புருஷோத்தம யோகம்

praveen

Life is a dream
Staff member
புருஷோத்தம யோகம்

ஸ்ரீபகவான்:- மேல் நோக்கிய வேர்களையும், வேதங்களைக் கீழ் நோக்கிய இலைகளாகவும் கொண்ட ஆலமரத்தை அறிபவன் வேதங்களை அறிந்தவனாகிறான்(15.1). புலன்களைத் தளிர்களாகக் கொண்டு, முக்குணங்களால் மேலும், கீழும் படர்ந்து வளர்ந்த இம்மரத்தின் கீழ் நோக்கும் வேர்கள் பலன் நோக்குச் செயல்களுடன் கட்டப்பட்டுள்ளது(15.2). அடியும் முடியும் விளங்காத இந்த மரத்தின் உருவம் காணக்கூடியதல்ல. பற்றின்மை எனும் வாளால் இதை வெட்டி வீழ்த்துதல் வேண்டும்(15.3). எவ்விடத்தை அடைந்தால் மறுபிறவி இல்லையோ அவ்விடத்தை நாடி எவரிடமிருந்து இம்மரம் துவங்குகிறதோ அக்கடவுளை சரணடைய வேண்டும்(15.4). கர்வம், மோகம், பற்று என்ற குற்றங்கள் நீக்கி, ஆத்ம ஞானத்தில் நின்று, ஆசைகள் அறுத்து, சுக, துக்கம் மறுத்தவன் அவ்விடத்தை அடைகிறான்(15.5). அவ்விடத்தை சூரியனோ, சந்திரனோ, அக்னியோ வெளிச்சமாக்க முடியாது. அங்கு சென்றவர்கள் திரும்ப வருவதில்லை. அதுவே என்னுடைய பரமபதம்(15.6)
 
Back
Top