பிடி சாபம்

Status
Not open for further replies.
பிடி சாபம்
இது கவிதையல்ல
நிஜத்தின் எண்ணக்குமிழிகள் / குமுறல்கள் / சிதறல்கள்
கற்றவர் கருத்தெதையும் கொள்ளலாம்
சான்றோர்தம் சாபம் பெற்றிடின்
நரகத்திலும் இடர்ப்படாய்
தீயோர்தம் ஆசீர்வாதம்
சொர்க்கத்திலும் சுகப்படாய்
எதிர்மறையாய் என்னுள் தோன்றும்
எண்ணத்தின் ஏக்கமாய்
நரகத்திலும் உன்னால்
சோகமாய் இருக்க முடியாதென்றாய்
அடுத்த பிறவியில்


பொதுவான நான்:
நீ எனக்கு சாபமிட்டாய்
அடுத்த பிறவியில் நீ
ஆடையின்றித்திரிவாய் என்றாய்
நான் மும்பையில்
பெரும் நடிகைஆகிவிடுவேன் என்றோ
நீ எனக்கு சாபமிட்டாய்
அடுத்த பிறவியில் நீ
பணமின்றித்தவிப்பாய் என்றாய்
நான் டில்லியில் பெரும் அரசியல்வாதியாய்
பணமெல்லாம் அயல்நாட்டில் என்றோ
நீ எனக்கு சாபமிட்டாய்
அடுத்த பிறவியில் நீ மொழி
தெரியாமால் தவிப்பாய் என்றாய்
நான் சென்னையில் முழி பிதுங்கி தமிழில்
பலமொழிக்கலவையில் தவிப்பேன் என்றோ


என்னைப்பற்றிய நான்:
நீ எனக்கு சாபமிட்டாய்
அடுத்த பிறவியில் நீ
உணவின்றித்தவிப்பாய் என்றாய்
நான் ஹைதராபாத்தில் இத்தாலி பிட்சாவில் மதுரை தக்காளி
கொத்சை கலந்து உண்பேன் என்றோ

நீ எனக்கு சாபமிட்டாய்
அடுத்த பிறவியில் நீ
குழந்தையின்றித்தவிப்பய் என்றாய்
நானும் அவளும் கல்கத்தாவில் தனிமையில்
குழந்தைகள் அயல்நாட்டில் என்றோ
உணர்ந்தேன் இன்று நீ சான்றோன் என்று


Prof.D.V.R.Rajakumar
 
Status
Not open for further replies.
Back
Top