிதா: சர்வே கலஶாம்பு ஸமாஸ்ருதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:;கங்கே ச யமுணே ஸ்சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி, ஜலேஸ்மின் ஸன்னதிம் குரு. என்று ஜபித்து , கலச ஜலம் சிறிதளவு எடுத்து பூஜா த்ரவியங்களையும், ஸ்வாமியையும், தன்னையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்ளவும்.





மணி பூஜை:- ஆக மார்த்தம் து தேவானாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம், கண்டாரவம் கரோம்யாதெள தேவதாஹ் வான

லாஞ்சனம்--மணி அடிக்கவும்.



கையில் புஷ்பம் எடுத்துக்கொண்டு சொல்லவும். மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே; அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம: அஸ்மின் வ்ருக்ஷே த்ரி மூர்த்யாத்மகம் அஶ்வத்த நாராயணம் த்யாயாமி.அரச மர வேர் பகுதியில், அல்லது அரச மரத்தின் மேல் புஷ்பம் போடவும்.



கையில் புஷ்பம் எடுத்துக்கொண்டு சரணம் மே ஜகன்னாத சரணம் பக்த வத்ஸல வரதோ பவ ஹே நாத கருணாகர

சாஸ்வத; அஸ்மின் வ்ருக்ஷே த்ரிமூர்த்யாத்மகம் அசுவத்த நாராயணம் ஆவாஹயாமி கையிலுள்ள புஷ்பத்தை அரச மரத்தில் போடவும்.

ப்ராண ப்ரதிஷ்டை செய்யலாம், முடிந்தால். கையில் புஷ்பம் எடுத்துக்கொண்டு ஓம் நமோ வாஸுதேவாய

ஸத்யானந்த சிதாத்மனே, ரத்ன ஸிம்ஹாஸனம் துப்யம் தாஸ்யாமி ஸ்வீகுரு ப்ரபோ--அசுவத்த நாராயான ஸ்வாமி னே நம: ரத்ன ஸிம்ஹாஸனம் ஸமர்ப்பயாமி. புஷ்பத்தை அரச மரத்தின் மேல் போடவும்.



உத்தரிணியில் ஜலம் எடுத்துகொண்டு சொல்லவும். கஜ வாஹன ஸர்வஜ்ஞ சர்வ லக்ஷண சம்யுத -பாத்யம் க்ருஹாண மத் தத்தம் ஶ்ரியா ஸஹ ஸுரோத்தம --அசுவத்த நாராயண ஸ்வாமி நே நம: பாத்யம் ஸமர்ப்பயாமி. அரச மரத்தின் அடியில் உத்தரிணி ஜலத்தை விடவும்.



உத்தரிணியில் ஜலம் எடுத்துகொண்டு சொல்லவும்:- பரித்ரான பரானந்த பத்ம பத்ரேஷண ப்ரபோ--க்ருஹாணா அர்க்கியம் மயா தத்தம் க்ருஷ்ண விஷ்ணோ ஜநார்தந: அசுவத்த நாராயண ஸ்வாமி நே நம: அர்க்கியம் ஸமர்ப்பயாமி.- ஜலத்தை அரச மர அடியில் விடவும்.



உத்தரிணி ஜலம் எடுத்துக்கொண்டு சொல்லவும்- நமஶ் ஶுத்தாய நித்யாய யோகி த்யான பராயண- மது பர்க்கம் க்ருஹாணே இதம் ஸர்வ லோகைக நாயக அசுவத்த நாராயண ஸ்வாமி நே நம: மது பர்க்கம் ஸமர்ப்பயாமி.



உத்தரிணி ஜலம் எடுத்துக்கொண்டு சொல்லவும்- கங்கோதகம் ஸமா நீதம் ஸுவர்ண கலச ஸ்திதம்- ஸ்நாப நார்த்தம்

மயா நீதம் க்ருஹாண பரமேஸ்வர- அசுவத்த நாராயண ஸ்வாமினே நம: ஸுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி- ஜலத்தை அரச மரத்தினடியில் விடவும். முடிந்தால் சொம்பு ஜலமும் விடலாம்.



