பார்த்தசாரதி கோவிலுக்கு வழங்கப்பட உள்ள அபூர்வமான ‘பாண்டியன் கொண்டை:rose:

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்காக பிரபல நகை வியாபாரி பல கோடி ரூபாய் மதிப்பிலான 'பாண்டியன் கொண்டை' என்ற கிரீடம் செய்துள்ளார்.

இதுகுறித்து நகை வியாபாரி ஜெயந்திலால் சலானி கூறியதாவது, முதலாம் சுந்தர பாண்டியன், ஸ்ரீரங்கம் பெருமாளின் பரமபக்தர். இவர் பெருமாளுக்கு வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் ஒன்றை சமர்ப்பித்தார். அன்று முதல் அந்த கிரீடம் 'பாண்டியன் கொண்டை' என்று அழைக்கப்பட்டது.

அரங்கனின் ஆபரணங்களிலேயே அற்புதமானதும் அழகானதுமான இந்த பாண்டியன் கொண்டை கிரீடத்தை முக்கிய நாட்களில் பெருமாள் அணிந்திருப்பார்.


கடந்த 11 மாதங்களில் இந்த பாண்டியன் கொண்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று கிலோ தங்கத்தில் உருவான இந்த பாண்டியன் கொண்டையில், 5,645 ரோஸ்கட் டைமண்ட்ஸ், 2,761 ரூபி கற்கள், 36 புளூ சபையர் கற்கள், 3 பெரிய பச்சை மரகதகற்கள்; 209 சிறிய மரகத பச்சை கற்கள் 209 என பதிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதை உருவாக்க குடும்ப மூதாதயர்கள் சேமித்து வைத்த கற்களை பயன்படுத்தி உள்ளோம். கடவுளுக்கு செய்வது விலை மதிப்பற்றது.


இந்த, பாண்டியன் கொண்டை அபூர்வமானது என்பதால், வரும் 15ம் தேதி வரை எங்கள் கடையில், மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதன்பின், கோவிலுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.




1600410727942.png
 
Back
Top