“ பாதாம் அல்வா...”
இந்த வருஷம் தீபாவளிக்கி யூஸ் லேந்து என் பெரிய பிள்ளையும் ஜெர்மனியிலேந்து சின்னப் பிள்ளையும் வந்து சேந்தாங்க.. தீபாவளிக்கி அஞ்சு நாளைக்கி முன்னால..
வந்தவங்க அம்மாகிட்ட டிக்களறேஷன் இந்த வருஷம் தீபாவளிக்கி நாங்க ஸ்வீட் பண்ணப்போறோம்ன்னு... தீபாவளிக்கி மூணு நாளைக்கி முன்னால..
என் மனைவிக்கி கிச்சன் அவளோட “ கோட்டை”... தேவையில்லாம யாரையும் உள்ளே விடமாட்டா,, என்னையும் சேத்துத்தான்...
டேய் பசங்களா.. ஏதோ வந்தோமா.. சமைச்சுச் போடறத சாப்பிட்டோமான்னு இருக்கணும் .. தேவையில்லாம ஸ்வீட் பண்றேன்...அதப் பண்றேன் ..இதப் பண்றேங்கற வேலையெல்லாம் வெட்சுக்கப்படாது.. தெரிஞ்சதா.. என் மனைவியின் கண்டிப்பு...
ஒரு பதினைஞ்சு நிமிஷம் வாதம்.. எதிர் வாதம் நடந்தது.. ஜெயிச்சது என்னமோ . என் . பசங்கதான்.. . என்னோமோ பண்ணிதொலைங்கடா.. என்மனைவி .. “ வாக்கோவர்”.. இவனுககிட்ட பேசிப் பிரயோஜனமில்லைன்னு....
நான் கொஞ்சம் அவசரக் குடுக்கை.. ஏண்டா சமையல் பண்ணி .. பழக்கம் இருக்கா..என்ன ஸ்வீட்டுன்னு கேட்டு வெச்சேன்..
அப்பா உங்களுக்கு தெரியாது ..நானும் அண்ணாவும் வெளி நாட்ல சொந்தமா சமையல் பண்ணி சாப்டுவோம் வார லீவு அன்னிக்கி.. ஸ்வீட் பண்ணறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லே.. யூ டுயூபில ரெசிப்பி எல்லாம் இருக்கு.. பாத்து பண்ணிடுவோம்... பாதாம் அல்வா பண்ணப் போறோம்னு பதில் வந்தது சின்ன பிள்ளைகிட்டேந்து..
தீபாவளிக்கி ரெண்டு நாளைக்கி முன்னால ..யூ டியூப பாத்து தேவையான சாமானெல்லாம் வாங்கிண்டு வந்தாங்க ரெண்டு பேரும்.. பாதாம் பருப்ப ஊற வெச்சு ..தீபாவளிக்கி முதல் நாள் ..மிக்சியில அரைச்சு எடுத்து வெச்சு .. நாங்க பாதாம் அல்வா இப்போ பண்ணப் போறோம்னு .. கிட்சென்லேந்து அறிவிப்பு.. வேற..
என் மனைவி ..நான் பக்கத்து வீட்டு மாமி கூட “போத்திசுக்கு” போயிட்டு வரேன்னு ..நழுவியாச்சு ..இவனுங்க அடிக்கற கூத்தப் பாக்க வேண்டாம்னு ...நினைக்கிறேன்..
மாட்டிண்டவன் நான்தான்....ஒரு பதினைஞ்சு இருபது நிமிஷத்துக்கு அப்புறம் நல்ல நெய் வாசனை கிட்சன்லேந்து.. சரி என்ன நடக்கரதுன்னு எட்டிப் பாத்தேன்.. ஒரு பெரிய “கலாய்” அடுப்பு மேல.. அதுக்குள்ளே ப்ரவுனும் இல்லாம மஞ்சளும் இல்லாம “ வஸ்த்து” ஒண்ணு....அதை பெரியவன் கரண்டிய வெச்சு ..கிண்டிண்டு.. சின்னவன் லாப் டாப்ப.. கிட்சன் மேடையில வெச்சு .. பெரியவனுக்கு இன்ஸ்ட்ரக்ஷன்.. யூ டுயூப பாத்து.. பாத்து..
சரி நடக்கறது நடக்கற படி நடக்கட்டும்ன்னு நான் .. மரியாதையா வெளியில..
கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்.. சின்னவன் கத்தல்.. டேய் ..என்னடா இது.. உன்ன யாருடா அடுப்ப பெரிசா வெக்கச் சொன்னது.. சின்னதாத்தானே வெக்கசொன்னேன்.. இப்போ பாரு ..அல்வா கெட்டியாப் போயிடுதுன்னு ..
