• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள்

Status
Not open for further replies.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள்

அன்பு முத்தம்.

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்.

அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.

யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் டப்பாவை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.

அந்த குழந்தை அழுது கொண்டே சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள குடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.

அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மண்ணிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல் உன்னை திட்டிட்டேன் என்றார்.

அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.

I loved this story



FRIENDS: 04/02/13
 
பெண் குழந்தை தேவதை தான்
ஒப்புக் கொள்கின்றேன் நான்! :high5:

வளர்ந்த பிறகும் தேவதையாக
இருப்பாளா என்பதே என் ஐயம். :decision:

அவள் இருந்தாலும் மற்றவர்கள்
அவளை இருக்க விட வேண்டும். :boink:

ACTION அண்ட் REACTION ஆகிய நம்
வாழ்வில் அது நிலைக்க வேண்டுமே! :pray:
 
தந்தை சொல்வார் அடிக்கடி,

"தாய், தங்கை, தமக்கை அல்லது

மகள், மருமகள், பேத்தி, பாட்டி,

அத்தை, சித்தி, மாமி, பெரியம்மா

என்று எதோ ஒரு ரூபத்திலாவது

ஒரு பெண் வீட்டில் இருக்கணும்!

பெண் இல்லாத வீடு சுடுகாடு!" என்று.

இப்போதெல்லாம் நாட்டில் சில பெண்கள்

இருக்கும் வீடே அப்படிதான் இருக்கிறது! :sad:
 
எனக்குத் தெரிந்த ஒரு குழந்தை படு ஸ்மார்ட்!

அப்பா கோபித்துக் கொண்டால்... ஒடிவிடுவாள்.

சற்று நேரம் கழித்து அவரை மெல்லத் தொடுவாள்.

(உஷ்ணமானியில் உடலின் உஷ்ணத்தை அளப்பது?)

அவர் கத்தினால் கோபம் தீரவில்லை, ஒடிவிடுவாள். :bolt:

அவர் சிரித்தால் கோபம் இல்லை, மடியில் ஏறி அமர்வாள்! :thumb:
 
You may be wondering WHY I had left out the wife
from the exhaustive list of female realtives.
The list is for those who are not yet married and for the
men living far away from their wives for various reasons.
 
In praise of the women of all ages and in all countries!

பெண் எனும் பாலம்




இரு நதிக் கரைகளை மிக அழகுற
இணைப்பதே நாம் காணும் பாலம்;

இல்லத்தில் உள்ளவர்களை எல்லாம்
இணைப்பவளே பெண் எனும் பாலம்.

தந்தை என்றால் பயம், மரியாதை;
தாய் என்றால் பாசம், உரிமைகள்;

தாயிடம் ஒருமுறை சொன்னாலேயே,
சேய் விரும்புவது உடனே கிடைக்கும்.

தந்தை குழந்தைகளுக்கு இடையே,
தாத்தா பேரப் பிள்ளைகளுக்கிடையே,

ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே
ஆவாள் பெண்ணே உறுதியான பாலம்.

பத்து ஆண்கள் செய்யும் வேலைகளை
பதறாமல் செய்து முடிப்பாள் ஒரு பெண்.

பத்து ஆண்கள் ஒன்றாய் முயன்றாலும்
முத்துப் போலப் பணி செய்ய இயலார்!

பெண் இருக்கும் வீடே நல்ல வீடு.
பெண் இல்லாத வீடு வெறும் காடு!

இளையவள் வீட்டை விட்டு விலகி,
மூத்தவள் வந்து குடி புகுந்திடுவாள்!

பாலத்தை நன்கு பராமரித்தாலேயே
பாலம் பயன்படும் போக்குவரவுக்கு.

பெண்மைப் போற்றிப் பேணுவோம்,
பெண் என்னும் பாலம் பயன் தரவே.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Status
Not open for further replies.
Back
Top