உத்தரணி ஜலம் எடுத்துக்கொண்டு ஸ்நானாந்திரம் ஆசமணீயம் ஸமர்ப்பயாமி என்று சொல்லி அரச மரத்தடியில் ஜலம் விடவும். கையில் புஷ்பம் எடுத்துக்கொண்டு தேவ தேவ ஜகன்னாத நம; ஸ்ரீவத்ஸ தாரிணே வஸ்த்ர யுக்மம் ப்ரதாஸ்யாமி

ஸங்க்ருஹான ஜநார்தன-- அசுவத்த நாராயண ஸ்வாமி நே நம: வஸ்த்ரார்த்தம் புஷ்பானி ஸமர்ப்பயாமி; கொட்டை பஞ்சில் கொட்டையை எடுத்து விட்டு பஞ்சை நீளமாக திரித்து அதில் குங்குமம் தடவி மாலையாக போடுவார்கள்.அதுவும் போடலாம்.



கையில் புஷ்பம் எடுத்துக்கொண்டு லக்ஷிமி ஶாய நமஸ்தேஸ்து த்ராஹிமாம் பவஸாகராத்- ப்ருஹ்ம ஸூத்ரஞ் சோத்தரீயம் க்ருஹாண ப்ரார்த்திதோ மம-- அஶ்வத்த நாராயண ஸ்வாமி நே நம: யஜ்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி.



சந்தனம் எடுத்துகொண்டு கற்பூரா அகரு கஸ்தூரி குங்குமோத் மிசிர சந்தனம்-துப்யம் தாஸ்யாமி தேவேச ஸங்கிருஹாண

நமோஸ்துதே-அஶ்வத்த நாராயண ஸ்வாமினே நம: அரச மரத்தின் மேல் சந்தனம் இடவும், குங்குமம் இடவும்.



கையில் அக்ஷதை எடுத்துகொண்டு சொல்லவும்--தண்டூலா நார்த்ர கா ந ஸ்வச்சான் மஹாவ்ரீஹி ஸமுத்பவான்--

அக்ஷதான்னர்ப்பயே துப்யம் ஸங்கிருஹான ஸுரேஸ்வர அஶ்வத்த நாராயண ஸ்வாமி நே நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி.



தொடுத்த புஷ்பம்கையில் எடுத்துகொண்டு மால் யானீ ச ஸுகந்தினி மாலத்யாதீனி ச ப்ரபோ--மயா க்ருதானி பூஜார்த்தம்

க்ருஹான கமலாதிப-- தொடுத்த புஷ்பத்தை அரச மரத்தின்மேல் போடவும். கையில் உதிரி புஷ்பம் எடுத்துகொண்டு அர்ச்சிக்கவும்.



அங்க பூஜை:- ஓம் நாராயனாய நம: பாதெள பூஜயாமி; ஓம் கேசவாய நம: குல்பெள பூஜயாமி; ஓம் ஹரயே நம: ஜங்கே

பூஜயாமி; ஓம் ஸங்கர்ஷனாய நம: ஊரு பூஜயாமி; ஓம் வராஹாய நம; கடீம் பூஜயாமி; ஓம் பத்மனாபாய நம: நாபீம் பூஜயாமி.

ஓம் தாமோதராய நம: உதரம் பூஜயாமி; ஓம் காலாத்மனே நம: ஸ்தனெள பூஜயாமி; ஓம் ராமாய நம: ஸ்கந்தெளபூஜயாமி; ஓம் வைகுண்டாய நம: கண்டம் பூஜயாமி; ஓம் அநிருத்தாய நம: பாஹூன் பூஜயாமி; ஓம் பரமேஸ்வராய நம: பாதெள பூஜயாமி; ஓம் தேவாதி தேவாய நம: முகம் பூஜயாமி; ஓம் புஷ்கர நேத்ராய நம: நேத்ரே பூஜயாமி;





ஓம் வாஸுதேவாய நம: ஶ்ரோத்ரே பூஜயாமி; ஓம் ஸர்வ வ்யாபினே நம: ஶிர: பூஜயாமி; ஓம் ஸர்வேஸ்வராய நம: ஸர்வானங்கானி பூஜயாமி; ஓம் பரமாத்மனே நம: ஓம் பரமேஸ்வராய நம: ஓம் பர்ப்ருஹ்மணே நம: ஓம் விரிஞ்சாய நம:



ஓம் சிவாய நம: ஓம் ப்ரக்ருத்யே நம; ஓம் தேவாத்மனே நம: ஓம் த்ரிமூர்த்யாத்மனே நம: ஓம் ஊர்த்வ மூலாய நம:

ஓம் அதஶ்ஶாகாய நம: ;ஓம் ருத்ராய நம: ஓம் நராயணாய நம: ஓம் வநஸ்பதயே நம: ஓம் வ்ருக்ஷாய நம: ஓம் வேதாத்மனே நம: ஓம் புண்யாய நம: ஓம் ஶிவாகாரய நம: ஓம் மஹா மூலாய நம: ஓம் ரிஷி ஸேவிதாய நம:





ஓம் தபஹ்பலாய நம: ஓம் அக்னி கர்ப்பாய நம: ஓம் அரணயே நம: ஓம் ஸமிதாகாராய நம: ஓம் ஸூர்யாஶ்வஜாய நம:

ஓம் விபூதயே நம: ஓம் ராமாய நம: ஓம் வைகுண்ட நாதாய நம: ஓம் அநிருத்தாய நம: ஓம் பரமேஸ்வராய நம: ஓம்

தேவாதி தேவாய நம: ஓம் சந்த: பர்ணாய நம: ஓம் அவ்யயாய நம: ஓம் பாபக்ணாய நம: ஓம் ஞான வ்ருக்ஷாய நம:





ஓம் பூதாவாஸாய நம: ஓம் ஶமீ பதயே நம: ஓம் அஶ்வத்தாய நம: ஓம் நாராயணாய நம: ஓம் கேசவாய நம: ஓம் ஹரயே

நம: ஓம் ஸங்கர்ஷனாய நம: ஓம் வராஹாய நம: ஓம் பத்ம நாபாய நம: ஓம் தாமோதராய நம: ஓம் காலாத்மனே நம:

ஓம் புஷ்கர நேத்ராய நம: ஓம் வாஸுதேவாய நம: ஓம் ஸர்வ வ்யாபினே நம: ஓம் ஸர்வேஸ்வராய நம: ஓம் அஶ்வத்த



நாராயண ஸ்வாமினே நம: நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. தூபம், தீபம், நைவேத்யம்.



தூபம்:- வலது கையில் ஊதுபத்தி ஏற்றிகொண்டு இடது கையால் அணி அடித்துக்கொண்டு இந்த மந்திரம் சொல்லவும்.

குக்குலும் க்ருத ஸம்யுக்தம் நா நா கந்தைஸ் ஸுஸம்யுதம், தூபம் க்ருஹாண க்ருபயா ஸுப்ரீதோ வரதோ பவ.

அசுவத்த நாராயண ஸ்வாமி நே நம: தூபமாக்ராபயாமி.



தீபம்:- நெய் திரிபோட்டு 3 முகம் விளக்கு ஏற்றி மணி அடித்துகொண்டே சொல்லவும். அஞ்ஞான தமனம் க்ருத்வா ஞான புத்தி ப்ரதோ பவ; வஹ்நினா யோஜிதம் தீபம் க்ருஹாண பரயா முதா; அசுவத்த நாராயண ஸ்வாமினே நம: தீபம் தர்சயாமி.

தூப தீபானந்தரம் ஆசமணியம் ஸமர்ப்பயாமி. உத்த்ரிணி ஜலம் எடுத்து அரச மரத்தடியில் விடவும்.



ஸம்யுதம், மயா ப்ரதத்தம் நைவேத்யம் ஸங்க்க்ருஹான ஶ்ரியா ஸஹ; அசுவத்த நாராயண ஸ்வாமினே நம: நாளிகீர கண்டம், கதலி பலம் நிவேதயாமி. நைவேத்யானந்தரம் ஆசமணியம் ஸமர்ப்ப்யாமி. உத்தரிணி ஜலம் எடுத்து அரச மரத்தடியில் விடவும்.