நீ சரியா சொல்லலேன்னு..பெரியவன் கத்தல்..
சரி என்ன ஆச்சுன்னு ..கிட்சனுக்குள்ள எட்டிப் பாத்தா .. “கலாய்யில“ இருந்த அந்த “ வஸ்த்து”.. நல்ல கெட்டியாப் போய் .. கிண்டின்றுந்த கரண்டி ..ஏதோ ஐயனார் கோயில் சூலம் மாதிரி .. அதுக்கு நடுவில குத்திட்டு.. நின்டுருன்தது ...
டேய் கூகிள் பண்ணிப் பாத்து தொலைடா.. கெட்டியாப் போனத சரி பண்றதுக்குன்னு.. பெரியவன் கத்தல்..
ஒண்ணும்....இல்லையேடான்னு சின்னவன் பதில்..
ஏண்டாப்பா.. ஒண்ணு பண்ணுங்களேன்.. இன்னும் கொஞ்சம் நெய்ய விட்டு கிண்டிப் பாருங்களேன்.. நெய் இளக்கும்போது அல்வாவும் இளகிடாதா.. ..என் பங்குக்கு ..ஏதாவது சொல்லணுமே..
ஹ்ம்ம்.. சரி செஞ்சு பாப்போம்.. அரை மனசா.. பெரியவன்.. இன்னும் கொஞ்சம் நெய்ய [ கொஞ்சம் என்ன.. நிறையவே.. ] “கலாய்யில” இருந்த “ வஸ்த்து” தலையில ஊத்தி... பத்து நிமிஷத்தில நெய் நல்லா உருகி... உஹூம்.. “கலாய்யில” இருந்தது .. மொத்த நெய்யையும் “ ஜீரணம் “ பண்ணி ..இன்னும் கொஞ்சம் கெட்டியாப் போச்சு..
அடேடேய்..இப்போ என்னடா பண்றது.. பெரியவன் கவலை.. அதுக்கென்னடா.. பாதாம் அல்வாக்கு பதிலா பாதாம் கேக் பண்ணினதா வெச்சுப்போம்.. கலாய்யில இருக்கறத வெளியில எடு.. சின்னவன் சமாதானம்..
அது கலாய்யில இருந்தது வெளியில வந்தாத்தானே.. பெரியவன் .. கரண்டியாலா அந்த “ வஸ்துவ” சுரண்டி சுரண்டி ..ஒரு பெரிய பிளேட்ல கொட்டினான்.. சின்னதும் பெரிசுமா.. சதுரம் வட்டம் ..டிசைன் டிசைனா.. கொஞ்சம் தூளோட..
“ போத்திசுக்கு “ போன மனைவி திரும்பி வந்து அதை பாத்தபோது தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.. என்னத்தடா பண்ணி நாசம் பண்ணி இருக்கிங்கன்னு ஒரு கத்தல்.. அதுவாமா.. பாதாம் அல்வாக்கு பதிலா.. பாதாம் கேக் பண்ணி இருக்கோம் .. சாப்டுப் பாரேன்னு ஒரு துண்ட எடுத்து ..அம்மாவுக்கு.. எனக்கும் .. வாயில திணிக்காத குறையா.
அடுத்த பத்து பதினைஞ்சு நிமிஷத்துக்கு எனக்கும் என் மனைவிக்கும் பேச்சு வரலே.. வாயில இருந்த அந்த கேக் துண்ட கடிக்கவும் முடியலே .. மெல்லவும் முடியலே.. இருந்தாலும் நெய் சக்கரை பாதாம் எல்லாம் சேந்து நல்ல டேஸ்ட்டாத்தான் இருந்தது..
ஒரு வழியா . தாவாக் கட்டையை அப்பிடியும் இப்பிடியும் அசைச்சு அசைச்சு ..வாயில இருந்தத ஊற வெச்சு முழுங்கி வெச்சோம்.. எனக்கு சின்ன வயசில சாப்பிட்ட “கம்மர்கட் “ ஞாபகம் வந்தது..
நாங்க ரெண்டு பெரும் பொங்கலுக்கு வரப் போறோம்.. சக்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் நாங்கதான் பண்ணப் போறோம்.. ...சின்னவன் ..இது அறிவிப்பா ..இல்லே மிரட்டலான்னு எனக்குத் தெரியலே.. இவனுக பொங்கல் பண்ணப் போறத நினைச்சா இப்பவே எனக்கு அடி வயத்தில “பகீர்” ங்கறது..
நீங்க இதுக்கு முன்னால “கம்மர்கட்” பாதாம் கேக் சாப்டிருகிங்களா .....இல்லையா.. என்ன செய்யறது..உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை..
டி வி கே