பனச்சிக் காடு

praveen

Life is a dream
Staff member
30 அடி பள்ளத்தில் இருக்கும் உலகின் ஒரே அழகான பசுமை கோவில் பனச்சிக் காடு.

பனச்சிக் காடு எனும் தளம் சரஸ்வதி தேவிக்கான திருத்தலம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம், கேரளம் உட்பட பிற மாநிலங்களிலிருந்தும் வருகை தருகிறார்கள். இந்த கோவில் எங்கு அமைந்துள்ளது இங்கு எப்படி செல்லலாம் என்பது பற்றி பார்க்கலாம்.: கேரளத்தின் மிகச் சிறந்த கோவில்களில் இது ஒன்றாகும். மேலும் அரிதாக காணப்படும் சரஸ்வதி கோவிலும் இதுதான். கேரளத்தில் அவ்வளவாக சரஸ்வதி கோவில்கள் இதுமாதிரி கட்டப்பட்டிருப்பதில்லை. மேலும் இங்கு இருக்கும் சரஸ்வதி சுயம்பு வடிவில் இருப்பார். அதுவும் சிறப்பு.சரஸ்வதி பூசையின் போது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு பஞ்சாமிர்தம், பால்பாயாசம் செய்து படைத்து வழிபடுகிறார்கள். துர்க்காஷ்டமி, மகாநவமி சரஸ்வதி பூசை நாட்களில் இந்த கோவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு வந்து வழிபட்டால் படிப்பில் மேலோங்கி நிற்கலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

இந்த கோவில் காலை 5.30 மணிக்கு திறக்கப்படும். காலையில் 9.30 மணி வரை திறந்திருக்கும் இந்த கோவிலின் நடை அதன் பின் அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். பக்தர்கள் வழிபட்டு முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.குழந்தை பிறக்கவும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் குணமடைவதற்கு இங்கு வருகிறார்கள். பாட்டு இசை நாட்டியம் போன்ற கலைகள் இங்கேயே கற்றுக்கொள்ள தொடங்கப்படுகின்றன.

தாங்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு வேண்டியதை நிறைவேற்றிக்கொடுத்தால் சரஸ்வதிக்கு தாங்கள் வேண்டிக்கொண்ட பொருள்களை படைத்து வழிபடுகிறார்கள். இன்னதுதான் செய்தாகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.தங்கள் வசதிக்கு ஏற்ப எந்த விதமான பொருள்களையும் படைக்கலாம் என்பது இந்த தலத்தின் விதி.பனச்சிகாடு எனும் சாந்தம் வழியும் அழகிய கிராமம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது கோட்டயத்திற்கும் சங்கணாச்சேரிக்கும் இடையே உள்ள பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது.

கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள பனச்சிகாடு கிராமம் இங்குள்ள சரஸ்வதி கோயிலுக்கு புகழ் பெற்றுள்ளது. தக்ஷிண மூகாம்பிகை கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது.

வருடமுழுவதுமே இக்கோயிலில் பூஜைகள் நடத்தப்படுவது இதன் சிறப்பம்சமாகும். அதுமட்டுமல்லாமல் இக்கிராமத்தை சுற்றிலும் ரம்மியமான இயற்கைக்காட்சிகள் நிறைந்திருப்பதால் ஒரு சுற்றுலாத்தலமாகவும் இது பிரசித்தி பெற்றுவிட்டது.இயற்கையின் மடியில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள விரும்பும் ரசிகர்கள் இந்த கிராமத்தை தேடி விஜயம் செய்கின்றனர். அவர்களை ஏமாற்றாமல் உணர்வுகளை லேசாக்கி ஊர் திரும்ப வைக்கும் சௌந்தர்யத்தை இந்த எளிமையான கிராமம் தன்னுள் கொண்டுள்ளது.
 
I have visited this temple and meditated there for some time. I experienced great peace and joy. Eventhough it is a well known temple, there is very less crowd if you visit it on days other than Friday and Sunday. The book "Ithihyamala" (in malayalam) by Kottarathil Sankunni, gives many legends about the power of this Saraswati devi.
 
This temple is situate right on the MC Road (Main Central Road) that goes through Changanachery and Kottayam. This info is for those who want to visit the tekmple.
 
Back
Top