புத்தாக்க அறிவியல் புதுமை விருது: அரசுப்

Status
Not open for further replies.
புத்தாக்க அறிவியல் புதுமை விருது: அரசுப்

புத்தாக்க அறிவியல் புதுமை விருது: அரசுப் பள்ளி மாணவியின் அசத்தல் சாதனை

ilayabharathi%20250.jpg



தி
ருவாரூர் மாவட்டம் இனாம் கிளியூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி இளையபாரதி, தேசிய அளவில் மத்திய அரசின் இந்த ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் விருது பெற்றிருக்கிறார்.

தையல் இயந்திரம் பயன்படுத்தும்போது வீணாகக்கூடிய இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாகவும் இயந்திர ஆற்றலை இயக்க ஆற்றலாகவும் மாற்றும் புராஜக்ட்தான் மாணவியின் அறிவியல் கண்டுபிடிப்பு.

தமிழகத்தின் பெயரை தலைநகரில் நிலைநிறுத்தி இருக்கும் கிராமத்து விஞ்ஞானி இளையபாரதியை அவரது அறிவியல் பாட பிரிவு வேளையில் சந்தித்து வாழ்த்து சொன்னோம்.

“பிறந்தது இனாம் கிளியூர் கிராமம். சிறு வயதில் இருந்து நான் இதே பள்ளியில்தான் படித்து வருகிறேன். சிறுவயதிலிருந்தே என் தாய் மற்றும் தந்தை எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தினர். அறிவியல் பாடத்தில் எனக்கு ஆர்வம் அதிகம். அதுபோல் என் பள்ளியும் அந்த எண்ணத்திற்கு இடம் அளித்தது.

ஆற்றல் மாற்றம்தான் என் கண்டுபிடிப்பின் முக்கிய கருதுகோள். ஒரு முறை தையல் இயந்திரம் இயக்க 2.5 வோல்ட்., மற்றும் ஒருநிமிடத்திற்கு 64 முறை பெடலிங் சாதாரணமாக செய்ய 1534 கிலோ வோல்ட் ஆற்றல் கிடைக்கிறது. இதை பேட்டரி மூலம் சேமித்து வைக்கலாம்.

மேலும் வீட்டு தேவைகளுக்கு உடனடியாக பயன்படுத்தலாம். மற்றொன்று சுற்றுகளின் எண்ணிக்கையை அடிப்படையில் நீர் இறைக்கும் இயந்திரத்தை தையல் இயந்திரம் கொண்டே இயக்கச் செய்ய முடிந்தது. அறிவியல் ஆசிரியர் செழியன் சார் வழிகாட்டுதல்ல அந்த கான்செப்ட் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டு ப்ராஜெக்ட் ஆனது.


ilayabharathi%20550%201.jpg

இந்த ப்ராஜெக்ட் மாவட்டத்தில் சிறப்பானதாக தேர்வு செய்யப்பட்டு பின் மாநில போட்டியில் பரிசு பெற்றது.

2014-2015 ஆம் ஆண்டுக்கான புத்தாக்க அறிவியல் விருதுக்கு பெயர் கொடுக்க சொன்னபோது என்னோட அறிவியல் கான்செப்ட்டையும் கொடுத்தேன். ஆனால் அது தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் வந்தேபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. இந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்கு தேசிய அளவில் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பரிசு பெற்றேன்.” என மிகுந்த உற்சாகத்தில் பேசினார் இளையபாரதி.

இந்த விருதுக்கு பரிசு, சான்றிதழ், மற்றும் பதக்கம் கொடுத்து கௌரவித்திருக்கிறது மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை.


ilayabharathi%20550%202.jpg

இளையபாரதி விருதுபெற்ற தகவலையடுத்து, மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளூர் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

ஆச்சர்யம் என்னவென்றால், தையல் இயந்திரத்தை ஆதாரமாக கொண்டு முடிக்கப்பட்ட இந்தகண்டுபிடிப்பில் இளையபாரதிக்கு உதவியது சொந்த தையல் இயந்திரம் அல்ல. தன் தோழியின் தையல் இயந்திரத்தை கொண்டு ப்ராஜெக்டை முடித்திருகிறார். அந்த அளவு வறுமையான சூழல் அவருடையது.

ilayabharathi%20550%203.jpg

பரிசாக கிடைத்த பணத்தில்தான் வீட்டிற்கென சொந்தமாக ஒரு தையல் இயந்திரம் வாங்கப்போவதாக கூறும் இளையபாரதி மேலும் மேலும் சாதிக்க நாமும் வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினோம்.

- த.க தமிழ் பாரதன்
படங்கள்: க.சதீஷ் குமார்


http://www.vikatan.com/news/article...=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1


 
Status
Not open for further replies.
Back
Top