• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பூரி ஜெகந்நாதர் - அனாபஸார காலம்!

பூரி ஜெகந்நாதர் -
அனாபஸார காலம்!

பூரியில் மிக முக்கியமான காலம் இந்த அனாபஸார/அனாவஸார காலம் எனப்படும் 14 நாட்கள் ஓய்வு!

ஜ்யேஷ்ட (ஆனி) பௌர்ணமி அன்று ஜகந்நாதன், பலராமன், சுபத்திரா மூவரும் 108 குடங்கள் தீர்த்தத்தில் திருமஞ்சனம் கண்டருள்வார்கள்.
அதாவது வருடத்தில் ஒரு முறை கோவில் கர்பக்ருஹத்தில் உள்ள மூலவ விக்ரஹங்கள் வெளியில் வந்து ஸ்நான வேதியில் குளித்தலே ஸ்னான யாத்திரை எனப்படுகிறது.

நிறைய நேரம் தண்ணீரில் விளையாடிக் குளித்ததில், மூவருக்கும் ஜலதோஷம், ஜுரம் போன்றவை வந்துவிடுகின்றன.

அதனால் ஜுரமருந்து, ஜலதோஷ மருந்து எல்லாம் கொடுத்து, விசேஷ கஷாயம் கொடுத்து, பலராமன், சுபத்திரா, ஜகந்நாதனை தனியாக ஒரு இடத்தில் ஓய்வாக இருக்கவைப்பர்!

அந்த சமயத்தில் பழச்சாறு, மருந்து கஷாயம் மட்டுமே பகவானுக்கு நிவேதனம் செய்யப்படும்!
இந்த 2 வாரம் பகவானை யாரும் தரிசிக்க இயலாது!

இந்த சமயத்தில் உலகெங்கிலும் உள்ள ஜகந்நாத பக்தர்கள், தங்கள் வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் உள்ள ஜகந்நாதனின் மூர்த்திகள், ஜகந்நாதன் படங்கள் ஆகியவற்றை வெள்ளை துணியிட்டு மூடி வைப்பார்கள்!

ஆஷாட (ஆடி) அமாவசை வரையிலான இந்த 14 நாட்கள், பக்தர்களுக்கு கோயிலில் தரிசனம் அனுமதியில்லை. ஆஷாட (ஆடி), சுக்லபக்ஷ வளர்பிறை, பிரதமை (முதல்நாள்) கோவில் திறக்கப்படும். ஜகந்நாதன், பலராமன், சுபத்திரா புதுப்பொலிவுடன் காட்சி தருவார்கள். அதற்கு நபயௌவன (புதிய இளமை) தரிசனம் என்று ஊரே வந்து தரிசித்துக் கொண்டாடும்!

அதற்கு அடுத்த நாள் பலராமன், சுபத்திரா, ஜகந்நாதன் மூவரும், கோயிலைவிட்டு வெளியில் வந்து பக்தர்களுக்காக ரதயாத்திரை கண்டருள்வார்கள். அதுதான் உலகில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாத ரத யாத்திரை!

இந்த வருடம் இன்று, ஜூலை 1ம் தேதி ரத யாத்திரை!


1656903892918.png
 

Latest ads

Back
Top