நாச்சியார் திருமொழி

நாச்சியார் திருமொழி

நாச்சியார் திருமொழி


பாசுரம் : 5 :-


வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி


கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது, ஒப்ப - 4


ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்


மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய், மன்மதனே! - 8.


விளக்கம் :-


மன்மதனே! தேவருலகில் இருக்கும் சிறந்த பிறப்புடைய தேவர்களுக்காக, இங்குள்ள பிராமணர்கள் தம்முடைய யாகங்களிலே உண்டாக்கிய அவி உணவை, காட்டிலே திரியும் நரியானது புகுந்து அதைத் தனதாக்கிக் கொள்வதையும் வாசனை மோப்பதையும் செய்யும் (வரி 1-4).


அதைப்போல, தம் திருமேனியிலே திருவாழியையும், திருச்சங்கையும் - திருக்கரங்களிலே உடைய புருஷோத்தமனுக்காக என்றே உடையவே என்னுடைய தனங்கள். அவை மனிதர்களுக்கு என்ற பேச்சு உண்டானால், நான் உயிர் வாழ மாட்டேன் என்கிறாள் தாயார் (வரி 5-8).
 
Back
Top