• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பித்ருகடனைத் தீர்க்கும் தை அமாவாசை

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
பித்ருகடனைத் தீர்க்கும் தை அமாவாசை

[h=1]பித்ருகடனைத் தீர்க்கும் தை அமாவாசை[/h]
leave2

தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரைக் கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியன.

தை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம் என்றாலும் தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.
பித்ருக்களுக்கான கடனைச் சரியாக நிறைவேற்றுவதால் பல நன்மைகள் உண்டாகும். பித்ருகளுக்குத் திதி தருவது, பிண்டம் இடுவது, வழிபாடு செய்வது ஆகிய பித்ரு கடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இக்கடனை அடைத்துவிட்டால் பிள்ளைகளின் வாழ்க்கை கலங்காதிருக்கும். மென்மேலும் சிறக்கும். பித்ருகடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். ஸ்ரீராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள்ளைத் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார். அப்போது, சிவபெருமான் ஸ்ரீராமரின் முன் தோன்றி, முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ததால் அனைத்துப் பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் தேடி வரும் என்றார் என்கிறது புராணச் செய்தி.

தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜா, அனுமதி தருவார். யமத் தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார் கள். பித்ருக்களும் அவரவர் சந்ததி யினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார் களாம். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் இட வேண்டியது அவசியம். இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களைக் குளிரச் செய்து குடும்பத்தில் துர் சம்பவங்கள் நடக்காமல் காக்கும். பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூடக் கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.

Read more at: [url]http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88/article5632163.ece[/URL]
 
Status
Not open for further replies.
Back
Top