கங்கோதகம் ஸமா நீதம் பாநார்த்தம் பரமம் சிவம், ஹ்ருஷீகேச நமஸ்துப்யம் க்ருஹாண பரயா முதா. அசுவத்த நாராயண ஸ்வாமினே நம: மத்யே மத்யே அம்ருத பானீயம் ஸமர்ப்பயாமி. கிண்ணத்தில் ஜலம் நைவேத்யம் செய்யவும்.



பூகிபலைஸ் ஸ கற்பூரை: நாகவல்லீ தளைர்யுதம் கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி குஹ்யதாம் அசுவத்த நாராயண ஸ்வாமினே நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி.



கையில் புஷ்பம் எடுத்துக்கொண்டு சொல்லவும். ஸ்ரீ பதே ஸர்வ பூதாத்மன் த்ராஹி மாம் பவ ஸாகராத். மதுஸூதன

தேவேச க்ருஹாண குஸுமாஞ்ஜலிம்.--மந்திர புஷ்பம் ஸமர்ப்பயாமி. அரச மரத்தில் புஷ்பத்தை போடவும்.



ப்ரதக்ஷிண த்ரயம் தேவ ப்ரயத்னேன மயா க்ருதம் தே ந பாபானி ஸர்வானி நாஶயாஶு மமாவ்யய- நமஸ்கரோம்யஹம்

பக்தியா ஸர்வ பாப ஹராவ்யய, குரு மே ஜன்ம ஸபலம் த்வத் பாதாம்புஜ வந்தனாத். அசுவத்த நாராயண ஸ்வாமி நே நம: ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி.



தேவ தேவ ஜகன்னாத ஸ்ருஷ்டி ஸம்ஹார காரக, மாமுத்ர ஹ்ருஷிகேச ஸம்ஸாராத் துக்க ஸாகராத். ப்ரார்த்தனை செய்து கொள்க.



அர்க்கிய ப்ரதானம்:- சுக்லாம்பரதரம் விஷ்ணும், சசி வர்ணம், சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.



ஸங்கல்பம்:- மமோபாத ஸமஸ்த துரிதய க்ஷயத்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் சுப திதெள, அமா ஸோம வார வ்ருத ஸம்பூர்ண பலாவாப்தியர்த்தம் அர்கிய ப்ரதானம் ,உபாயன தானம் ச கரிஷ்யே.



வலது கை விரல்களில் புஷ்பம், வாழைபழம், எடுத்துக்கொண்டு இடது கையால் காய்ச்சாத பசும்பாலை வலது கை விரல்களில் விட்டுக்கொண்டே இந்த மந்திரம் சொல்லவும். லக்ஷமீஶ ஸர்வ லோகேஶ ஶஶிவ ஸம்பத் ப்ரதோ பவ



க்ருஹாணார்கியம் மயா தத்தம் க்ருபயா பரயா முதா அசுவத்த நாராயண ஸ்வாமினே நம: இத மர்க்கியம், இதமர்க்கியம், இதமர்க்கியம்.-3 தடவை அர்க்கியம் விடவும்.



ஒவ்வொரு ப்ரதக்ஷிணத்திற்கு மிந்த மந்திரத்தை சொல்லிகொண்டு 108 ப்ரதக்ஷிணம் செய்யவும். பழமோ, பக்ஷணமோ ஒரு டிரேயில் போட்டு கொண்டே மெதுவாக சுற்றி வரவும்.மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:.108 முடிந்தவுடன் புனர்பூஜை செய்ய வேண்டும்.



புனர் பூஜை:-



எல்லா ப்ரதான பூஜை முடித்தவுடன் அன்றோ அல்லது மறு நாளோ புன்ர் பூஜை வரும்.கீழே விநாயக சதுர்த்திக்கு உள்ள புனர் பூஜை கொடுக்க பட்டுள்ளது. மற்ற ப்ரதான பூஜைகளின் போது புனர் பூஜைக்கு விநாயகர் நாமங்கள் பதிலாக அந்தன்த



தெய்வங்களின் நாமத்தை சொல்லி செய்யவும்



சுக்கலாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ண உப சாந்தயே. பெண்களுக்கு மட்டும் ப்ராணாயாமம் கிடையாது.



