• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

நாட்டில் பல இடங்களில் மதத்தையும் தாண்டி

Status
Not open for further replies.
நாட்டில் பல இடங்களில் மதத்தையும் தாண்டி

நாட்டில் பல இடங்களில் மதத்தையும் தாண்டி மனிதம் வாழ்கிறது.

விநாயகர் கோயிலில் பிறந்த இஸ்லாமிய குழந்தை: 'கணேஷ்' என பெயர் சூட்டிய பெற்றோர்!


மும்பையை சேர்ந்தவர் நூர்ஜகான். அதிகாலை நான்கரை மணியளவில் பிரசவ வலியால் துடித்த இவர், தன் கணவர் இலியாஸ் ஷேக்கை எழுப்பியுள்ளார். உடனடியாக, மருத்துவமனைக்கு செல்ல டாக்சியை பிடித்துள்ளார் இலியாஸ்.

குறுகலான சந்துக்கள் நிறைந்த அப்பகுதியில் டாக்சி ஓட்டுனரால் வேகமாக செல்ல முடியவில்லை. நூர்ஜகானுக்கு பிரசவ வலி அதிகமாக, பயந்து போன டாக்சி ஓட்டுனர், இருவரையும் நடு ரோட்டில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். என்ன செய்வதென்று புரியாமல் தவித்த இலியாஸ், அருகில் இருந்த விநாயகர் கோயிலில் நூர்ஜகானை அமர வைத்துவிட்டு, மற்றொரு டாக்சியை பிடிக்கச் சென்றுள்ளார்.



ganesh_vc1.jpg


பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த நூர்ஜகானை கண்ட அங்கிருந்த பெண்கள், உடனடியாக அவரை விநாயகர் கோயிலின் உள்ளே அழைத்துச்சென்று, அருகிலிருந்த வீடுகளில் இருந்து சேலை மற்றும் படுக்கை விரிப்புகளை கொண்டுவந்து சுற்றி, அந்த இடத்தை பிரசவ அறையாக மாற்றினர்.

மூதாட்டிகள் பிரசவம் பார்க்க, சில நிமிடங்களில் அழகிய ஆண் குழந்தையின் அழுகை சத்தம் கோயிலை சூழ்ந்தது. பின்பு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாயையும், குழந்தையையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் நலமாக உள்ளதாக கூறினர்.

“நான், ‘நடுரோட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்து விடுவேனோ’ என்று பயந்துவிட்டேன். ஆனால் அருகில் இருந்து விநாயகர் கோயிலை கண்டவுடன், கடவுளே என்னுடன் இருப்பதை உணர்ந்து தைரியமானேன்” என்று கூறியுள்ளார் நூர்ஜகான்.

“நாங்கள் என்ன செய்வதென்று புரியாமல் நடுரோட்டில் நின்று கொண்டிருந்த போதுதான், நான் அருகில் இருந்த விநாயகர் கோயிலை கண்டேன். நாங்கள் கோயில் அருகில் சென்ற போது, நாங்கள் அழைக்காமலே, அங்கிருந்த பெண்கள் ஓடி வந்து எங்களுக்கு உதவினர்” என்றார் குழந்தையின் தந்தை இலியாஸ்.

தங்களின் அன்புக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் இலியாஸும், நூர்ஜகானும், அவனுக்கு 'கணேஷ்' என்று பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளனர்.

நாட்டில் பல இடங்களில் மதத்தையும் தாண்டி மனிதம் வாழ்கிறது.

ஜெ. விக்னேஷ்

http://www.vikatan.com/news/article.php?aid=53320

 
நாட்டில் பல இடங்களில், மதத்தையும் தாண்டி 'கணேஷ்' ள்ளார் .
 
Status
Not open for further replies.
Back
Top