பஞ்சாஷத்-பீட-ரூபிணீ பஞ்சபூதேஸ்வரி நீலாயதாக்ஷி பஞ்சாக்க்ஷரன் நாயகி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி ஶ்ரீ லலிதே
வானின் வண்ணநிலவு வெட்கியது நின்னழகில் ஆதவனும் தயங்கினான் நின்னருட் ப்ரகாசமதில்
நெஞ்சமதில் வாசமிட்டு நீரூற்றாய் குளிரவைக்கும் பஞ்சபூதமும் தஞ்சமடையும் கருணாகடாக்ஷி காமாக்ஷி
கார் கொண்டு நீர் பொழிந்து தாகம் தீர்த்தாய் உன் பேர் சொல்லி நின் புகழ் பாடச் செய்தாய்
ஆதியாய் பராசக்தியாய் அண்டமெலாம் சக்தி தந்தாய் பாதியிலும் பேர் பெற்று பாரெங்கும் போற்ற வைத்தாய்
உயிர் காற்றில் உன்னாமம் சொல்லவைத்தாய் பயிர் வளர்த்து உணவாக்கி பசி தீர்த்தாய்
புவியதனில் பிறந்தோர் புண்ணியம் கிட்ட புவனேஸ்வரி புகலிடமேது நின்னடி நிழலன்றி
பஞ்சவக்த்ராஸ்தி ஸம்ஸ்திதா பரப்ரம்ஹ ஸ்வரூபிணி பஞ்சாஷத்-பீட-ரூபிணீ பஞ்சபூதேஸ்வரி நீலாயதாக்ஷி வஞ்சகனும் நலமுற வாழ வைப்பாய் வேண்டினமே
40/2020 நாகை ராமஸ்வாமி