ஸங்கல்பம்:- மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ ஸித்தி விநாயக ப்ரஸாத ஸித்தியர்த்தம் ஸ்‌ரீ ஸித்தி விநாயக புனர் பூஜாம் கரிஷ்யே. அப உபஸ்ஸ்பர்சியா.=கைகளை துடைத்து கொள்ளவும்.





கலச பூஜை:- பஞ்ச பாத்திர உத்தரிணி பாத்திரத்தில் ஜலம் நிரப்பி,நாங்கு பக்கமும் சந்தனம், குங்குமம் அக்ஷதை போட்டு வலது கையால் மூடிக்கொண்டு கீழ் கண்ட மந்திரம் சொல்லவும்.



கலசஸ்ய முகே விஷ்ணு;கண்டே ருத்ர: சமாஶ்ரித: மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா, மத்யே மாத்ரு கணா ஸ்ம்ருதா:

குக்ஷெளது ஸாகரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா: ரிக் வேதோ அதயஜுர் வேத: ஸாம வேதோப்யதர்வண:



அங்க்கைஸ்ச ஸஹிதா : ஸர்வே கலசாம்பு ஸமாஶ்ரிதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் குரு தக்ஷய காரகா:

கங்கே ச யமுனைஸ் சைவ கோதாவரி ஸரஸ்வதி, நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னதிங்குரு.



என்று ஜபித்து கலச ஜலம் சிறிது கையில் எடுத்துக்கொண்டு பூஜா த்ரவ்யங்களையும், தன்னையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்ளவும்.



கையில் புஷ்பம் எடுத்துக்கொண்டு ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: ஆஸனம் சமர்ப்பயாமி---பூவை சமர்ப்பிக்கவும்.

உத்தரிணியின் ஜலம் எடுத்துக்கொண்டு ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி; ஜலத்தை கிண்ணியில் விடவும். வேறு ஜலம் உத்தரிணியில் எடுத்துக்கொண்டு அர்க்கியம் ஸமர்ப்பயாமி- உத்தரணி ஜலத்தை கிண்ணியில் சேர்க்கவும்.





ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: ஆசமணியம் ஸமர்ப்பயாமி;

ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.

ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: ஸ்நானம் ஸமர்ப்பயாமி.





ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: ஸ்நானாந்திரம் ஆசமணியம் ஸமர்ப்பயாமி.

ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: வஸ்த்ர, உத்தரீய உபவீத, ஆபராணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.

ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: கந்தான் தாரயாமி- சந்தனம் இடவும், குங்குமம் இடவும்.

ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி.





ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: புஷ்பை: பூஜயாமி.-அங்க பூஜை; அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி பூக்களால்

அர்சிக்கவும். ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: தூபமாக்ராபயாமி; ஊதுபத்தி ஏற்றி காட்டவும்,

ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: தீபம் தர்சயாமி- நெய் விளக்கு ஏற்றி காண்பிக்கவும்.





வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து நைவேத்தியம் செய்யவும். பழம் , ஒற்றைபடையில் வைத்து நைவேத்யம் செய்ய க்கூடாது. வெற்றிலை காம்புகளை கிள்ளி எறிந்து விட்டு நைவேத்யம் செய்யவும். பழத்தின் தோல் சிறிது உறிக்க பட்டிருக்க வேண்டும். உத்திரிணியில் தீர்த்தம் எடுத்து கீழ் கண்ட மந்திரம் சொல்லி நைவேத்திய பொருட்களை சுற்றவும்.



ஓம் பூர்புவஸ்ஸுவஹ; தத்ஸ விதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத்.ஓம் தேவ ஸவித அப்ரஸுவ; ஸத்யம் த்வர்தே ந பரிஷஞ்சயாமி. அம்ருத மஸ்து; அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் எடுத்துக்கொண்டு ஓம் ப்ராணாய ஸ்ஸுவாஹா, ஓம் அபானாய ஸ்ஸுவாஹா; ஓம் வ்யானாய ஸ்ஸுவாஹா:; ஓம் உதானாய ஸ்ஸுவாஹா:



ஓம் ஸமானாயா ஸ்ஸுவாஹா: ஓம் ப்ருஹ்மணே ஸ்ஸுவாஹா: ப்ரஹ்மணிம ஆத்மா அம்ருதத்வாயா மஹா கணபதயே நம; கதலி பலம், தாம்பூலம் நிவேதயாமி. புஷ்பத்தை பிள்ளையார் மீது போடவும்.



