புருஷோத்தம யோகம்

praveen

Life is a dream
Staff member
புருஷோத்தம யோகம்

சூரியனால் வெளிச்சமாக்க முடியாதப் பரமபதத்தில் வேரும், பூலோகத்தில் கிளைகளும் உள்ள கண்ணுக்குத் தெரியாத ஆலமரம் பலன் நோக்குச் செயல்களோடு விழுதுகளை பூலோகத்தில் கீழ்நோக்கி இறக்கி முக்குணங்களின் ரசத்தை உறிஞ்சி புலன்கள் தளிர் தளிர்க்க செய்கிறது. இந்த விழுதுகளை பற்றற வாளால் வெட்டி, மூல வேர் துவங்கும் இடத்து இறைவனைச் சரணடைய வேண்டும் என்று பகவான் சொல்கிறார். ஞானிகள் மட்டுமே அறியக்கூடிய அழிவற்ற கடவுளின் அம்சமான, புலன்களால் அலைக்கழிக்கபடுவதுமான, உணர்வுகளை ஒரு உடலிருந்து மற்றோன்றுக்கு எடுத்துச் செல்வதுமான ஜீவாத்மாவை உயிர்களின் இதயத்திலிருந்து, சுவாசத்தினால் உணவை ஜீரணித்து உயிர்களை காப்பதாலும், மனிதனின் நினைவாற்றாலுக்க்கும், பகுத்தறிதலுக்கும் காரணமாக இருப்பதாலும் புருஷோத்தமனாக காரணமாக இருப்பதாலும் புருஷோத்தமனாக கொண்டாடப்படுகிறேன் என்று பகவான் இந்த அத்தியாத்தில் சொல்கிறார்.


புருஷோத்தம யோகம் பரமபதத்து பரமாத்மாவை படம் பிடித்து காட்டுவது.
 
Back
Top