பிரம்மதேவர் வழிபட்ட தலம்

Status
Not open for further replies.
பிரம்மதேவர் வழிபட்ட தலம்

பிரம்மதேவர் வழிபட்ட தலம்


BrammanDT010414.jpg




சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் திருப்பட்டூர் என்ற சிவ தலம் உள்ளது. சிறுகனூர் என்னும் சிறிய ஊரின் நடுவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இவ்வாலயத்தில் பிரம்மதேவர் மிக பிரம்மாண்டமான அமைப்புடன் நான்கு முகங்களுடன் மஞ்சள் அலங்காரத்தில் காட்சி தருகிறார்.


அனைவரின் தலையெழுத்தை எழுதும் பிரம்மதேவர், ஒருமுறை சிவபெருமானை சரணடைந்து, தனது கஷ்டங்களையும், தலை எழுத்தையும் மாற்றி அருளும்படி வேண்டிக்கொண்டார். அதற்காக அவர் தேர்வு செய்து சிவலிங்கத்தை வழிபட்ட தலம் இது என்று கூறப்படுகிறது. தனது தலைவிதி மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆலயம் வந்து பிரம்மதேவனுக்கு மஞ்சள்பொடி சாத்தி, அர்ச்சனை செய்து கொண்டால் வியத்தகு அளவில் மாற்றம், முன்னேற்றம் நிச்சயம் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.


பரம்பொருளான சிவபெருமானை வணங்கிய பிறகே, பிரம்மதேவரை வழிபட வேண்டும். இந்த ஆலயத்தில் ஈசன், பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் பதஞ்சலி முனிவரின் சமாதி உள்ளது. பிரம்ம தேவர் வழிபட்ட 12 லிங்கங்கள் இந்த ஆலயத்தில் இருக்கின்றன. பெரும்பாலும் இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், குடும்பத்தினரின் ஜாதகத்தைக் கொண்டு வந்து பிரம்மாவின் திருவடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கின்றனர்.





??????????? ??????? ???? | Daily Thanthi
 
Status
Not open for further replies.
Back
Top