மத்யே மத்யே அம்ருத பானீயம் ஸமர்ப்பயாமி . உத்தரணியில் ஜலம் எடுத்து கிண்ணத்தில் அல்லது அரச மரத்தடியில் விடவும். அம்ருதா பிதா நமஸி:- உத்தரா போஜனம் ஸமர்ப்பயாமி-உத்தரணியில் ஜலம் எடுத்து விடவும்.



தாம்பூலம் ஸமர்ப்பயாமி:- உத்தரணியில் ஜலம் எடுத்து தாம்பூலத்தை சுற்றி விடவும்.



கற்பூரம் ஏற்றி நீராஜனம் ஸமர்ப்பயாமி என்று சொல்லி காண்பிக்கவும். நீராஜனாந்தரம் ஆசமணம் ஸமர்ப்பயாமி. உத்தரிணி ஜலம் எடுத்து விடவும்.



கையில் புஷ்பம் வைத்துக்கொண்டு இந்த மந்திரங்களை சொல்லவும். யோ பாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜவான்

பசுமான் பவதி. சந்திர மாவா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி. மந்திர புஷ்பம், ஸ்வர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி. சத்ர சாமராதி ஸமஸ்த ராஜோபசாரான் , பக்தி உபசாரான், சக்தி உபசாரான் ஸமர்ப்பயாமி. புஷ்பங்களை

ஸமர்ப்பிக்கவும்.





பின்பு யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி என்று சொல்லிக்கொண்டே வடக்கு நோக்கி நகர்த்தவும். ஆசமனம் செய்யவும்.

புனர் பூஜை முற்றிற்று.





ஆண்கள் மட்டும் ப்ராண ப்ரதிஷ்டை செய்தால் போதும். அந்தந்த பூஜைக்குறிய தேவதயை விக்கிரஹ மூர்த்தியிலோ கலசத்திலோ , படம் முதலியவைகளிலோ கீழ் கண்ட வகையில் ப்ராண ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். ---தேவதா ப்ரதிமை

இருந்தால் ,பஞ்சகவ்யத்தால் அந்த ப்ரதிமையை சுத்தி செய்து ப்ராண ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். படமாக இருந்தால் ப்ராண ப்ரதிஷ்டை மட்டும் செய்ய வேண்டும்.



ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராண ப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய , ப்ருஹ்ம விஷ்ணு மஹேஸ்வரா: ரிஷய: , ரிக் யஜுர், ஸாம அதர்வானி

ச்சந்தாம்ஸி; , ஸகல ஜகத், ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார காரினி, ப்ராண சக்தி பரா தேவதா:



ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி: க்ரோம் கீலகம், ப்ராண ப்ரதிஷ்டாபனே விநியோக:



ஆம் அங்குஷ்டாப்யாம் நம: ஹ்ரீம் தர்ஜனீப்யாம் நம:, க்ரோம் மத்யமாப்யாம் நம:, ஆம் அநாமிகாப்யாம் நம:ஹ்ரீம்

ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம: க்ரோம் கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:



ஆம் ஹ்ருதயாய நம:, ஹ்ரீம் ஶ்ரஸே ஸ்வாஹா; க்ரோம் ஶிகாய வஷட்; ஆம் கவசாய ஹூம்; ஹ்ரீம் நேத்ர த்ரயாய

வெளஷட். க்ரோம் அஸ்த்ராய பட், பூர்புவஸ்ஸுவரோம் இதி திக் பந்த: தியானம்:-



ரக்தாம் போதிஸ்த போதோல்லஸ தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை: பாசம், கோதண்டம், இக்ஷுத்பவம் அளிகுண

மப்யங்குசம் பஞ்சபாணான்---பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயண லஸிதா பீந வஷோருஹாட்யா – தேவீ பாலார்க்க

வர்ணா, பவது ஸுககரீ ப்ராண சக்தி பரா ந:.





ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம். க்ரோம் ஹ்ரீம் ஆம்; அம், ரம், யம்,லம், வம், ஶம், ஷம், ஸம், ஹம், ளம், க்ஷம் அஹ: ஹம்ஸஸ்



ஸோஹம்--ஸோஹம் ஹம்ஸ: அஸ்யாம் மூர்த்தெள ஜீவஸ்திஷ்டது; அஸ்யாம் மூர்த்தெள ஸர்வேந்திரியாணி

வாங்க், மனஸ், த்வக், சக்ஷூஸ், ஶ்ரோத்ர, ஜிஹ்வா, க்ராண, வாக், பாணி, பாத பாயூபஸ்த்தானி, இஹாகத்ய ,ஸ்வஸ்தி



சுகம், சிரம், திஷ்டந்து ஸ்வாஹா:. புஷ்பம், அக்ஷதை இவைகளை தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்.

அஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராண மிஹ நோ தேஹி போகம். ஜ்யோக் பஶ்யேம ஸூர்ய முச்சரந்த

மனுமதே ம்ருளயா ந : ஸ்வஸ்தி.



ஆவாஹிதோ பவ; ஸ்தாபிதோ பவ; ஸன்னிஹிதோ பவ; ஸன்னிருத்தோ பவ; அவ குண்டிதோ பவ: ஸுப்ரீதோ பவ;

ஸுப்ர ஸன்னோ பவ; ஸுமுகோ பவ; வரதோ பவ; ப்ரஸீத; ப்ரஸீத. ( பெண் தெய்வமாக இருந்தால் ஆவாஹிதா பவ,

ஸ்தாபிதா பவ என மாற்றி சொல்லவும். தேவீ ஸர்வ ஜகன் மாத: என மாற்றி சொல்லவும்.)



ஸ்வாமின் ஸர்வ ஜகன்னாத யாவத் பூஜா வஸானகம், தாவத் த்வம் ப்ரீதி பாவேன பிம்பேஸ்மின் ஸன்னதிம் குரு.

என்று ப்ரார்த்தித்து , ஏதோ ஒரு பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.





பெண்கள் கீழே உள்ள மந்திரங்கள் சொல்லி ப்ரதிஷ்டை செய்யலாம்.

அஸ்யாம் மூர்த்தெள ஜீவஸ்திஷ்டது; அஸ்யாம் மூர்த்தெள ஸர்வேந்திரியாணி

வாங்க், மனஸ், த்வக், சக்ஷூஸ், ஶ்ரோத்ர, ஜிஹ்வா, க்ராண, வாக், பாணி, பாத பாயூபஸ்த்தானி, இஹாகத்ய ,ஸ்வஸ்தி



சுகம், சிரம், திஷ்டந்து ஸ்வாஹா:. புஷ்பம், அக்ஷதை இவைகளை தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்.

அஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராண மிஹ நோ தேஹி போகம். ஜ்யோக் பஶ்யேம ஸூர்ய முச்சரந்த

மனுமதே ம்ருளயா ந : ஸ்வஸ்தி.



ஆவாஹிதோ பவ; ஸ்தாபிதோ பவ; ஸன்னிஹிதோ பவ; ஸன்னிருத்தோ பவ; அவ குண்டிதோ பவ: ஸுப்ரீதோ பவ;

ஸுப்ர ஸன்னோ பவ; ஸுமுகோ பவ; வரதோ பவ; ப்ரஸீத; ப்ரஸீத. ( பெண் தெய்வமாக இருந்தால் ஆவாஹிதா பவ,

ஸ்தாபிதா பவ என மாற்றி சொல்லவும். தேவீ ஸர்வ ஜகன் மாத: என மாற்றி சொல்லவும்.)



ஸ்வாமின் ஸர்வ ஜகன்னாத யாவத் பூஜா வஸானகம், தாவத் த்வம் ப்ரீதி பாவேன பிம்பேஸ்மின் ஸன்னதிம் குரு.

என்று ப்ரார்த்தித்து , ஏதோ ஒரு பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.



பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் இன்று சாப்பிடக்கூடாது. பஞ்சு தலைகானி இன்று தொடக்கூடாது. இரவு பலகாரம் செய்யலாம். பஞ்சு தலகானி , மெத்தை இல்லாமல் இரவு படுக்க வேண்டும்.
 

Latest ads

Back
Top