• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

படியுங்கள் ? பகிருங்கள்

Status
Not open for further replies.
படியுங்கள் ? பகிருங்கள்

பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித ? மணம் கொண்ட ? மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும்மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று என்று நினைக்கும்

பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள்மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .அதன்பின்பு அந்தக்கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.
முக்கியம்
இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்மிகமுக்கியம்
நீ நல்லவனா கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுதிதவள் உன் தாய்
எத்துனை ஜன்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கமுடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே

எத்தனையோ
கஷ்டங்கள்
நஷ்டங்கள்
துன்பங்கள்
துயரங்கள்
அசிங்கங்கள்
அவமானங்கள்
கடந்த பிறகும் ஒன்ருமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொன்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை ❗

நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள். அவர்களை கண் போன்று பாதுகாப்போம். :pray::pray::pray::pray::pray::pray:

Bhanu Venkatraman
 
Status
Not open for further replies.
Back
Top