• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

நான் அவர் இல்லை!

Status
Not open for further replies.
நான் அவர் இல்லை!

நான் அவர் இல்லை!



ஜெ
யராஜ். இயக்குநர் பாரதிராஜாவின் உடன் பிறந்த தம்பி. முக ஒற்றுமை மட்டுமல்ல, புதிதாக போனில் பேசுவோர்கூட ஜெயராஜை பாரதிராஜா என்றே எண்ணுவார்கள். 'கல்லுக்குள் ஈரம்’ படத்தில் பாரதிராஜா கதாநாயகனாகவே நடித்த காலங்களிலும் சினிமாவில் ஒரு ஃப்ரேமில்கூட முகம் காட்டாத ஜெயராஜ், இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

p52.jpg
''பாரதிராஜா சினிமாவுக்கு வரும்போதே நீங்களும் கூடவே வந்துட்டீங்கள்ல?''

''1960-ல் இருந்து 70 வரை நான் மிலிட்டரியில் இருந்தேன். அப்புறம் சென்னை வந்து அரசு அச்சகத்தில் வேலை பார்த்தேன். பல போராட்டங்களுக்குப் பிறகு அண்ணன், 'பதினாறு வயதினிலே’ ஹிட் கொடுத்து கிழக்கே போகும் ரயிலில் கலக்கி எடுத்தபோது நான் வேலையில்தான் இருந்தேன். 'சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ஆரம்பிச்சப்போ அதோட புரொடியூசர் கே.ஆர்.ஜி. சார்தான், 'நீயும் சினிமாவுக்கு வாய்யா... புரொடக்ஷன் பாத்துக்கலாம்’ னு சொல்லி சினிமாவுக்குக் கொண்டுவந்தார். அப்புறம் அண்ணன் கூடவே இருந்துட்டேன்.''


p52a.jpg



''நீங்க டைரக்ஷன், தயாரிப்புனு அடுத்த கட்டத்துக்குப் போகலையா?''


''அண்ணன் இயக்கிய 'நிழல்கள்’, 'காதல் ஓவியம்’ படங்களின் இணைத் தயாரிப்பாளரா இருந்தேன். அவரோட இயக்கத்தில் உருவான 'என் உயிர்த் தோழன்’ படத்தின் தயாரிப்பாளர் நான்தான். ராமராஜனின் இரண்டாவது படமான 'மருதாணி’, பானுப்ரியா தமிழில் அறிமுகமான 'மெல்லப் பேசுங்கள்’ படங்கள் நான் தயாரிச்சதுதான். எல்லா படங்களும் நல்ல பெயர் வாங்கிய படங்கள். அதுக்கு அப்புறம் தயாரிப்பில் ஈடுபடலை.''


''ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள், சூப்பர் ஹீரோ, ஹீரோயின்கள்னு எத்தனையோ பேரை உருவாக்கியவர் உங்க அண்ணன். அப்பவே அவர் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி இருந்திருக்கலாமே?''



''அப்போ எல்லாம் எனக்கு நடிக்கணும்னு எண்ணமே இல்ல. அவருக்கும் அந்த எண்ணம் வரலை. ரெண்டு மூணு வருஷம் முன்னாடி சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டப்போகூட முடியாதுனுதான் சொன்னேன்.''


''அப்புறம் எப்படி திடீர்னு நடிகர் ஆனீங்க?''


'' 'கத்துக்குட்டி’ படத்தோட டைரக்டர் சரவணன் என்கிட்டே வந்து, 'படத்துல ஹீரோ நரேனுக்கு அப்பாவா நீங்க நடிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னார். தவிர அண்ணன் இப்போ படங்கள்ல நடிக்கிறார். அவர்கிட்டே போறதுக்குப் பதிலா நம்மகிட்டே வந்துட்டாரோன்னு தோணுச்சு. ஆனா அவர் 'இது ஓர் அப்பாவித்தனமான கேரக்டர். பாரதிராஜா சாருக்குனு ஓர் இமேஜ் இருக்கு. நான் உங்களைத் தேடித்தான் வந்தேன்’னு சொன்னார். அப்போதான் எனக்கு சீரியஸ்னஸே வந்தது.


அடுத்து 'மூச்’ படத்தோட டைரக்டர் வினுபாரதி, அண்ணன்கிட்ட அசிஸ்டென்டா இருந்தவர். அவர் வந்து கேட்கும்போது மறுக்க முடியலை. 'மூச்’ படத்துல பேய்கிட்ட மாட்டிக்கிட்டு சாகிறசைக்கியாட்ரிஸ்ட்டா நடிக்கிறேன். தவிர மேற்கொண்டு ரெண்டு மூணு டைரக்டர்ஸ் பேசி இருக்காங்க. நான் இன்னும் இன்னும் கதை கேட்கலை.''
p52aa.jpg


''நீங்க நடிக்கிறது பத்தி பாரதிராஜா என்ன சொன்னார்?''


''அண்ணன்கிட்ட விஷயத்தை சொன்ன உடனே, 'ம்ம்ம்ம்... தாராளமா நடி’னு சொன்னார். ’'


''இப்போ பாரதிராஜா நடிகராவும் ஆகிட்டார். அவரும் நீங்களும் சேர்ந்து நடிப்பீங்களா?''



''அப்படி ஒரு கதை அமையணும். அதுல நடிக்க அவர் சம்மதிக்கணும். அவர் தம்பியா நடிக்கிற வாய்ப்பு எனக்கு வரணும். அப்படி நடந்தா கண்டிப்பா நடிப்பேன். கரும்பு தின்னக் கசக்குமா என்ன?''



????? ???? ?????!? - ???????? - 2014-08-16
 
Status
Not open for further replies.
Back
Top