பொங்கல் வாழ்த்துகள்
அனைவருக்கும் எங்களுடைய இனிய பொங்கல் வாழ்த்துக்கள். நம் நாட்டில் வருடம் முழுதும் தேவையான அளவு மழை பெய்து, வயல்களில் தானியங்கள் பசுமையாக விளைந்து விவசாயிகளுக்கும் மற்ற எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்.இதன் பொருட்டு நீர் வளம் நில வளம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கவேண்டும். நாட்டில் வள்ளல் பசுக்கள் நன்றாக பராமரிக்கப்பட்டு பால் வளம் பெருகவேண்டும். தீய எண்ணங்கள் அழிந்து எல்லோரும் ஓரினம், ஒரே கடவுளின் குழந்தைகள் என்ற மனோபாவத்துடன் அன்புடன் அமைதியாக வாழ வேண்டும்.எல்லோர் இல்லங்களில் பொருட்செல்வம், தேக, மன ஆரோக்யம் நிலைக்கவேண்டும். சகல ஜீவராசிகளுக்கும் உயிர் கொடுக்கும் கதிரவனையும் எல்லாம் வல்ல இறைவனையும் என்னுடைய இல்லாள் இரேவதி சம்பத்துடன் கூடி இந்த பொங்கல் நன்னாளில் வேண்டுகிறேன்.
வணக்கம்
சம்பத்குமார் குடும்பத்துடன்.