பெட்ரோல் விலை ஏற்றம் பாமர மக்கள்மீது தொட
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டனி அரசு இதுவரை பலமுறை பெட்ரோல் விலையை உயர்த்தி தனக்கு ஓட்டளித்த பாமர மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டது.
மூன்றாண்டுகள் முடிவதற்க்குள் பலமுறை விலையை உயர்த்திவிட்டது. இன்னும் டீசல் மற்றும் சமையல் எறிவாயுவையும் ஏற்றயிருப்பதாக நாளேடுகளில் செய்திகள் வந்துள்ளது.
இவர்கள் ஆட்சியைவிட்டு இறங்குவதற்க்குள் பெட்ரோல் விலையை ரூ 100/-க்கு கொண்டுவந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
வழக்கமாக பெட்ரோல் விலையை ஒவ்வொரு முறையும் இவர்கள் ஏற்றும்போது சொல்லும் சொத்தைக்காரணம் என்னவென்றால் சந்தையில் கச்சா எண்ணை விலை ஏறிவிட்டது என்பது தான்.அல்லது அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்துவிட்டது என்பார்கள்.ஆனால் இவை இரண்டும் அதர்க்கு காரணமல்ல.
இவர்கள் பெட்ரோல் விலையை ஏற்றுவதற்க்கும் அதற்க்கும் சம்பந்தமே இல்லை.
நம் நாட்டு மொத்த பெட்ரோல் தேவையும் இறக்குமதி செய்யப்படுவதில்லை. உள்நாட்டில் கிடைக்கும் கச்சா எண்ணைக்கும் விலை ஏறும் ஒவொருமுறையும் சர்வதேச விலைஏற்றத்துக்கு தக்கபடி இவர்கள் ஏற்றி கொள்ளைஅடிக்கின்றனர்.
மேலும் கச்சாஎண்ணைக்கு எக்சைஸ் டூட்டி, கூடுதல் எக்சைஸ் டூட்டி, விற்பனை வரியாக 26% என்று ஏற்கனவே பல வரிகள் போட்டு பாமரர்களை ஓட்டாண்டியாக்குகின்றனர்.
ஒன்றுமட்டும் நிச்சயம். எங்களுக்கு ( பா.ஜ.கவிற்கு ) வரும் தேர்தல் வேலையை மிகவும் எளிதாக்குகின்றனர்.
போலீஸ்காரன் கைதியை அடித்தால், கைதி வீட்டில்வந்து பெண்டாட்டியை அடிப்பானாம். அதுபோல் இவர்கள் ஆட்சிசெய்யும் லெட்சணம் எங்களுக்கு ஓட்டுக்களை அள்ளித்தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மூதறிஞர் ராஜாஜி அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகின்றது.
" ஒரு அரசாங்கம் மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காக வரிவிதிக்கும்போது , அரசின் அச்செயல் செடிகளிலிருந்து பூக்களைப் பரிப்பதுபோல் இருக்கவேண்டுமே தவிர , மரத்திலிருந்து கிளையை வெட்டுவதுபோல் இருக்கக்கூடாது " என்றார்.
காங்கிரஸ் அரசு தற்கொலைப் பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
மக்கள் ஏற்கனவே காங்கிரஸை மறந்துவிட்டார்கள். ஓட ஓட காங்கிரஸை மக்கள் விரட்டியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.....