• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பிராமணன்....An Article From FaceBook....TVK

Status
Not open for further replies.

kk4646

Active member
பிராமணன்....An Article From FaceBook....TVK

இன்னும் நிறைய ஒடுக்குங்கள் பிராமணனை....


அவன் மேன்மேலும் முன்னேற....


கத்தியைக் கண்டால் ஒதுங்குபவன், தன பெண்ணை பிற சாதியன் காதலித்துக் கல்யாணம் செய்தால் மறுதலிக்க முடியாமல் சில காலத்திற்குப் பின் ஏற்றுக் கொள்பவன், தான் உண்டு தன வேலை உண்டு என்று இருப்பவன்,


எல்லாவற்கும் ஒரு விதத்தில் அரசாங்க ஆதரவும் பட்டியல் உரிமையும் இருக்க, இவனுக்கு மட்டும் ஒன்றுமில்லை, இருக்கும் ஒரு சதவீத வெளிப்படை போட்டியில் ஆயிரத்திற்கு ஆயிரம் மதிப்பெண் வாங்கி போட்டியிட வேண்டும்...கூட போட்டியிடுபவன் அறிவிலும் குறைவு, மதிப்பெண்ணிலும் குறைவு, ஆனால் தட்டிக்கொடுத்து பட்டியலில் சாதிப் பெயரிட்டு கூப்பிட்டுக் கொடுக்கிறது வேலையை.... கேட்டால் ஒதுக்கப் பட்ட இனமாம், நான் ஆதிக்க சக்தியாம்....


சுதந்திரம் வாங்க மட்டும் புரட்சிக் கவி பாடவும், ஆஷ் துரையைக் கொல்லவும், ஜெயிலுக்குப் போகவும் பார்ப்பனன் வேண்டும், ஆனால் வேலையில் இட ஒதுக்கீடு மட்டும் இல்லை, ஏனென்றால் எல்லா பார்ப்பணனும் பணக்காரன் பாருங்கள்? என்னய்யா கண்டு பிடித்தீர்கள் பிராமணனிடம் குற்றம்? அவன் சுத்தமாக இருக்கச் சொல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை... நீ சுத்தமில்லாமல் தொட்டதை அவன் தொட மறுக்கிறான்....ஏன் இது அவன் மட்டுமா செய்கிறான்? கிருத்துவ பிஷப்பும் செய்கிறார், மசூதியில் முல்லாவும் செய்கிறார்....ஏன் பார்ப்பனன் மட்டும் சாதியா வெறியனா? மற்றவன் இல்லையா? சாதியின் பெயராலேயே அரசியல் நடத்தி வரும் அத்தனை பேரும் பார்ப்பணனை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள்?


உடையாருக்கு ஒரு கட்சி, முதலியாருக்கு சமூக நீதிக் கட்சி, வன்னியருக்கு ஒரு பாமக, வெள்ளாளருக்கு ஒரு கொமுக, நாயுடுக்களுக்கு ஒரு மதிமுக, தேவருக்கு ஒரு பார்வார்ட் ப்ளாக், தேவேந்திர குல வெள்ளாளருக்கு ஒரு கட்சி, அருந்ததியருக்கு ஒரு கட்சி, தலித்துகளுக்கு ஆயிரம் கட்சிகள்.....எங்கே ஒரு கட்சியின் பெயரை சொல்லுங்கள் பிராமணனுக்கு?


பிராமணன் அப்பாவி... அடித்தால் அடி பொறுத்துக் கொண்டு குறை சொல்லாமல் வீட்டு தாழ் இட்டு வாழ்ந்து கொள்பவன்.... .அறிவு சார் வர்க்கங்கள் பிராமணன் உனக்கு என்ன துரோகம் செய்தான் என்று தயவு செய்து பட்டியல் இட்டுக் காட்டுங்கள்.... உங்கள் சோற்றில் மண் போட்டானா? இல்லை உங்கள் வீட்டுப் பெண்ணை கைபிடித்து இழுத்தானா? இல்லை உங்களுக்குண்டான கறி மீனில் பங்கு கேட்டானா?. ஒவ்வொரு முறையும் பிராமணனுக்கு எதிராய் சொல்லப்படும் கருத்துக்களால் அவன் மென்மேலும் புடம் போடப்பட்டு வெளி நாட்டில் வேலை, சொந்தத் தொழில் என்று வளம் சிறக்க வாழ்ந்து கொண்டு, உன்னைப் பார்த்து சிரிக்கிறான்.... நீ இன்னமும் அங்கேயே நின்ற இடத்திலேயே நிற்கிறாய் .... அவன் மேலே போய்க் கொண்டே இருக்கிறான்.....


நான் . பிராம்மணன், நீங்கள் சொல்லி வந்த ஆதிக்க உணர்வுகளைத் தூண்டி என் சாதியையும் நான் இனி கட்டிக் காக்கப் போகிறேன்....




[Source : FaceBook]
 
Status
Not open for further replies.
Back
Top